இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் வீரமணியவர்கள், சமூகநீதி உரிமையின் இரண்டாம் கட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் குறித்துச் சொன்னார், அதற்கான அமைப்பையும், இயக்கத்தையும், தலைமையேற்று நடத்த முன்வர அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியிருப்பதன் மூலம் மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கையை நீங்கள் அமல்படுத்தி இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறீர்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவருடைய வழிகாட்டலில், நாடு நழுவிய வகையில் நடத்தப்பெறும் சமூகநீதிக்கான இரண்டாம் கட்டப் போராட்டம் உறுதியாக வெற்றிபெறும் என்பதில் அய்யம் இல்லை.
- 1.10.1994 சென்னை திராவிடர் கழக சமூக நீதி மாநாட்டில், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் ஆற்றிய உரையின் பகுதி விடுதலை 3.10.94.
***
இங்கே பேசிய வீரமணி அவர்கள் என்னை மிகவும் பாராட்டிப் பேசினார். அவரது கருத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்; காரணம், அவர் அரசியல் அதிகாரத்துக்குப் போகக்கூடியவர் அல்லர்; சமூக நீதிக்காக உண்மையாகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர், பதவிக்குப் போகாமல் பெரியார் கொள்கைக்காகப் போராடுகிறவர், எனவே அவரது கருத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.
- முன்னாள் பிரதமர் வி.பி.சிங்
(சென்னை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், 12.9.1992)
No comments:
Post a Comment