மத்திய பல்கலை.யுடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவா? மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடுங்கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 6, 2020

மத்திய பல்கலை.யுடன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவா? மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடுங்கண்டனம்

                                                                                                            சென்னை, டிச. 6-- தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,


இந்திய மொழிகள் ஆய் வுக்காக, மைசூரில் உள்ள இந் திய மொழிகளுக்கான மத்திய நிறுவனத்தை, “பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா” என்ற மத்தியப் பல்கலைக் கழகமாகப்  பெயர் சூட்டி, அத்துடன், சென்னையில் உள்ள செம்மொழித் தமி ழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்திட எடுக்கப்பட் டுள்ள மத்திய பா.ஜ.க. அர சின் முடிவுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக ஆட்சி  இருக்கும் வரை உயி ரூட்டத்துடன் நிதி ஆதாரத் துடன் தமிழ்மொழி வளர்ச் சிக்காகத் தீவிரமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தது செம்மொழித் தமிழாய்வு நிறுவனம். ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகும்  பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த  பிறகும் இந்த மத்திய ஆய்வு நிறுவனம் அனைத்து வழிகளிலும், திட்டமிட்டு முடக்கப்பட்டது.


ஏற்கெனவே இருக்கின்ற செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைச் செயல்பட விடாமல் முடக்கி ஒரு நிறு வனமாக இருக்கும் மொழி யின் தகுதியை, ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் “துறை” என்ற அளவில் சுருக்கி, சிறு மைப்படுத்தும் இன்னொரு  தந்திர வேடமும் அணிந்து, மத்திய பா.ஜ.க. அரசு உள் நோக்கத்துடன் நடந்து கொள்வது கடுமையான கண் டனத்திற்குரியது. செம் மொழித் தமிழாய்வு நிறுவனம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட்டிட உத்தரவிட்டு, இந்த நிறுவ னத்தை,  மைசூரில் உள்ள பிபிவி பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பிற்போக்குத்தன மான முடிவினைக் கைவிட வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  முதல் வர் பழனிசாமி  உடனடியாக தலையிட்டு, மத்திய  அரசின் இந்த முடிவை கைவிட உரிய அழுத்தம் கொடுக்க வேண் டும். தவறினால், செம்மொழி யாம் தமிழுக்கு, திட்டமிட்டுச் செய்த துரோகம் ஆகிவிடும் என்பதை எண்ணிப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண் டும் என்று தெரிவிப்பது எமது  கடமை.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment