ஒடுக்கப் பட்ட
மக்களின்
தலையாய தொண்டர்
எங்கள்
தலைவர் பெரியார்
பறை ஒலியின்
எதிரொலி !
பரந்து விரிந்த
பகுத்தறிவு இமயம்
பெரியாரின்
சீரிய சிந்தனைகளை
பறந்து பறந்து
மறந்துங்கூட
அயர்ந்து ஓய்ந்திடாமல்
ஆய்ந்து ஆய்ந்து
அளவின்றி
அனைவருக்கும்
அள்ளிக் கொடுக்கும்
அய்யாவின்
முதன்மைப் பணியாள் !
ஈரோட்டு வள்ளலின்
நன்கொடை !
நுண்ணறிவால்
பகைவரையும்
பிணைக் கைதிகளாகத் தன்னுள்
அடைக்கும் ஆற்றல்
அவர்க்கே சொந்தம் !
ஆரியர்
சூழ்ச்சியால்
விளைந்திடும் கேடுகளை
ஆள்பவர் அரங்கேற்றிய
அடுத்தக்கணமே
அம்பலப்படுத்தி
எதிர்ப்பொலி எழுப்பி
உறக்கம் - மயக்கம் -
அறியாமையில் இருப்போரை
தட்டி எழுப்பும்
எச்சரிக்கை மணி
எங்கள்
ஆசிரியர் வீரமணி !
திராவிடர்
கழகத்தை
கட்டிக் காத்து
ஆல் போல் வளர்த்து
கழகச் செம்மல்களாம்
கருஞ்சட்டைச் செல்வங்களை
அரவணைத்து
ஓரணியாய்த் திரட்டி
போர்ப்படை சமைத்து !
இயக்கத்தில்
தன் இதயத்தை புதைத்து
பாமரர் எங்கள்
வாழ்வில் முளைத்து
வளர்ந்து கனிதரும்
கனிவான கடலூர்க்காரர் !
சமூகநீதிப் போரில்
தொடுத்ததை எல்லாம்
வெற்றி கண்டவர் பெரியார் !
அவர்
தொட்ட பணியை
முற்றுப்புள்ளி இடாமல்
வெற்றிக் கொடியை
உயர்த்தி கட்டிய கெட்டிக்காரர் !
ஆம்,
இட ஒதுக்கீட்டை
உயர்த்தியதைத்தான் சொல்கிறோம்!
கட்டியதும் காத்ததும்
பலவாம். அதில் சில :
பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகம் !
அய்.ஏ.எஸ். பயிற்சி கூடம் !
பின்தங்கிய பகுதிகளில்
பள்ளிக்கூடங்கள் !
"விடுதலை" ஏட்டின் வித்தகர் !
"உண்மை"யின் பாதுகாவலர் !
"மாடர்ன் ரேஷனலிஸ்ட்"
"பெரியார் பிஞ்சு"வென
தொடரும் ஏடுகளின் பட்டியல் !
திருமணக் கூடம் !
மாடமாளிகை !
ஏழைகள் நலனுக்கு
இலவச மருத்துவமனை !
பெரியாரைப் பிள்ளைகள் நெஞ்சிலே விதைத்திடும்
அருமைத் திட்டம்
பெரியார் 1000 !
பெரியார் திரைப்படம் !
எண்ணிலடங்கா மாநாடுகள்
எத்தனை எத்தனை புத்தகங்கள் !
எத்தனை எத்தனை
பெரியாரின் சிந்தனை தொகுப்புகள் !
பெரியாரை உலகமயமாக்கும்
பெரியார் பன்னாட்டு மய்யம் !
வரும் காலம்
பெரியாரை அறிய
திருச்சி சிறுகனூரில்
பெரியார் உலகம் !
திடலைக் கடலாக்கி.......
இன்னும் சொல்லச் சொல்ல
பட்டியல் நீளும் !
அதற்கே அமெரிக்காவில்
அய்யாவின்
குமுகத் தொண்டினைப் போற்றி
வாழ்நாள் சாதனையாளர் எனும் உயரிய விருது !
வழங்கி சிறப்பு செய்தனரோ !
- சே. குணவேந்தன், பெங்களூரு
No comments:
Post a Comment