டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் கடந்த 11 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, காங்கிரஸ், திமுக, இடது சாரி கட்சிகள், சரத்பவார் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு அளித்துள்ளன. தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி முழு ஆதரவு அளிக்கும் என கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
- வேளாண் சட்டத்தை ரத்து செய்வது அல்லது திருத்தம் கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி முனைப்பு காட்ட வேண் டும். விவசாயம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளதையும் கவனிக்கத் தவறக்கூடாது என தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.
- விவசாயிகளின் கோரிக்கைகளை மோடி அரசு பரிசீலிக் கத் தவறினால், போராட்டம் இன்னமும் வலுவடையும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய அரசை எச்சரித்துள்ளார். வரும் 9ஆம் தேதி குடியரசுத் தலைவரை, ஏனைய கட்சித் தலைவர்களான சீதாராம் யெச்சூரி (சிபிஎம்), டி.ஆர்.பாலு (திமுக), டி.ராஜா (சிபிஅய்) ஆகியோருடன் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- கரோனா தொற்று காரணமாக உலக அளவில் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை தற்போதுள்ள நூறு கோடி என்பது அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 20 கோடியாக அதிகரிக்கும் என அய்க்கிய நாடுகள் வளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- தமிழ் வழி கற்றோர்க்கு 20 சதவீத இடங்களை தமிழ் நாடு அரசுப் பணிகளில் ஒதுக்கீடு செய்திடும் சட்டம் கடந்த எட்டு மாதங்களாக ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. இது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு எவ்வளவு நன்கொடை, யாரிடம் இருந்து பெறப்பட்டது என்கிற விவரத்தை பாஜக வெளிப்படுத்த வேண்டும் என சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேந்தர் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடந்தை கருணா
7.12.2020
No comments:
Post a Comment