பெரியாரின் கொள்கை என்னும் பெருநெருப்பை அணையாமல் ஏந்தி வீரமணி சென்னையில் ஒரு நாயகன் போல நடமாடுகிறார்.
நான் சென்னைக்கு வரும் வரை, பெரியார் என்பது ஒரு பெயர் என்ற அளவிலேயே நான் அறிந்திருந்தேன். வீரமணியின் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு மாபெரும் உள் நாட்டுப் புரட்சியின் மய்யமாக வீரமணி விளங்கி வந்துள்ளார். சுதந்திரத்திற்குப் பின் இந்தியா பெற்றுள்ள மகத்தான பொருளாதார அறிவியல் வளர்ச்சிக்குப் பின்னும், இப்புரட்சி ஒரு சிறு போரின் குணநலன்களைப் பெற்றிருந்தது. இதுவரை வீரமணி வெற்றி பெற்ற பக்கமே இருந்துவந்துள்ளார்.
- நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வி.எஸ். நைல்பால்
ஈர்ப்பு நாயகன் - வீரமணி
வீட்டிலேயும், வெளியேயும் சமூக சீர்திருத்தம் பேசும் ஒவ்வொருவருக்கும் ஈர்ப்பு நாயகனாக கி.வீரமணி மட்டுமே அமைவார். அதிகார வர்க்கத்தைப் பொறுத்தவரை மிக அரிதாக அறியப்படும் இந்த சமுதாயப் பணியாளர், அறியாமை இருளிலிருந்து மக்களை விடுவிக்க, பெரியா பாணியில் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவர். வளர்ச்சியின் பயன்களை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் சமமாகப் பெறும் உரிமை வேண்டும் என முழங்குபவர் வீரமணி. வாரிசு முறை, ஜாதி அடிப்படையிலான நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்து, சம சமுதாயத்தை நிலைநாட்ட வேண்டுமென்பது இவரது உன்னத நிலைப்பாடு.
- (தெலுங்கு நாளேடான ஆந்திர பிரபாவின 2.2.2003ஆம் நாள் ஞாயிறு மலரில்.)
No comments:
Post a Comment