31சி சட்டம் தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறை வேறியபின் புதுடில்லி சென்று 6.4.1994இல் மய்ய அரசின் சமூக நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சீதாராம் கேசரி அவர்களைக் கண்டோம். பிரதம அமைச்சருக்கும் மய்ய அரசுக்கும் கேசரி அவர் களுக்கும் பொதுச் செயலாளர் செலுத்திய நன்றியை மிக மகிழ்வுடன் ஏற்றார். சமூகநீதிக் கொள்கை முழு வெற்றி அடையத் தன் ஒத்துழைப்பை தொடர்ந்து அளிப்பதாக உறுதி யளித்தார். வாய்ப்புகளை இழந்து விட்ட சமுதாயத்தார் இன்னும் போதிய அளவுக்கு விழிப்புணர் வைப் பெற வேண்டும் எனும் பேச்சு வந்தபொழுது கேசரி அவர்கள் நமது தலைவர் வீரமணி அவர்களை நோக்கி இவ்வாறு கூறினார். ஆனால், விழிப்படையச் செய்பவர்கள் நீங்கள் தானே! (But you are the awakenerஷீ) என்றார் பண்டித நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் காலத்திலேயே இடஒதுக்கீட்டிற்குக் குரல் கொடுத் தது, முதல் அரசியல் சட்டத் திருத்தத்திற்குப் பெரியார் காரணமான வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
ஏப்ரல் 7இல் சமூகநீதி இயக்கக் கலந்துரையாடல் கூட்டம் முடிந்த பின்பு முன்னாள் குடியரசுத் தலை வர் கியானி ஜெயில்சிங் அவர்களைக் கண்டோம். மண்டல் பரிந்துரை அளித்த நாளில் இருந்து, இயலும் வகையில் எல்லாம் அதை நடைமுறைப்படுத்த அவர் முயன்றார் என்பதை நாடு அறியும். அவருக்கு நன்றி செலுத்தியபொழுது, தாம் பஞ்சாப் முதல மைச்சராக இருந்ததையும் "மய்ய அரசில் உள்துறை அமைச்சராக இருந்ததையும் நினைவுபடுத்திக் கொண்டு இவ்வாறு கூறினார். ஒரு முதலமைச்சர், ஒரு உள்துறை அமைச்சர் செய்வதற்கு மேலாக இக் காரியத்தில் உங்கள் இயக்கம், நீங்களும் செய்கிறீர்கள்" என்றார்.
- (டில்லிக்கு பொதுச்செயலாளருடன் சென்றிருந்த பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் விடுதலை ஏட்டில் (11.4.1994) எழுதிய கட்டுரையிலிருந்து...)
No comments:
Post a Comment