டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- அய்தராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். 55 இடங்களை வென்று அதிக இடங்களை வென்று உள்ளது. மொத்தம் 150 இடங்களில், பாஜக 48 இடங்களையும் ஓவைசியின் எம்.அய்.எம். கட்சி 44 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
- மேயர் பதவிக்கு டி.ஆர்.எஸ். கட்சிக்கு தங்களது எம்.அய்.எம். கட்சி ஆதரவு அளிக்கக்கூடும் என ஓவைசி சூட்சம மாக தெரிவித்துள்ளார்.
- மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமைப்புகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து போராட வலியுறுத்தினார்.
- மகாராட்டிராவில் நடந்த சட்ட மேலவைத் தேர்தலில் கடந்த 58 ஆண்டுகளாக கோட்டையாக இருந்த நாக்பூரில், பாஜக படு தோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நடைபெற்ற ஆறு தொகுதிகளில், நான்கில் ஆளும் சிவசேனா கூட்டணி நான் கிலும், பாஜக ஒன்றிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.
- 2008இல் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு மீண்டும் துவங்கியது. இதில் குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளி வந்துள்ள பிராக்யா சிங் தாகூர் தற்போது போபால் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
- வேளாண் சட்டங்கள், விவசாயிகளை கலந்தாலோசித்து மறுவரைவு செய்யப்பட வேண்டும் என மூத்த பத்திரிக்கையாளர் சிகா முகர்ஜி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
- வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராடும் விவசாய அமைப்புகள் வருகிற டிசம்பர் 8-ஆம் தேதி நாடு முழுவதற்குமான முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- அரசுக்கு எதிராக கருத்திடுபவர்களையும், போராடுபவர் களையும் கிரிமினல்களாக அரசு பார்க்கிறது என பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் பானு பிரதாப் மேத்தா கூறியுள்ளார்.
- நடுத்தர அளவிலான அல்லது பல பெரிய தொழிலதிபர் களுக்கான இடைநிலை தடங்கள் இல்லாத நிலையில், மத்தியில் உள்ள கட்சி அவர்களுக்கு எந்த உதவியும் செய்திட வில்லை. காரணம், அவர்களின் பணம் கட்சிக்குத் தேவையில்லை. நரேந்திர மோடியின் கீழ் உள்ள பாஜக, இந்திரா காந்தியின் காங்கிரஸைப் போலவே, எந்த அரசியல் போட்டிகளையும் எதிர்கொள்ளவில்லை. பெரிய மூலதனத்தை பெரிதும் நம்பி யிருக்கும் ஒரு மய்யப்படுத்தப்பட்ட நிதி அமைப்பை இயக்க இது முடியும். இந்த புதிய வணிக-அரசியல் ஆட்சியில் பிராந்தியக் கட்சிகள் மட்டுமல்ல, ஒரு காலத்தில் சக்திவாய்ந்த மதுபானம், ஒப்பந்தக்காரர், சர்க்கரை அல்லது ஆர்தியா லாபி கூட ஒரு பொருட்டல்ல என ஹரிஸ் தாமோதரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
- மகாராட்டிராவில் எம்.எல்.சி. இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் அகாடி கூட்டணியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை, தேச விரோதிகள் என்றும் காலிஸ்தானிகள் என்றும் சில ஊடகங்கள் குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தி ஹிந்து:
- அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் அரசின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும் என தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- வெளி நாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வாக்குகளை அஞ்சல் வழியே அனுப்பலாம் என தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உள்ளதாக வந்துள்ள பத்திரிக்கைச் செய்திகளின் அடிப்படையில், இது போன்ற முடிவுகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டும் என சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.
தி டெலிகிராப்:
- எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களை குடியரசுத் தலைவர் சந்திக்க மறுப்பது, மத்திய அரசின் நிர்பந்தந்தால் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலாட் தெரிவித்து உள்ளார்.
குடந்தை கருணா
5.12.2020
No comments:
Post a Comment