புதுடில்லி, டிச.4 2020 நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில் இந்தி யாவில் வேலைவாய்ப்பு விகிதம் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலத் தில், வேலையின்மை விகிதம் 7.8 சதவிகிதமாக அதிகரித் துள்ளது. தனியார் நிறுவனமான இந்திய பொருளாதாரக் கண் காணிப்பு மய்யம் இது தொடர்பான புள்ளிவிவரங் களை வெளியிட்டுள்ளது.
கடந்த நான்கு வாரங் களாகவே தொழிலாளர் சந்தை சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. எனினும், பொரு ளாதார நடவடிக்கைகள் மீண் டும் துவங்கிய கடந்த ஜூன் மாதத்திற்குப் பின், நவம்பர் 22 தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் வேலை யின்மையும், வேலைவாய்ப்பு விகிதமும் மீண்டும் பின் னோக்கித் திரும்பியுள்ளது.
36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது
நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் 5.5 சதவிகிதமாகவும், இரண்டாவது வாரத்தில் 7.2 சதவிகிதமாகவும் வேலை யின்மை விகிதம் இருந்தது. அது தற்போது 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.மறுபுறத்தில் வேலைவாய்ப்பு விகிதமும் 36.24 சதவிகிதமாக குறைந் துள்ளது.
2019-2020ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு விகிதம் 39.4 சதவிகிதமாக இருந்தது. இது, பொதுமுடக்கத்தையொட்டி, 2020 ஏப்ரல் மாதத்தில் 27.2 சதவிகிதமாகவும், மே மாதத் தில் 30.2 சதவிகிதமாகவும் சரிந்தது, பின்னர் அக்டோபரில் 37.8 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், தற்போது மீண்டும் குறையத் துவங்கியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் 37.5 சதவிகிதம், இரண்டாவது வாரத்தில் 37.4 சதவிகிதம் என்றிருந்த வேலைவாய்ப்பு விகிதம், தற்போது மூன்றாவது வாரத்தில் 36.24 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இதன்மூலம் கரோனா பொது முடக்கத்திற்கு முந்தைய நிலையை வேலைவாய்ப்பு எட்டவில்லை என்றும், அதற் குச் செல்வதற்கு முன்பே மீண்டும் குறையத் துவங்கி இருப்பதாகவும் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மய்யம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment