தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 2, 2020

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து!


சென்னை,டிச.2 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளில் இன்று (2.12.2020) காலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லத் திற்கு வருகைதந்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்து, பயனாடை அணிவித்தார்.


திமுகபொதுச்செயலாளர் துரை முருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டனர்.  திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளை வழங்கினார். அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். முன்னதாக அனைவரையும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார்.


வாழ்த்துச் செய்தி



திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு,


தந்தை பெரியாரின் கரம் பற்றிக்  கொள்கைப் பயிற்சி பெற்று - பெரியார் பணி ஒன்றே தன் வாழ்வியலாகக்  கொண்டு - சமூகநீதிக் களத்தில் சமரசமற்ற போராளியாக - திராவிட இன உணர்வுச் சுடரொளியை அணையாமல் காக்கின்ற கைகளாக - அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் மிக்கவராக - முத்தமிழறிஞர் கலைஞரின் இளவலாக-தாய்க் கழகத்தின் தலைவராக - 88-ஆவது பிறந்தநாள் காணும் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.


இந்திய ஒன்றியத்திலும் - தமிழ்நாட்டி லும், ஜனநாயகமும் சமூகநீதியும் கடும் சவாலுக்குள்ளாகியிருக்கும் இந்த நெருக் கடியான தருணத்தில், அவற்றைத் தீர முடன் எதிர்கொண்டு திராவிட முன்னேற் றக் கழகத்தின் ஆட்சி அமையப் பாடு படுவோம் எனத் தனது பிறந்தநாள் வாழ்த்துச்  செய்தியாக அறிவித்திருக்கும் ஆசிரியர் அய்யா அவர்களுக்குக் தி.மு.கழகத் தலைவர் என்ற முறையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பகுத்தறிவுப் பார்வையுடன், திராவிட இன - மொழி உணர்வு குன்றாமல், தொண் டறத்தால் பொழுதளந்து, மானுட விடுத லைக்காக அயராது பாடுபடும் ஆசிரியர் அய்யாவின் வழிகாட்டலில், அவர் நோக் கத்தை மனதில் தேக்கி, உறுதியுடன் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்!


இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment