பணித் தோழர்கள் பார்வையில் தமிழர் தலைவர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

பணித் தோழர்கள் பார்வையில் தமிழர் தலைவர்


தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளையொட்டி (டிச. 2) சென்னை பெரியார் திடல் பணித் தோழர்கள் பார்வையில் தமிழர் தலைவர் என்னும் தலைப்பில் 2.12.2020 அன்று வெளியானதன் தொடர்ச்சி...


திராவிட இயக்கம் என்னும் ஆயிரம் கால் மண்டபத்தின் நவீன நக்கீரர்


- நூலகர் கி.கோவிந்தன்


சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த தன்னை வழி மொழியவோ, ஆதரிக்கவோ, எந்தத் தலைவரோ, சீமானோ இல்லாமல், நிஜமாகவே ஒரு சாமானியன் இந்த நிலையை அடைய எந்த அளவுக்கு எதிர்நீச்சல் போட் டிருக்க வேண்டும் வெற்றியை அடைவதென்றால் எத் தனை திறமைகள் அவரிடம் இருந்திருக்க வேண்டும்.


தந்தை பெரியாருக்கு மாணவராய், ஆம்! எழுத்து துறையில் (விடுதலை இதழ் பணி) 58 ஆண்டுகளாக முதுமையுடன் இணைந்த உடல் நலத்துடன் சுழன்ற படியே நாள் தவறினாலும், எழுதுவது தவறாது என்று தனது பேனாவுக்கு ஓய்வே கொடுக்காத இயல்பும் அன்று முதல் இன்று வரை அயராத உழைப்பும், ஆசிரியர் அவர்களுக்கே உரிய தனித்துவம்.


பொதுவாழ்வில் 88 ஆண்டு கால தனது பொதுவாழ்வில்


76 ஆண்டு கால சமூகப் பணி,


58 ஆண்டு கால எழுத்துப்பணி - இதழ் பணி


42 ஆண்டு கால ஒரு சமூக இயக்கத்தின் தலைவர்


56 முறை சிறை சென்றவர், சமூகநீதிக்காக 25 மாநாடுகளையும்


16 அறப்போராட்டங்களையும் நடத்தி 198 வடநாட்டு தலைவர்களையும் சந்தித்து வெற்றிப் பெற 31சி சட்டத்தை இயக்கி அதனை இந்திய அரசமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணையில்வைக்க ஏற்பாடு செய்தவர்.


இத்தகைய பெருமைக்குரியவர் தமிழகம் மட்டுமல்ல. இந்திய துணைக் கண்டத்திலும் எவரும் இல்லை, ஏன் உலக அரங்கில் எவரும் இல்லை.


இவரின் சமூகநீதி செயல்பாடுகளை வி.பி.சிங் பாராட் டுகிறார், இவரின் மனிதநேயத்தை தவத்திரு குன்றக்குடி ஆதினப் பெரிய சுவாமிகள் பாராட்டுகிறார். திமுக தலை வர் கலைஞர் பாராட்டினார்.


தந்தை பெரியாருக்கு பிறகு தொடர்ச்சியாக, எவருக்கும் அஞ்சாமல் நடுநிலையோடு கருத்துரைக்கும் தமிழினத்தின் "நவீன நக்கீரர்" ஆசிரியர் வீரமணி அவர்கள்.


உலகத்தில் எவராலும் சேர்த்து வைக்க முடியாத அறிவுச் செல்வங்களான 103 ஆண்டுக்கால இதழ்களையும், நூல்களையும் பெரியார் ஆய்வு நூலகத்தில் சேர்த்து வைத்து, தந்தை பெரியார் அவர்கள்,  அன்னை மணியம்மையாருக்கு பிறகு எவரா லும் அழித்து விடமுடியாதபடியாக விடுதலை, குடிஅரசு, திராவிடன், புரட்சி பகுத்தறிவு, Revolt, Justice, The Modern Rationalist, உண்மை உள்ளிட்ட திராவிடர் இயக்க இதழ்கள் எண்ணரிய புத்தகங்கள், அவற்றை எல்லாம் இணையத்தில் ஏற்றுவதற்கு திட்டம் வகுத்த "திருமூலர்".


எனவே, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல்லாண்டு பல்லாண்டுகாலம் வாழ்ந்து இந்த தமிழ் சமுதாயத்திற்கும் திராவிட இனத்திற்கும் வழிகாட்ட வேண்டும் என்று அன்புடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.


பணித்தோழர்களை அரவணைக்கும் தாய்க்கோழி தமிழர் தலைவர்!


சோ.சுரேஷ், தலைமை நிலையம்


கரோனா எனும் கொடிய தொற்று சூழ்ந்திருக்கும் காலத்திலும் தேவையான நோய் தடுப்பு  பாதுகாப்புடன்   பெரியார் திடலுக்கு வருகை புரிந்திருந்தார். எப்பொழுதும் நீண்ட நாட்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டு சுற்றுப்பய ணமோ சென்று திரும்பியிருந்தால்  வந்த கையுடன் பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியாரின் நினைவிடம் மற்றும் அலுவலுகங்களை பார்வையிடுவது வழமையான ஒன்றாக கடைப்பிடித்து வருகிறார் ஆசிரியர் அய்யா அவர்கள்.  வழமையை மாற்றாமல் அன்றைய தினமும் அவ்வாறே தந்தையின் நினைவிடம் நோக்கி  சென்று திரும்பும் போது நினைவிடத்தை பராமரிக்கும் மகளிர் பணித்தோழர்கள் அய்யாவைக் கண்டவுடன் புன்னகையுடன் வணக்கம் கூறினர்.  மறுகணம் அய்யாவும் அவர்களிடம் பரஸ்பரம் வணக்கம் சொல்லி “ எப்டிம்மா இருக்கீங்க? எல்லாரும் நல்லா இருக்கீங்களா?" என்று கேட்ட பொழுதே அவர்க ளின் முகத்தில் முகக்கவசம் இல்லாததை பார்த்த தலை வர், "எங்கம்மா முகக்கவசம்? கரோனா இரண்டாவது அலை இனிமேல் தான் வரும் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகளில் சொல்லி வருகிறார்கள் ஆனால் நீங்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கிறீர்களே?" என்று கேட்டுவிட்டு மகளிர் பணித்தோழர்களிடம் உங் களுக்கு முகக்கவசம் கொடுக்கப்பட்டாதா? என்றவுடன் அவர்கள் இருக்கிறது அய்யா என்று கூறி முகக்கவசம் அணிந்து கொண்டார்கள். சக மனிதனை சக மனிதனாக மதிக்க வேண்டும் என்று தந்தை பெரியாரிடம் படித்த வாழ்நாள் மாணவர் தமிழர் தலைவர் என்பதை அந்த தருணத்தில் எங்களுக்கு உணர்த்தினார். எனவே தான் அவர் பணித்தோழர்களை அரவணைப்பதில் தாய்க் கோழியாக திகழ்கிறார். 


ஆசிரியர் அய்யா அவர்களுக்கு இயக்கப்பிரச்சார சுற்றுப்பயணங்களுக்காக வெளியூர் செல்லும் போதும், பயணம் முடிந்து சென்னை வந்தடையும் போதும் அவரை வழியனுப்புவதற்காகவும், வரவேற்பதற்காகவும் ரயிலடி செல்வது வாடிக்கையான ஒன்றாகும். அது போலவே ஆசிரியர் அய்யா அவர்கள் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் கழகத் தோழர்கள் மற்றும் பெங்களூர் வாழ் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி யில் பங்கேற்று விட்டு  சென்னை திரும்புவதற்காக பெங் களூர் - சென்னை மெயிலில் வந்தார். மெயில் அதிகாலை சுமார் 4.50 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பெரியார் திடல் மேலாளரு டன் நானும் தோழர்களும் விரைந்து சென்று அய்யாவை வரவேற்று அய்யாவின் வாகனத்தினை வந்தடைந்தோம். எப்பொழுதும் விடுதலை நாளிதழையே தன்னுடைய உயிர் மூச்சாக சுவாசித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்கள் வெளியூர் சென்று திரும்பினால் உடனடியாக, அது எந்நேரமாக இருந்தாலும் முதலில் விடுதலையை படித்து விட்டே அடுத்த வேலையை தொடங்குவார். அன்றைய தினம் அதே போன்றே வாகனத்தில் அமர்ந்தவுடன் அவரிடம் நான் விடுதலையை கொடுத்து விட்டு சற்று நகர்ந்தேன். நான் நகர்ந்த அடுத்த கணமே அய்யா அவர்கள் யாரு பேப்பர குடுத்தது என்று கேட்டார்? ஓட்டுனரும் இறங்கி வந்து என்னிடம் பழைய பேப்பரை கொண்டு வந்துட்டீங்களா என்றார்? இல் லையே என்றேன். மீண்டும் ஒரு முறை ஆசிரியர் சற்று அழுத்தமாக கோபமாக கேட்டார்கள், யாரு பேப்பர எடுத்துட்டு வந்தது என்று! இம்முறை நாந்தாங்கய்யா என்றேன். அய்யா ஏன் பழைய பேப்பர எடுத்துட்டு வந்த என்று சொல்லி விட்டு கோபமாக பார்த்தார். உடனடியாக வாகனம் நகரத்தொடங்கியது. வாகனம் சென்றவுடன் மேலாளர் என்னிடம் ஏங்க பேப்பர தேதிய பார்த்துட்டு எடுத்துட்டு வரவேணாமா என்றார்? நான், சார் சரியா பாத்துட்டுதான் எடுத்து வந்தேன் சார் அது நேத்து பேப்பர் தான் என்றேன்.. சரிவிடுங்க இனிமே கவனமா இருக்கங்க அய்யா ரொம்ப கோபப்படுவார் என்றார். நானும் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு திடலை வந்தடைந்தோம். காலை 9 மணி இருக்கும் மேலாளருக்கு அய்யா அவர்கள் செல்பேசியில் தொடர்புகொண்டு ஏங்க காலைல ரயில்வே ஸ்டேசன்ல அந்த பையன் விடுதலை பேப்பர சரியாத்தான் கொடுத்திருக்கிறார் ஆனா நான் தான் தவறுதலாக பார்த்து விட்டு அவரிடம் கடிந்து கொண்டேன். பின்னர் என்னுடன் வந்திருந்த அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குனர் சோம.இளங்கோவன் தான், அய்யா இது சரியான தேதி தான் என்றார். (விடுதலை நாளிதழ் மாலை பதிப்பு என்பதால் இரண்டு தேதிகள் இடம் பெற்றிருக்கும் )  அதன் பிறகு தான் நானும் நாம் தான் சரியாக பார்க்க வில்லை என்று ஆதங்கப்பட்டு மேலாளரிடம் அந்தப் பையனிடம்  கோபமாக பேசியதற்கு நான் வருத்தப்பட் டேன் என்று சொல்லுங்கள் என்று மேலாளரிடம் சொல்லி யிருக்கிறார். பின்னர் மேலாளர் என்னை அழைத்து நடந்ததை சொன்னார். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும் வாங்க போங்க என்று மரியாதையுடன் அழைப்பாரோ அதைப்போன்ற அவரின் வாழ்நாள் மாணவரான ஆசிரியரும் இருப்பதை என் கண் முன்னே நடந்த சம்பவம் உணர்த்தியது... வாழ்க.. வாழ்க.. வாழ் கவே தமிழர் தலைவர் வாழ்கவே!


தமிழர் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


- சி தமிழ்ச்செல்வன், ஓட்டுநர், திருச்சி


88 - ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நம் தமிழர் தலைவர் உலகத் தலைவர்களில் ஒப்பற்ற தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மிக நெருக்கடியான காலகட்டத்தில் ஒரு தலைவர் எப்படி எல்லாம் இயக்கத்தையும் இன எதிரிகளிடமிருந்து நம் மக்களை பாதுகாத்து வர வேண்டிய மிகப்பெரிய கடமையும் உரிமையும் உள்ள ஒரு தலைவருக்கு பிறந்த நாள் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு தலைவருக்கு எத்தனை எத்தனை சோதனைகள் வரலாம். எப்படிப்பட்ட சோதனையும் வரலாம். ஆனால் கிட்டத்தட்ட 9 மாதங்களாக முடங்கிய போதும் மிகத் துணிச்சலாக காணொலி மூலமும் பல நிலைகளிலும் இயக்கப் பணிகளை ஆரம்பித்து தொடர்ந்து விடா முயற்சியால் பணியாற்றும் நம் தமிழர் தலைவர் அய்யா அவர்களை நெஞ்சார பாராட்டுவதோடு இன எதிரிகளின் வரம்பு மீறிய செயல்களுக்கும் நாம் கொஞ்சமும் தளராமல் செயல்பட வேண்டிய சூழ்நிலையில் நம் தோழர்கள் இடைவிடாது தொடர்பு கொண்டு செயலாற் றும் காலம் நமக்கு.


சோதனைக்காலம் தலைவர்களுக்கும் தொண்டர் களுக்கும் ஒரு சோதனை காலம் தொண்டர்கள் தலை வரை சோதனை செய்ய வந்ததாக கரோனா தலைவரை சோதனை செய்ய வந்ததா என்று நினைக்கும் அளவுக்கு நமக்கெல்லாம் இது ஒரு சோதனை சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம் என்று எடுத்துக் கொண்டு பெரியாரின் கொள்கையை தூக்கி பிடிப்போம், துவளாது செயலாற்றுவோம் என்று நாம் தமிழர் தலைவரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம். நன்றி வணக்கம்!


அய்யா பெரியார் அருளிய அருட்கொடையே!


- சைதை மு.ந.மதியழகன்


பெரியார் திடலில் உள்ள புத்தகம் வெளியீட்டுப் பிரிவில் (பப்ளிகேசன்) பணிபுரியும் தோழர்களில் நானும் ஒரு உதவியாளனாக இருப்பதால் ஆசிரியர் அய்யா அவர்களை அவ்வப்போது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஒருமுறை கடிதம் சந்தித்த துரோகங்கள் குறித்துக் குறிப்பிட்ட ஆசிரியர் அய்யா அவர்கள் "இப்படிப்பட்ட துரோகங்களை எல்லாம் சந்திக்காமல் இருந்திருந்தால அய்யா அவர்கள் மேலும் பல காலம் வாழ்ந்திருப்பார்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார். ஆசிரியரின் வேதனை மறக்க முடியாத வடுவாக என் உள்ளத்தில் பதிந்துவிட்டது.


அய்யா தந்தை பெரியார் அவர்களுக்கும் ஆசிரிய ருக்குமான உறவு ரத்தமும் சதையும் போலப் பின்னிப் பிணைந்த உறவு என்பதை அது உணர்த்தியது.


ஆசிரியர் அய்யா அவர்கள் மீதும், கழகத்தின் மீதும் - பக்குவப்படாத இளைஞர்கள் சிலர் அவதூறு கடிதம் எழுதி அதை நம் கழகத் தோழர்களிடம் பரப்பினர். அதில் ஒரு கடிதம் எனக்கு வந்தது. அவர்கள் குற்றச் சாட்டு முழுக்க முழுக்க அர்த்தமற்றது என்பதைத் தெளிவுபடுத்தி அந்த நபர்களிடமே கொடுத்தேன். அதில் ஒரு பிரதியை சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பேருரையாளர் அ.இறையனார் அவர்களிடம் கொடுத் தேன். சில நாட்கள் கழித்து இறையனார் அய்யா அவர் கள் என்னை அழைத்தார்.


மதி உங்க கட்டுரையை பயிற்சி முகாமில் தங்கி இருந்த ஆசிரியர் அவர்களிடம் கொடுத்தேன். படித்து விட்டு மிகவும் பாராட்டினார். "எவ்வளவு முறைப்படி அமைந்த என்ன அருமையான கட்டுரை" என வியந்தார். விடுதலை ஞாயிறு மலரில் போடட்டுங்களா என்று கேட்டேன். "வேண்டாம் என்று சொல்லி விட்டார்" என்றார்.


இத்தனைக்கும் அந்த கட்டுரையில் ஆசிரியரைப் புகழ்ந்து எதுவும் இல்லை. தேவையான உண்மை விளக்கங்கள் மட்டுமே இருந்தது.


கொள்கை ரீதியாக எதிரிகளுக்குப் பதிலடி கொடுக்க சம்மதிப்பாரே தவிர வெறும் அக்கப்போர், அவதூறுக ளுக்கு ஆசிரியர் சிறிதும் முக்கியத்துவமளிக்க மாட்டார். அலட்சியப்படுத்தி விடுவார் என்பதை என் அனுப வத்தில் இருந்தே புரிந்து கொண்டேன்.


"உயிருக்கு உயிரான உற்ற கொள்கைக் குடும்பத்து உறவுகளே!"  என அழைக்கும் பாசமிகு தலைவர் நம் தலைவர்.


"திராவிடர் கழகத் தொண்டர்கள் - நாங்கள்" என்று தலைநிமிர்ந்து இறுமாப்போடும், மனநிறைவோடும் சுயமரியாதை உணர்வுடன் வாழ வழி நடத்தும் தலைவர் நம் "தமிழர் தலைவர்" ஆசிரியர் அய்யா அவர்களின் இனிய பிறந்த நாளில் நம் உளங்கனிந்த நன்றியைக் காணிக்கையாக்கி மகிழ்வோம்!


வாழ்வியல் மருத்துவர் வாழ்க!


- க.கலைமணி, பெரியார் திடல்


அறிவாசான் தந்தை பெரியார் உடலால் மறைந்து அரைநூற்றாண்டு காலம் கடந்தாலும், அவரின் கொள்கை வரிசாக காலம் நமக்கு தந்த தலைவர் நம்முடைய ஆசிரியருக்கு வயதே 88;


அறிவாசான் தந்தை பெரியாரை எங்களை போன் றவர்கள் பார்க்கும் வாய்ப்பை பெறாதவர்களுக்கு, அவரால் தொடங்கப்பட்ட திருச்சி பெரியார் ஆசிரியர் நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பை பெற்றவர்களில் நானும் ஒருவன்; அதுவே ஒரு தலைவரையும், கொள் கையும் வழிகாட்டி இருப்பது இதைவிட மனித வாழ்வில் நான் பெற்ற செல்வம் வேறு ஏதுமில்லை.


2008-ல் அங்கு படிக்கும் காலத்தில் ஒருமுறை என்னை சந்திக்க என்னுடைய தந்தையார் திருச்சி பெரியார் மாளிகைக்கு வருகை தந்தார். என்னை பார்த்துவிட்டு செல்லும் அப்போது தலைவர் ஆசிரி யரை பார்த்து அவர் திக தலைவர் என்று கூறி சில செய் திகளை சொன்னார். படிப்பறிவு அறவே இல்லாதவராக இருந்தாலும் ஆசிரியரை பார்த்தவுடன் அவருக்கு ஏற்பட்ட மரியாதையை இன்று நினைக்கும் போதும் உடல் சிலிர்க்கிறது. அந்த தலைவரின் கீழ் தொண்டராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தை எண்ணி எண்ணி என்றைக்கும் பெருமைப்படுகிறேன்.


இயக்கத்திற்கு தலைவராகவும், தோழர்களுக்கு வாழ் வியல் மருத்துவராகவும் தன்னுடைய பொதுவாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்.


ஒப்பற்ற தலைமைத்துவம் என்றால் எளிய குடும்ப தோழர்களை நிலையை அவருடைய நிலையில் இருந்து யோசிப்பவர் தான் நம்முடைய ஆசிரியர். கழகத் தலைவரின் ஆணையை ஏற்று என்றைக்கும் கருஞ்சட்டை சிப்பாய்கள் எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம். மகத்தான தலைவர் வாழும் காலத்தில் அவருடன் எளிய தொண்டனாக பணியாற்றுவதை நாம் பெற்ற பேராக எண்ணி மகிழ்கிறோம்.


மிகப்பெரிய தலைவருக்கு ஒரு எளிய தொண்டர் களை நினைப்பார்களா? என்று எண்ணக்கூடிய நிலையில், இனமானம் காக்கும் ஏடான விடுதலை ஏடு தொடங்கப்பட்ட நாளில் எனது மகன் பிறந்ததால் கழகத் தலைவரிடம் பெயர் சூட்டிட விரும்பினோம். கழகத் தலைவர் அவர்கள் 18-6-2020 அன்று விடுதலை நிலவன் என்று பெயர் சூட்டி மிகப்பெரிய வாய்ப்பை வழங்கினார். அதன் மகிழ்வாக குழந்தைகள் இல்லத்திற்கு நன் கொடையாக ரூ.1000/- அளிக்கிறோம் என்றவுடன்  கரோனா பேரிடர் காலத்தில் அவ்வளவு வேண்டாம் குறைச்சு கொடுய்யா என்று உரிமையோடு கழகத் தலைவர் கூறியதை கேட்டு ரூ.500அளித்தோம். எனது பெயரை சொல்லி பிறகு என்ன மகிழ்ச்சி தானே என்று சொன்னவுடன் ஏற்பட்ட சந்தோஷம் இருக்கிறதே அந்த வார்த்தைக்கு விலைமதிப்பே இல்லை. எளிய தொண் டர்களை பாதுகாக்கும் கழகத்தின் குடும்பத் தலைவர் தமிழர் தலைவருக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment