தொண்டரின் தனிமனித வளர்ச்சியை நினைக்கும் ஒரே தலைவர் ஆசிரியர் மட்டுமே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

தொண்டரின் தனிமனித வளர்ச்சியை நினைக்கும் ஒரே தலைவர் ஆசிரியர் மட்டுமே


ஆசிரியர் தாத்தாவை பார்க்க போறோம் என்று அப்பா சொன்னவுடன் யாரோ ஒரு தாத்தாவை பார்க்க போறோம் என்று நினைக்காமல், அப்பாவின் அப் பாவை தான் காண செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் திருச்சி மாளிகைக்கு சென் றேன்.  மூன்று வயதில் முதன்முதலில், விவ ரம் தெரிந்து ஆசிரியரை பார்த்த அனுபவம். பார்த்தவுடன்,  "என்னம்மா உன் பேரு?" என்றார். "தாத்தா நீங்கதானே எனக்கு பெயர் வச்சிங்க" என்று சொன்னவுடன் சற்றும் யோசிக்காமல், தாத்தா நிறைய பேருக்கு பெயர் வைக்கிறேன் அதான் உன் பெயர் ஞாபகமில்லை என்று சொன்னார். என் பெயர் "மதிவதனி" என்றேன். உடனே அருகில் இருந்த சால்வை, பிஸ்கட்டை கொடுத்தார். அதில் ஆரம்பித்து இன்று 24 வயது வரை ஆசிரியர் தாத்தா தான் குடும்ப வழியாக தாத்தா என்று ஆழமாக பதிந்தது.


எங்கு கூட்டம், ஆர்ப்பாட்டம் என்றா லும் அப்பாவுடன் சென்று பழகிய எனக்கு, என்னுடைய 15 வயதில் அப்பாவின் மறைவு பேரிழப்பாய் இருந்தது. ஆனால் பிப்ரவரி 17,2011 அன்று அப்பாவின் படத் திறப்பில் ஆசிரியரின் உரை, தொடர்ந்து இயக்கத்தில் இயங்குவதே முதன்மை பணி என்று நினைக்க வைத்தது. இந்த குடும்பம் எங்கள் குடும்பம் என்று ஒரு தொண்டரின் குடும்பத்தை சொல்ல எல்லா தலைவராலும் முடியும் ஆனால் சொன்ன சொல்லில் சற்றும் மாறாமல் குடும்பத்தின் அனைத்து செயலையும் குடும்பத் தலைவராக கவ னித்து அறிவுரை வழங்க தமிழர் தலைவ ரால் மட்டும் தான் முடியும்.


கல்லூரியில் படிக்கும்போதே பன் னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது. நான்கு ஆண்டுகள் வேலையுடன் கூடிய படிப்பை நிறுவனமே ஏற்று கொள்கிறது என்ற தகவலை ஆசிரியரிடம் கூறியவு டனே “வீட்டின் பொருளாதார  சூழலை கருத்தில் கொண்டு வேலைக்கு செல், எங்கு இருந்தாலும் இயக்க பணி செய்யலாம்“ என்று சொன்னார். உண்மையில் நெகிழ்ந்து போனேன் காரணம். "தொண்டர்களிடம் உழைப்பை மட்டும் எதிர்ப்பார்க்கும் தலை வர்கள் மத்தியில் தொண்டரின் தனிமனித வளர்ச்சியை நினைக்கும் ஒரே தலைவர் ஆசிரியர் மட்டுமே!"


மாநில மாணவர் கழக கூட்டுச் செயலா ளர் என்ற பொறுப்பை ஆசிரியர் கொடுத் தவுடன்.அவரின் நம்பிக்கைக்கு உரிய உழைப்பை கொடுக்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மாண வர் கழக தோழர்களுடன் பிரச்சாரம் மேற் கொண்டோம். பிரச்சாரம் சென்ற எங்க ளுக்கு கிடைத்த பெரிய உத்வேகம் என்பது, கழக பொதுச்செயலாளர் அன்புராஜ் அண் ணனின் முயற்சியால் ஆசிரியர் எங்களை சந்தித்து உரிய அறிவுரைகள், எப்படி மக்களிடம் பேச வேண்டும், எதை  பேச வேண்டும், போகின்ற இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வகுப்பே எடுத்ததுதான். எந்த தலைவர் களால் முடியும் தொண்டர்களுக்கு கொள்கை வகுப்பெடுக்க?


மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் என்ற பொறுப்பு வழங்கியவுடன் நேரில் சென்று “தாத்தா மாணவர் கழகத்தில் நன் றாக தான் செயல்பட்டேன்” என்று தயங் கியப்படி சொன்னேன்.செயல்பட்டதால் தான் இந்த பொறுப்பும் என்று ஒரே வரியில் அடுத்த பணி செய்ய உற்சாகத்தை தந்தார்.


ஒரு தலைவர் ஆகக்கடைசி ஊரின் கிளை கழக பொறுப்பாளர் வரை நினைவில் வைத்திருக்க இவரால் மட்டுமே முடியும்.ஒரு குடும்பம் கணவரை, தந்தையை இழந்து நிற்கும் போது மீண்டும் அவர்களை அதே வேகத்துடன் செயல்பட வைக்க இந்த தலைவரால் தான் முடியும். ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்,ஆனால் பெரியாரின் தொண்டற பணியை தமிழர் தலைவர் தலைமையில் தொடர்வதே முதன்மை பணி என்று நினைத்து தொடரும் ஆற்றலை, வாய்ப்பை தந்த எங்கள் கழக தலைவர், குடும்பத் தலைவர், ஆசிரியர் தாத்தாவிற்கு பாசமிகு பேத்தியின் பிறந்தநாள் வாழ்த்துகள்.


 நூறாண்டு தாண்டி நீங்கள் தமிழ்நாட்டை வழிநடத்த வேண் டும், உங்கள் கரம்பற்றி பின்தொடர என்றும் தயாராய் மகளிர் படை காத்திருக்கும்.



- சே.மெ.மதிவதனி


மாநில மகளிர்


பாசறை அமைப்பாளர்


No comments:

Post a Comment