கடவுள் மதத்தைப்பற்றிப் பேசுவதேன்?
நமக்குக் கடவுளைப் பற்றியாவது மதத்தைப் பற்றியாவது சிறிதும் கவலை இல்லை என்பதாகவும், கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றில் உள்ள கட்டுப் பாட்டை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண் டும் என்பதே முக்கிய கவலை என்பதாகவும், அனேக தடவை களில் வெளியிட்டு இருக்கிறோம். அதுவும், பலர் நம்முடைய இம்முயற்சியில் கடவுளை யும் மதத் தையும் கொண்டு வந்து குறுக்கே போட்டு விட்டதால் தான் நாம் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டிய தாயிற்றே ஒழிய, உண்மையில் கடவுளையும் மதத்தை யும் பற்றிப் பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக் கவே இல்லை.
('குடிஅரசு' 16.4.1949)
No comments:
Post a Comment