வான் மதியே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

வான் மதியே!


வெண்தாடி வேந்தரின்


மறைவால்


வெறிச் சோடிய


தமிழ் மண்ணில்


விளக்கேற்ற


வந்ததொரு


வான்மதியே!


பத்து வயதிலேயே


பற்றற்று


பெரியாரெனும்


உலைக்களத்தில்


விழுந்து


வேலும் வாளுமாய்


வெளிவந்த


வீரமணியே!


உடலிலும்


உள்ளத்திலும்


உயிர் குடிக்கும்


காயங்கள்தான்


எத்தனை


எத்தனை!


என்றாலும்


மீண்டும் மீண்டு


‘விட்டேனா பார்!'


என்று


வெறிகொண்ட


வேதியத்தை


வீழ்த்திடும்


வெடிமருந்தாம்


‘விடுதலை'ப் போரே!


சமூகநீதியின்


கழுத்தறுப்பார்


மென்னியைப்


பிடித்தறுக்கும் - எதிலும்


‘‘பிடிபடாத''


கொள்கைச்


செங்கோலின்


கைப்பிடியே!


பெரியார்தம்


கைத்தடியே!


பெரியார்


பணி முடிக்க


உயிரைச்


சேமித்து வைக்கும்


உம் வழியே


எம் வழி


வாழிய நீடே!


 - கவிஞர் கலி.பூங்குன்றன்


No comments:

Post a Comment