தலைமுறை கடந்தும் வழி நடத்தும் தலைவர் - ஆசிரியர் - களப்பணி தோழர்
- வே. சிறீதர், செய்தியாளர், விடுதலை
திராவிடர் இயக்க வழித் தோன்றல், தலைமுறை கடந்தும் வழி நடத்தும் தலைவர், களப் பணித் தோழர், ‘விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவரின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2020) ‘விடுதலை' செய்திப் பிரிவு பணித் தோழர் கள் அனைவரும் வாழ்த்தி பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை'யின் 58 ஆண்டு கால ஆசிரியராக தனிச்சிறப்புடன் தேனீ போல் உழைத்து வருபவர். நாள்தோறும் திராவிடர் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள், ஊசி மிளகாய் போன்றவைகளை உலக மாந்தர் பகுத்தறிவு பெற, இனம் சோர்வடையாமல் இருக்க, நம்பிக்கையூட்டும் வகையில் கரோனா தொற்று காலத்தில் கூட தனது எழுத் தாற்றல் மூலம் கழகத் தோழர்கள், வாசகர்கள், அனைத்து கட்சி தலைவர்கள், தோழர்கள் அனைவருக்கும் முன் மாதிரியான களப் பணியாற்றி வருபவர் தமிழர் தலைவர் அவர்கள்.
‘விடுதலை' நாளிதழில் ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதும் அறிக்கைகள் உடனுக்குடன் அனைத்து தொலைக் காட்சி, வானொலி, செய்தித்தாள் நிறுவனங்களுக்கு அனுப் பப்படும். அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், அரசாங் கத்தின் பார்வைக்கும், அரசு செயலர்கள் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டு பல பிரச்சினைக்கு தீர்வாக அமைந்துள்ளது.
‘விடுதலை‘ ஏட்டில் வெளியிடப்படும் தமிழர் தலைவரின் அறிக்கைகள், தமிழக முழுவதும் கழகத் தோழர்களின் களப் பணிகள் குறித்த செய்திகள், மக்கள் நலனுக்கான ஆர்ப் பாட்டச் செய்திகள், மூடநம்பிம்கை ஒழிப்பு பிரச்சார செய்திகள், எதிர்க்கட்சி செய்திகள், அரசு தொடர்பான செய்திகள், சட்டமன்ற செய்திகள் உள்ளிட்ட அனைத்தும் உண்மையாகவும், சிறப்பாகவும் வெளிவருவதற்கு ஆசிரியர் அவர்களின் அறிவுரைப்படியும், பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பார்வையின் கீழ்தான். செய்திப் பிரிவு பணித் தோழர்கள் அனைவரும் பெருமை யுடன் பணியாற்றி வருகிறோம் என்பதை இம்மகிழ்வான நாளில் பெருமிதத் துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் அறிந்த அன்புத் தலைவர்
- ப.சிவகுமார், ஒளிப்படக் கலைஞர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தமிழக மக்களின் மீது கொண்டுள்ள பேரன்பின் காரணமாக கல்வித் தொடர்பாகவும், வேலை வாய்ப்பு தொடர்பாகவும், மழைக் காலங்களில் ஏற்படும் பாதிப்பு காலத்திலும், விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினை காலத்திலும், முதல் தலைவராக வழி காட்டி, தனது கருத்தினை பல்வேறு வழியாக எடுத்துக் கூறி தமிழக தலைவர்களை ஒரு அணியாக திரட்டி பிரச்சினைகள் தீரும் வரை போராட்டமானாலும், சிறை என்றாலும் தயங்காமல் முன்னெடுத்துச் செல்வது தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பேரன்பாலாகும்.
கரோனா தொடங்கியது முதல் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள இயக்க தலைவர்கள் முதல் பெரியார் பெருந் தொண்டர்கள் வரையிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அவர்களுக்கு அன்போடு வழிகாட்டி வருவதையும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் காணொலிக் காட்சியில் கூறியதன் மூலம் அறிந்தேன். வாழும் வரலாறு படைக்கும் அன்புத் தலைவரின் 88ஆம் பிறந்த நாளில் நாங்கள் சக பணித் தோழராக இருப்பதில் மிக அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அன்பு வாழ்த்துகள். நன்றி.
தமிழர் தலைவரின்
நகைச்சுவை உணர்வு!
ச.பாஸ்கர்,
‘விடுதலை’ பக்க வடிவமைப்பாளர்
கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா (கோவிட் 19) தொற்று கொடுமையின் காரணமாக ‘விடுதலை’ லே-அவுட் செய்யும் பணியினை அவரவர் இல்லத்திலிருந்து செய்தோம். அப் பொழுது நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துகொள் வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த மே மாதம் 14 ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’யில் ‘‘பசி தீர்ப்பதா! பிணி தீர்ப்பதா! எது முதல் தேவை!’’ என்ற தலைப்பில் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை தட்டச்சு செய்து, ஆசிரி யர் அவர்கள் பார்வைக்காக அனுப்பி வைத்தேன்.
அந்தக் கட்டுரையில்,
தந்தை பெரியார் அவர்களது மனிதநேயம் வியக்கத் தக்கது.
1925 ஆம் ஆண்டு (2.5.1925) முதல் பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ ஏட்டில் உள்ள ஒரு கவிதை இதோ:
‘’அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி யெவற்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன்று ண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும் தானே!’’
என்ற பாடலில்,
வஞ்சம் என்பதற்கு பதில் லஞ்சம் என்று தவறுதலாக தட்டச்சு செய்துவிட்டேன்.
அதனைப் படித்துப் பார்த்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், நான் செய்த தவறை சுட்டிக்காட்டி, ‘‘ஏங்க, நீங்கள் லஞ்சம் என்று தட்டச்சு செய்திருப்பது இந்தக் காலத்திற்குப் பொருந்தும்; வஞ்சம் என்று அய்யா எழுதியது அந்தக் காலத்திற்குப் பொருந்தும்‘’ என்று நகைச்சுவை உணர்வு டனும், புன்னகையுடனும் சுட்டிக்காட்டியது என் மனதை நெகிழச் செய்தது.
இன்னொரு நிகழ்வு:
கடந்த 7.11.2020 அன்று சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந் தித்தபொழுது, ‘‘வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை இன்னும் எத்தனை தேவைப்படுகிறது’’ (88 வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக வெளிவருவதற்காக) என்று என்னிடம் கேட்டார்.
அப்பொழுது நான், ‘‘இன்னும் 6 வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை வேண்டும்‘’ என்றேன்.
நான் சொன்ன அடுத்த நிமிடமே, ‘‘உனக்கும் 6 தேவைப் படுகிறது; ஜோ பைடனுக்கும் 6 தேவைப்படுகிறது’’ என்றார்.
(அன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த தருணம். ஜோ பைடன் அவர் களுக்கு இன்னும் 6 இடங்கள் கிடைத்தால் புதிய அதிபராகும் வாய்ப்பு கிடைக்கும் - இதைத்தான் ஆசிரியர் அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் ‘‘உனக்கும் 6 - ஜோ பைடனுக்கும் 6’’ என்றார்).
இதைக் கேட்டவர்களின் சிரிப்பொலி அடங்க சிறிது நேரமானது.
மேற்கண்ட இரண்டு நிகழ்வுகள் என் உள்ளத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தவையாகும்.
எனது பார்வையில் ஆசிரியர்!
உடுமலை வடிவேல்
பரம்பரையாகத் தொடரும் பார்ப்பனரல்லாதாரின் கெடு தலையை நீக்கும் விடுதலையின் ஆசிரியராக இருக்கும் தமிழர் தலைவர் அவர்களுக்கு 88 ஆம் பிறந்தநாள் பிறக்கிறது. அவருக்கு வயது கூடக் கூட ஆரியம் அவரைப் பார்த்து அலறுகிறது. இது பெரியாருக்கு மட்டுமே கிடைத்த பேறு! இது எப்படி சாத்தியமாயிற்று? காரணம், அவர் ஒரு முழுமையான பகுத்தறிவுவாதி. அதனால்தான், இந்து மதமென்று சொல்லப்படுகிற சனாதன மதத்தை வேரோடு பெயர்த்தெறியும் பெரியாரியத்தைப் பரப்பும் பணியில் தன் வாழ்நாளையே கொடையாக ஈந்து வருகிறார். இந்தியாவில் ஏன் உலக அளவில் ஒப்பு உவமை சொல்ல முடியாத ஒரு மாபெரும் புரட்சி இயக்கத்தின் தலைவராக இருப்பவர். அப்படிப்பட்டவருக்கு இது சாத்தியம்தானே! அந்தளவுக்கு இயக்கமும் தானும் ஒன்றாகிப்போனவர்! ஆனாலும், அவ ருக்கென்று ஒரு தனித்த அடையாளம் உண்டு! கறுப்புக் கரையிட்ட வெள்ளை வேட்டி, கறுப்புச் சட்டை, இடது தோளில் ஒரு கறுப்புக்கரையிட்ட வெள்ளைத் துண்டு, சிரித்த முகம்! ஆசிரியர் என்றாலே இவைதான் அவரை அறிந்த அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் இந்த அடையாளம் புறத்தோற்றம்தான்! அகத்தோற்றம்? அதில் அவரது தனித்த அடையாளம் எது? தேடித்தேடிப் பார்க்கிறேன். அதில் அவர் தெரியவில்லை, அதிலும் பெரியார்தான் தெரிகிறார்!
ஆம், ஆசிரியர் கொள்கையில் மட்டுமல்ல, குணத்திலும் பெரியாராகவே தோற்றம் தருகிறார். பெரியாரைக் காணாத என்னைப் போன்றோருக்கு இது எப்படிப்பட்ட வாய்ப்பு! தன்னைச் சந்திக்க வருகிறவர்களை இன்முகத்தோடு வர வேற்று, வாசல்வரை வந்து வழியனுப்புகிறார். அதில் அவர் தெரியவில்லை, பெரியார்தான் தெரிகிறார். நாணயத்தில் இம்மியளவும் பிசகாமல் இருந்துவருகிறார். அதில் அவர் தெரியவில்லை, பெரியார்தான் தெரிகிறார்! தொடங்கிய எதையும் வெற்றி பெறும் வரை விடுவதேயில்லை, போரா டிக்கொண்டே இருக்கிறார். அதில் அவர் தெரியவில்லை, பெரியார்தான் தெரிகிறார்! கொள்கையில் நேர் எதிராக இருந்தாலும் தமிழராகயிருந்து அவர் உயர்ந்தால் அவரை மனங்குளிர வாழ்த்துகிறார். அதில் அவர் தெரியவில்லை, பெரியார்தான் தெரிகிறார்! இன்னும் எவ்வளவோ இருக் கின்றன! தனக்கு சொந்த புத்தி தேவையில்லை. பெரியார் தந்த புத்தியே போதுமென்று சொல்லி, இதற்கு சான்று ஆசிரியரே தந்துமிருக்கிறார்.
சரி வேறுபாடே இல்லையா? இருக்கிறது! அதுவும் ஒன்றே ஒன்றுதான்! பெரியாருக்கு தாடி உண்டு! ஆசிரிய ருக்கு அது இல்லை! கொள்கையிலும் சரி, குணத்திலும் சரி ஆசிரியர், பெரியார்தான்!
அதனால்தான் ஆரியம் பெரியாரைக் கண்டு அலறிய தைப்போன்று ஆசிரியரைக்கண்டும் அலறுகிறது.
ஆகவே தமிழர்களின் தலைவராம் ஆசிரியர் நூற் றாண்டு கடந்தும் வாழவேண்டும். இது எனது சுயநலம்தான்! அதற்கு முடிந்த அளவுக்கு விடுதலை சந்தாக்களை கொடுக்க நான் என்னளவில் முயன்று கொண்டே... இருப்பேன்.
ஆசிரியர் எங்கள் குடும்பத்தில் ஒருவர்
- சரவணா ராஜேந்திரன்
திடலில் பணி புரியும் அனைவரும் ஒரு குடும்பம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, நீண்ட நாள் ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு வரும் போது திடல் தோழர்கள் அனைவரும் ஆசிரியரைக் காண ஆவலோடு இருப்பதில் இருந்து தெரியவரும்.
சென்னை அல்லது இதர பகுதிகளில் சுற்றுப்பயணம் இருக்கும் போது சில நாட்களில் ஆசிரியரின் கார் அலுவலக வாசலில் வந்து நிற்கும் போது அந்தப் பிரிவு அவ்வளவாக தெரியாது, அதே நேரத்தில் ஆசிரியர் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். ஆசிரியரின் அறைக்கு எதிரே உள்ள பகுதியில் பல கார்கள் நின்றாலும் ஆசிரியரின் கார் இல்லாத இடம் ஒரு வெறுமையைத் தரும்.
2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் ஆசிரியரின் அமெரிக்க சுற்றுப்பயண நிகழ்ச்சியின் போது ஆசிரியர் மீண்டும் வரும் வரை திடலில் பணிபுரியும் அனைத்து தோழர்களும் ஒருவித ஏக்கத்தோடு ஆசிரியர் கார் நிற்கும் பகுதியை பார்ப்பதை கவனித்திருக் கிறேன்,
ஆனால் இந்த ஏக்கம் விடுதலை நாளிதழில் பணிபுரியும் எங்களுக்கும் இருந்தது, ஆனால் எங்களுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால் கவிஞர் அய்யா, பொருளாளர் குமரேசன் அவர்கள் அயல்நாட்டிலிருந்து அன்றாட நிகழ்ச்சிகளை எங்களுக்கு மேலைநாட்டு கால்பந்தாட்ட மைதானத்தில் நடக்கும் விறுவிறுப்பான விளையாட்டு நிகழ்வுகளை தருவது போன்று நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்கிகொண்டு இருப்பார்கள். அதை காணொலி மூலம்கேட்டு எழுதுவதும், மொழி பெயர்ப்பதுமாக இருக்கும் எங்களுக்கு ஆசிரியர் உடனே பயணிப்பது போன்ற உணர்வு தற்காலிக ஆறு தலைத் தரும்.
அதே போல் குளிர்காலம் முடிந்து வசந்தம் துவங்கிய ஜூலை மாதம் ஆசிரியரின் ஜெர்மனி பயணமும் அப்படி யான ஒரு அனுபவத்தை திடல் பணியாளர்களுக்கு தந்தது, ஜெர்மனி அனுபவத்தைப் பொறுத்து விடுதலையைப் படித்தவர்களுக்கு தாங்களே நேரில் சென்று பார்த்த ஒரு அனுபவத்தைத் கொடுத்தது,"பெரியார் சுயமரியாதை இயக் கப் பன்னாட்டு மாநாடு அதனை வழிநடத்திய ஆசிரியர், அதனைத் தொகுந்து வழங்கிய கவிஞர் அய்யா போன் றோரின் உரைகளை அச்சில் கொண்டுவரும் போது விடு தலை நாளிதழில் பணியாற்றிக்கொண்டு இருந்த நாங்களும் ஆசிரியர் குழுவுடன் ஜெர்மன், சுவிஸ்சர்லாந்து உள்ளிட்ட மத்திய அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்தது,
இந்தப் பயணம் எல்லாம் முடித்துவிட்டு ஆசிரியர் திடல் திரும்பியதும் ஆசிரியர் எப்போது தன்னுடன் புகைப்படம் எடுக்க அழைப்பார் என்று காத்திருந்து சீதாராமன் அய்யா தொலைபேசியில் எல்லோரும் கீழே வாருங்கள் என்று சிறீதர் சாரிடம் கூற அவரும் வாங்க ஆசிரியருடன் படம் எடுக்க என்று அழைத்த உடனே அனைவருமே விடுதியில் இருக்கும் தங்களை காணவரும் பெற்றோரைக் காணச் செல்லும் மாணவர்களைப் போல் குதூகலமாக ஆசிரியரின் அறையை நோக்கிச் சென்று ஆசிரியருடன் படம் எடுத்த பிறகு ஆசிரியர் திடலில் இல்லாத காலத்தில் இருந்த வெறுமை நீங்கும்.
அதே போல் திராவிடர் திருநாள் அன்று குடும்பத்தோடு திடலுக்கு வந்து ஆசிரியருடம் படம் எடுத்துக்கொள்ளும் அனுபவமும் அதை அனைவருக்கும் அனுப்பும் அனுபவமும் திடல் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பெருமை மிக்கதாகும்.
பிறந்தநாள் காணும் ஆசிரியர் எங்களது குடும்பத்தில் ஒருவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்.
வாழும் வாழ்நாள் போராளி
- பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
ஜாதி மதத்தைக் காப்பாற்ற புற்றீசலாய் பூமிப்பந்தில் புரையோடிப் பரவியிருக்கிற பல்லாயிரம் இயக்கங்களுக்கு இடையில் புத்தொளிப் பாய்ச்சி ஜாதி ஒழிப்பிற்கே தோற்றமாகியது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்.
மனித நேயம் ஒன்றே முழுமுதற் நோக்கமாகக் கொண்டு எந்த ஜாதியின் பேரால் மக்கள் உரிமை இழந்தார்களோ அதே ஜாதியின் பெயரால் வகுப்புவாரி உரிமை கேட்டு பிறந்த திராவிடர் கழகம், சமத்துவப் பாதை அமைக்கும் பணியில் களமிறங்கி வேக நடை போடுகிறது பெரியாரின் வழியில்!
இட ஒதுக்கீட்டு சமூக நீதிப் போராட்ட நீண்ட நெடிய வழித்தடங்களில் வந்து தடுக்கும் சூழ்ச்சிகளை நெம்பித் தள்ளி நீக்கும் நிகரற்ற வாழ்நாள் போராளியாக பெரியாரின் பெரும் பணியை பிசிறின்றி தொடர்கின்ற நம் தலைவர் அய்யாவின் அடிச்சுவட்டில் அர்ப்பணித்துக்கொண்ட ஆசிரியர் அடியெடுத்து வைக்கிறார் அகவை எண்பத்து எட்டில்.
நூற்றாண்டு களம்கண்ட இயக்கத்தைக் கண்டு ஜாதி ஒழிய என்ன செய்துவிட்டது என்று ஏவப்படும் கணைக ளுக்கு, அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் மாதம்தோறும் பெரியார் திடலில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் சார்பில் தமிழர் தலைவரின் வழிகாட்டுதலில், மேற் பார்வையில், நெறிப்படுத்துதலில் நடக்கும் அய்ம்பதிற்கும் மேற்பட்ட ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வுகள் பதிலடி சொல்லும்!
தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமண ஏற்பாட்டு முறையும் அதன் வெற்றியும் நம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் நடத்தி வைக்கப்பட்ட பல்லாயிரம் சுயமரியாதைத் திருமணங்களும் ஜாதி ஒழிப்புப் பெரும் புரட்சிக்கு கட்டியம் சொல்லும்! அத்தகைய பெருமை மிக்க பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் சார்பில் "வாழும் வாழ்நாள் போராளி" நம் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை உளமார வழங்குகின்றோம்!
பெரியாரின் பெரும் பணியை...
- ஜெயராஜ், கணக்குப் பிரிவு
பெரியாரின் பெரும் பணியை தொடரும் தொண்டர் களுக்கும் தொண்டராக திகழும் ஆசிரியர் அய்யா அவர்கள் பொதுக்கூட்டம் மாநாடு மற்றும் பொது நிகழ்வுகளுக்கு சென்று அலுவலகத்திற்கு வரும் போது முதலில் அவர் களிடம் தோழர்கள் கொடுத்து இருக்கும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தா தொகை நன்கொடைகள் அனைத்தையும் கணக்கு பிரிவில் கொடுத்து வங்கியில் கட்ட சொல்வார்கள். அதோடு மறந்து விடாமல் அதில் சிறு தொகை ரூபாய் 5, 10 கொடுத்திருக்கும் தோழர்களின் பெயரை குறிப்பிட்டு வரவு வைக்கவும் சொல்லும்போது தந்தை பெரியாரின் சாயல் பிரதிபலிப்பில் மனம் நெகிழ்ந்து அதோடு அடுத்த நாள் காலை வந்தவுடன் எங்களை அழைத்து விசாரிக்கும் கேள்வி கொடுத்த நன்கொடைகள் சரியாக இருந்தனவா, அனைத்தையும் வரவு வைத்து விட்டீர்களா என்று கேட்பார்.
நாங்களும் இதன் மூலம் நாங்கள் எப்படி பொறுப்புடனும் கண்ணியத்துடனும் எங்கள் அலுவலக பணிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிய வகையில் ஆசிரியர் அவர்கள் செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
நாம் எப்பாடு பட்டாவது விடுதலை பத்திரிகையை நடத்த வேண்டும் என்பதில் அவர் காட்டும் வேகம் உறுதி ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
அலுவலக பணி என்றாலும் மிக எளிதாக எங்களுக்கு உதவுவார். எதுவும் தடையில்லாமல் காசோலையில் கையெ ழுத்து இடவும் மற்றும் சொத்து வரி, பாதாள சாக்கடை டிடிஎஸ், ஜிஎஸ்டி போன்ற வரிகளை காலதாமதம் செய்யா மல் எந்த பாக்கித் தொகையும் இல்லாமல் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
தொண்டர்களின் பாதுகாவலர்
- சு.அன்புச் செல்வன், பெரியார் திடல்.
நான் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவன்.
இன்று வட சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளராக பொறுப்பு ஏற்று பணியாற்றி வருகிறேன். சென்னை - பெரியார் திடலில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு தொண்டன் மீதும் அவனது வளர்ச்சியிலும் நல் வாழ்விலும் தனி அக்கறை செலுத்தும் தலைவர் நம் தமிழர் தலைவர். என் போன்ற தொண்டர்கள் வாழ்க்கையில் முன்னேறவும், தன்மானத்தோடும் ஒழுக்கத் தோடு வாழவும் தமிழர் தலைவரின் அரிய அறிவுரைகளும் உதவிகளும் அரும் பெரும் வாய்ப்பாக கிடைக்கின்றன. குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகளை செய்து எனது வாழ்விணையரின் உயிரைக் காப்பாற்றித் தந்தவர். அய்யா அவர்கள் பிள்ளைகளின் கல்வி உள்பட அனைத்திலும் அக்கறை செலுத்தி விபரங்கள் கேட்பார். அவர் அளிக்கும் ஊக்கம்தான் தொண்டர் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியதால் இன்று தன்மானத்தோடு வருகிறேன். திடலில் பணியாளராக இருந்து வந்த நிலையில்
1996ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து தமிழர் தலைவர் ஆசிரியருடன் வேலூர் சிறையில் இருக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். ‘முருகனாக‘ சிறைக் குச் சென்று ‘அன்புச்செல்வன்' ஆக திரும்பி வந்தேன். எனக்குப் பெயர் மாற்றி சில ஆண்டுகளில் என் பிள்ளை களுக்கும் தமிழர் தலைவரே பெயர் வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு அரிய வாய்ப்பாகும்.
தொண்டர்களின் பாதுகாவலரான தமிழர் தலைவருக்கு எங்களது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்
இ.மகேஷ்வரன் (மென் பொறியாளர்)
நான் நமது ஆசிரியரின் தொன்டன், ஏனென்றால் அவர் எங்கள் மீது காட்டும் பாசமும் அன்பும் என்னை ஆட் கொள்கிறது. கரோனா காலகட்டத்தில் அவர்களின் ஆர்வமும் கழகத் தோழர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர் ஆற்றிய தொண்டு ஆச்சிரியமூட்டுகிறது.
தினமும் காலையிலும் மாலையிலும் கழக கூட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து தோழர்களின் வீடுகளிலும் இணையம் வழியாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இல்லம் எங்கும் கருத்துக்களையும் ஒவ்வொருவரின் மீதும் அக்கறை செலுத்துவதிலும் பற்று கொண்டவராய் திகழ்கிறார் நமது ஆசிரியர்.
கரோனா காலகட்டத்தில் திடலில் தங்கியுள்ள அனைத்து பணித் தோழர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு சொன் னதோடு மட்டுமல்லாமல் வீட்டில் தங்கியுள்ள பிள்ளைக ளுக்கு தனது பெற்றோர் எவ்வாறு பாதுகாத்து தேவையான வற்றை செய்வார்களோ அதுபோல அனைவருக்கும் மாஸ்க், சானிடைசர் போன்ற பல மருத்துவ உபகரணங்களை அளித்தார்கள்.
என்றும் நமது ஆசிரியர் அவர்களுக்கு நன்றி செலுத்த கடமைபட்டுள்ளோம்.
தலைவர் பல்லாண்டுகள் நீடு வாழ்க!
-அசோக், ஓட்டுநர்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஓர் ஒப்பற்ற தலைவர். அவர்களது பண்பு நலன்களையும் மனிதநேய சிந்தனை செயல்பாடுகளையும் அருகிலிருந்து கண்டு சிலிர்த்திருக்கிறேன். எளிய மக்களின் தோழராக என்றும் விளங்குபவர். தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் விட மிகச் சிறந்த மக்கள் தலைவர். ஏராளமான எடுத்துக் காட்டுகளை சொல்ல முடியும்.
ஆட்டோ ஓட்டும் எனது நண்பர் இக்பால் என்னும் இஸ்லாமிய தோழர் ஒரு முறை என்னிடம் ஆசிரியர் அவர்களுக்கு, தாம் நடத்தி வைக்காத திருமணங்களுக்கு செல்லும் பழக்கம் உண்டா என்று என்னிடம் கேட்டார். கண்டிப்பாகப் செல்வார் என்று பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருநாள் அவரது மகள் திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு தலைவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஆசிரியர் அந்த தேதியை குறித்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார். சரியாக அந்த நாள் வந்ததும் தாம்பரம் மாவட்ட கழக பொறுப்பாளர்களான தோழர்கள் ப.முத்தை யன், ஆர்டி வீரபத்திரன் உள்ளிட்ட ஏராளமான தோழர்க ளுடன் அந்த திருமணத்திற்கு திடீரென்று நேரடியாக சென்று வாழ்த்தினார். தோழர் இக்பால் இன்ப அதிர்ச்சியில் உறைந்து விட்டார். அவரது உறவினர் வட்டத்திலும் இப்படி ஒரு தலைவர் தமிழகத்தில் இருக்கின்றாரா என்று அதிர்ந்து போய் விட்டார்கள். இப்படி நூற்றுக்கணக்கான செய்திகள் அனுபவங்கள் எனக்கு மட்டுமே உள்ளன. ஆயிரக்கணக் கான தோழர்கள் இதுபோன்ற ஏராளமான தனித்தனி அனுபவங்களை கொண்டவர்களாக உள்ளனர். அத்தகைய ஒரு மாபெரும் தலைவரின் அருகில் இருக்கிறோம் என்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் பெருமையாகும்.
தலைவர் பல்லாண்டுகள் நீடு வாழ நெஞ்சம் இனிக்க வாழ்த்துகிறேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment