டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
- வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
- சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி,வேளாண் சட்டத்தை ரத்து செய்திட மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- வேளாண் சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கும் பெரும் நிறுவனங்களுக்குமே சாதகமாக இருக்கும் என்ற விவசாயிகளின் கவலையை மத்திய அரசு கவனத்தில் எடுத்து தீர்வு காணவேண்டும் என பேராசிரியர் சுச்சா சிங் கில் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- இரு மதத்தைச் சேர்ந்தவர்களின் ஒப்புதலுடன் நடைபெற இருந்த திருமணத்தை, உ.பி. காவல் துறை அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சுட்டிக் காட்டி, நிறுத்தியுள்ளது.
- வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிரோமணி அகாலி தளத் தலைவர் பர்காஷ் சிங் பாதல் தனக்கு மத்திய அரசு அளித்த பத்ம விபூஷண் விருதை திரும்ப அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, சுக்தேவ் சிங் தின்ஷா, எம்.பி. தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருத்டை திரும்ப அளிக்க உள்ளார்.
குடந்தை கருணா
4.12.2020
No comments:
Post a Comment