இது இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு!
கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டு 15 நாட்களுக்கும் மேலாக! அதனு டனே தொடர் பிரச்சாரப் பயணம்... சிறப்புக் கூட்டங்கள்... மாநாடுகள்... புயலால் பாதிக் கப்பட்ட மாவட்டங்கள் அனைத்திலும் பய ணம் செய்து மக்களுக்கு ஆறுதல்...
அன்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பியவர் அடுத்தடுத்த சந்திப்புகள், பணிகளை முடித்து முற்றுகைப் போராட்டக் களத்துக்கு 10.30 மணியளவில் வந்தார். கால் மணி நேரப் பேச்சு... 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்ட மேடையில் அமர்ந் திருந்தார். வற்றியிருந்த கால் வீக்கம் மீண் டும் கூடிக் கொண்டது.
கைது செய்யப்பட்டு அரசு 'விருந்தின ராக' ரேஸ் கோர்ஸ் சாலைக்கு அழைத்து வரப்பட்டார் தலைவர்கள், தோழர்களு டன்..! அனைவருடனும் அமர்ந்து உணவு உண்டார். பேசினார்.... கைகுலுக்கினார்... படமெடுத்துக் கொண்டார்!
ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் தூசி மண்டிய படிக்கட்டுகளைச் சுத்தம் செய்து மேலும் தூசியைக் கிளப்பிவிடாமல், சமமாய் இல்லாது சற்றே சரிவான தளத்தில் (அதுதான் கிடைத்தது), பழைய பேப்பர் களைப் போட்டு, அதன் மேல் அவர் சிறைக்குத் தயாராய் எடுத்து வந்திருந்த விரிப்பு ஒன்று விரிக்கப்படுகிறது.
சுற்றிலும் தோழர்களின் பேச்சொலி, போதாக்குறைக்கு ரேஸ்கோர்சில் ‘இரண்டு கால்’ பந்தய வெறியர்களின் ஓயாத கூச்சல், சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும் ஈக்கள்...
இத்தனைக்கும் மத்தியில், கை நிறைய மாத்திரைகளை எடுத்துப் போட்டு கொண்டு, காலுக்குச் சற்று உயரம் கொடுக்க, நாங்கள் எடுத்து வந்திருந்த கேமரா ஸ்டாண்டைப் படுக்க வைத்துக் கொண்டு, அந்தக் கம்பிகள் அழுத்தாமல் இருக்க, அதன் மேல் தன் ‘தோள் துண்டை’ விரித்து கண்மூடிப் படுத்திருக்கிறார்.
ஒரே ஓர் ஆறுதல்... அந்த ஜன்னல் கட்டை வழி மெல்லிய காற்று அவ்வப்போது வீசுகிறது.
ஏழு தமிழர் விடுதலைக்கான அன்றைய போராட்டத்தை முடித்துவிட்டு, காவல் துறையினர் விடுதலை செய்வார்களே ஆயின், இரவு ரயிலேறி திருச்சி சென்று, மேகதாது அணைக்கட்டுக்கு அனுமதி தந்த மத்திய அரசைக் கண்டித்து மறுநாள் நடை பெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
சுற்றும் ஈக்களை விரட்ட அனிச்சையாக கை அவ்வப்போது அசைந்து கொண்டிருக் கிறது. கால் அசைவு - வலியின் தீவிரத்தைக் காட்டுகிறது.
அவர் உறங்குகிறாரா...? தெரியாது! எப் போதும் விழிப்போடிருக்கும் மூளை, கண் களை மூடி என்ன சிந்தித்துக் கொண்டி ருந்ததோ தெரியவில்லை.
அன்றும், மறுநாளும் என்ன நிகழ்ச்சி யென்று மட்டும் என் மூளை சிந்தித்துக் கொண்டிருந்தது.
அதற்கு முந்தைய நாளுக்கும் ஒரு சிறப்பு இருந்தது! அது அவரது 86ஆம் பிறந்தநாள் - அவர் ஆசிரியர் கி.வீரமணி!
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,
மாநில செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment