சென்னை, டிச. 4- சென்னை - அண்ணா அறிவாலயம் தி.மு. கழக அலுவலகத்தில், நேற்று (3.12.2020) மாலை செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி. முதலமைச்சர் எடப்பாடிக்கு பகிரங்க சவால் விடுத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு இடைவெளியால் சசிகலா காலைத் தொட்டுத் தொட்டு தவழ்ந்து தவழ்ந்து நக்கி நக்கி முதலமைச்சராக வந்த முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய தகுதியைத் தாண்டி பல்வேறு குற்றச் சாட்டுகளைச் சொல்லுகிற பொழுது, சர்க்காரியா கமிச னில் தி.மு.க. விஞ்ஞான ரீதி யாக ஊழல் செய்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதை, தொடர்ந்து அவர் சொல்லிக் கொண்டு வருவதோடு மட்டுமல்ல, அவரு டைய இயக்கத்தில் இருப்பவர்களும் சொல் லிக் கொண்டு வருகிறார்கள்.
நான் அந்தக் குற்றச்சாட்டுக்கு மட்டுமல்ல; எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள படியே ஆட்சித் திறனோ, நேர்மைத் திண் மையோ இருக்குமேயானால், இன்றைக்கு சவால் விடுகிறேன்; 2ஜி உள்பட; ஏதாவது ஒரு குற்றச்சாட்டில், தி.மு.க. மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது; அது நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது என்று அவர் சொல்லுவாரேயானால், சொல் வதற்கு அவருக்கு மன வலிமை இருக்குமேயானால், நாளைக்கோ, நாளை மறு நாளோ கோட்டையில், அவர் குறித்த நேரத்தில், ஆ.இராசா, தி.மு.க. சார்பில், எடப்பாடி பழனிசாமியோடு அமர்ந்து, இத்தனை பேர் முன்னிலை யில், இன்னும் சொல்லப்போ னால், இந்தியாவில் உள்ள அத்தனை தொலைக்காட்சி கள் முன்னிலையிலும், விவா திக்கத் தயாராக உள்ளேன். எது 2ஜி? எது சர்க்காரியா என்றெல்லாம் விவாதிக்கலாம், உங்களுடைய அம்மா ஜெயலலிதாவின்மீது உச்சநீதிமன்றம் கடைசியாக என்ன சொல்லியிருக்கிறது?
எடப்பாடி பழனிசாமிக்கு பகிரங்க சவால்!
அ.தி.மு.க. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஊழல் கட்சியா? தி.மு.க. ஊழல் கட்சியா? என்பதை மன வலிமை இருந்தால், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குப் பகிரங்கமாக சவால் விடுகிறேன்.
இரண்டு நாள்களோ, மூன்று நாள்களோ, எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் அமைச் சரவையை ஒட்டுமொத்தமாகக் கூட்டுங் கள்; உங்களுடைய அட்டானி ஜெனரலை, அட்வகேட் ஜெனரலை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லா சரத்துகளையும் நானும் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று இந்த செய்தியாளர்களின் சந்திப்பில் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அ.தி.மு.க.வினுடைய எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில், ஜெயலலிதாவினுடைய படத்தை முன்வைத்து, ‘இது அம்மா ஆட்சி’ என்று சொல்கிறார்கள்.
அம்மா ஆட்சி என்றால்
தமிழன் தலைகுனிய வேண்டும்!
இது, உள்ளபடியே தமிழ் ரத்தம் ஊறக் கூடிய தமிழனாக இருந்தால், அந்தப் படத்தைப் பார்க்கின்ற ஒவ்வொரு தமிழனும் தலைகுனிய வேண்டும்.
ஏனென்றால், உச்சநீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால், சசிகலா வையோ, இளவரசியையோ, சுதாகர னையோ போயஸ் கார்டனுக்கு ஜெயலலிதா அழைத்துக் கொண்டு போனது, 'நாட் ஆன் தி ஹியூமானிட்டேரியன் கிரவுண்ட்' என்று எடுத்துக் கொள்ளலாம்.ஒரு மனிதாபிமான அடிப்படையில் சசிகலாவையோ, இளவரசியையோ, சுதாகரனையோ, ஜெயலலிதா தனது வீட்டுக்கு அழைக்கவில்லை. ‘சோஷி யல் லிவ்விங்’ (சேர்ந்து வாழலாம்) என்கிற நல்லெண்ணத்திலும் கூப்பிட வில்லை - நான் சொல்லவில்லை உச்சநீதிமன்றத் தீர்ப்பு - மனிதாபி மான அடிப்படையில் அவர்களோடு சேர்ந்து வாழவில்லை. தனக்கு துணையில்லை, சேர்ந்து வாழலாம் என்றும் அவர்களைக் கூப்பிட்டு வாழவில்லை.
ஆனால், அவர் என்ன செய்திருக் கிறார் என்றால், கொள்ளையடிப்பதற் காக அழைத்துப் போயிருக்கிறார்.
அதாவது அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்ற, ஜன நாயக மாண்பிற்கு அடிநாதமாக இருக்கின்ற அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்த கொள்ளைக்காரி ஜெயலலிதா என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
ஜெயலலிதாவை, அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி என்று நான் சொல்லவில்லை, உச்சநீதிமன்றம் சொல்லியிருக் கிறது.
அரசியல் சட்டத்தைப்
படுகொலை செய்த அம்மையார்!
இதனை நான் பலமுறை சொல்லி யிருக்கிறேன். உனக்கு யோக்கியதை இருந்தால், என்மீது வழக்குத் தொடுக் கலாம் என்றும் சொல்லியிருக்கிறேன்.
அப்படி, அரசியல் சட்டத்தைப் படுகொலை செய்த ஒரு அம்மை யாரின் படத்தை வைத்துக்கொண்டு, அந்த அம்மையாருடைய ஆசைப்படி தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம் என்றால், இதைவிட ஒரு ஊழல் ஆட்சி வேறு எங்கேயாவது உண்டா? தி.மு.க.மீது குறை சொல்வதற்கு இவர் களுக்கு யோக்கியதை இருக்கிறதா?
எனவே, உச்சநீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட தோடு, 100 கோடி ரூபாயை ஜெய லலிதாவினுடைய சொத்துக்களில் இருந்து வசூல் செய்வதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றபொழுது,
உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்ட ஒரு அரசியல் கட்சியினுடைய தலைவர், அந்தக் கட்சியினுடைய முதலமைச்சராக இருந்து கொண்டு, தி.மு.க.வை குற்றம் சாட்டுவது, மல்லாக்கப் படுத்துக்கொண்டு, தன்மீதே எச்சில் துப்புவது மட்டுமல்ல, மலத்தைக் கொட்டிக் கொள்வது போல இருக்கிறது என்பதை நான் மிகுந்த பணிவன்போடும், அடக்கத் தோடும், பொறுப்புணர்ச்சியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்குப் பிறகு முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் எந்தவிதப் பிரச்சினை யும் இல்லை என்கிறார்.
உங்களுக்கெல்லாம் தெரியும், வடநாடு முழுக்க, ஏன், ஆந்திரா, கருநாடகா வரையில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்குப் பின்னால், எந்த அரசியல் கட்சியும் இல்லை. இதுவரையில் எந்த அரசியல் கட்சியும் அவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்கள் உண்ணாவிரதம் இருக் கின்ற பகுதிக்கோ, அவர்கள் போராடு கின்ற பகுதிக்கோ சென்று தங்களு டைய தார்மிக ஆதரவைக்கூட தரவேண்டும் என்று விவசாயிகள் விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களு டைய தார்மிக ஆதரவை வெளியில் இருந்து அறிக்கை வாயிலாகத் தந்திருக்கிறார்கள்.
விவசாயிகளை ஆதரித்து
திமுக தலைவர் அறிக்கை!
அரசியல் கலப்பற்ற ஒரு மிகப் பெரிய போராட்டம் வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவில் இருக்கின்ற ஆந்திரா வரை வந்துவிட்ட தற்குப் பிறகு, அந்த விவசாயிகளை ஆதரித்து, எங்களுடைய தலைவர் அறிக்கை கொடுத்தால், அந்த அறிக்கை தவறு, அவருக்குப் போது மான புரிதல் இல்லை என்று சொல்லு கிறார்கள்.
நான் முதலமைச்சரைக் கேட்க விரும்புவதெல்லாம், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டத்திலும், குறைந்தபட்ச ஆதார விலை என் கின்ற ஒரு வார்த்தை எங்காவது இருக்கின்றதா?
தமிழ்நாடு உள்பட, வேளாண்மை யில் சிறந்து விளங்குகின்ற, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்து தொடங்கப்பட்ட, ஒழுங்கு முறை வேளாண் விற்பனைக் கூடங் கள் அல்லது தனியார் மண்டிகள், அல்லது மாநில அரசால் நடத்தப்படு கின்ற வேளாண் ஒழுங்குமுறைக் கூடங்களையெல்லாம் எடுத்துவிட்டு, நேரடியாகவே தனியார், விவசாயி களைப் பார்த்து ஒப்பந்தங்களைப் போட்டுக்கொண்டு, அவர்களுடைய விளைபொருள்களை நாங்களே இந்த விலைக்குத்தான் வாங்குவோம் என்று சொல்லுகின்ற ஒரு மோசமான சூழலை உருவாக்கியிருக்கின்ற சட்டத்தை - மக்கள் விரோதச் சட்டம் என்று சொல்லாமல் - விவசாய விரோதச் சட்டம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
மத்திய அரசின் கைக்கூலி முதலமைச்சர்!
இதைக்கூட புரிந்துகொள்ள முடி யாத ஒரு முதலமைச்சர், இந்தச் சட்டத்தில் எந்தத் தவறும் நடைபெற வில்லை என்று சொல்வதோடு மட்டு மல்லாமல்;
மத்திய அரசிற்குக் கைக்கூலி யாக, கைகட்டி நிற்கக்கூடிய ஒரு முதலமைச்சர், மத்திய அரசாங்கம் அந்தச் சட்டங்களை இயற்றுவதற்கு முன்பே, அதேபோல ஒரு சட்டத்தை இங்கேயும் நிறைவேற்றி, தன்னுடைய வாலை ஆட்டி, நான் விசுவாசமான விலங்குதான் உங்களுக்கு என்பதை மோடிக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லியிருக்கிறார் என்றே நான் கருதுகின்றேன்.
அதேபோல, ஊழல் குற்றச்சாட்டு களை இங்கே பட்டியலிட விரும்பு கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆர்.எஸ். பாரதி அவர்கள், உங்கள்மீது ஊழல் குற்றச் சாட்டு களை சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுக்கடுக்காக அடுக்கி, வழக்குத் தொடுத்தபொழுது, அந்த வழக்கை விசாரித்த நீதியரசர் என்ன சொல்லு கிறார் என்றால், பொது வாழ்க்கை யில் ஈடுபடுகின்ற ஒருவருக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுகளை இந்த நீதிமன்றம் படிக்கின்றபொழுது, சி.பி. அய். நடவடிக்கை எடுக்கக்கூடிய அளவிற்கு மிக மோசமான குற்றம் நடைபெற்றிருப்பதற்கான பூர்வாங்கக் காரணங்கள் இருக்கின்றன.
அதை மாநில அரசாங்கம் செய் திருப்பது என்பது, இன்னும் சொல்லப் போனால், அந்த விசாரணையே தேவையில்லை என்று மாநில காவல் துறை சொல்லுகிறது. அப்படி காவல் துறை தள்ளுபடி செய்ததை எதிர்த்து, தி.மு.க. மேல்முறையீடு செய்தபொழுது,
"இல்லை, தவறு. ஒரு முதலமைச் சர் என்பவர் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அந்த உயர்ந்த பதவியில் இருக்கின்றவர் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சொன்னால், மாநில அரசாங் கம் செய்திருக்கும் இந்த முடிவு ஏற்புடையதல்ல; கோப்புகளைப் படிக்கின்ற பொழுதும், என்னிடத்தில் வழங்கப்பட்டு இருக்கின்ற ஆதாரங் களைப் படிக்கின்ற பொழுதும், முதலமைச்சர்மீது போதுமான சான்று கள் உள்ள குற்றச்சாட்டுகள் இருக் கின்றன. அவையெல்லாம் விசாரிக்கத் தக்கவைதான். எனவே, சி.பி.அய். பிரிலிமினரி என்கொயரியைத் தொடங்க வேண்டும்" என்று இந்த முதலமைச்சர்மீது, இங்கே இருக் கின்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்குப் பிறகு;
உங்களுக்குத் துணிவிருந்தால், 2ஜி வழக்கைப்பற்றி குறை சொல்லு கிறீர்களே, அந்த 2ஜி வழக்கில், இந்த இராசா மேல்முறையீட்டு வழக்கிற்குப் போகவில்லை. ஏழாண்டு காலம் நீதிமன்றத்தில் நின்று வாதாடினேன்.
2 ஜி யில் நாட்டுக்குப்
பயனுள்ள எனது கையெழுத்து!
இன்னும் சொல்லப்போனால், பகத்சிங் காலத்திலிருந்து ஜெய லலிதா காலம் வரை, லல்லுபிரசாத் காலம்வரை, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எந்த அமைச்சரும், செய்யாததை நான் செய்தே. சாட்சிப் பெட்டியில் ஏறி, "நான் செய்ததுதான் சரி; 2ஜியில் நான் போட்ட கையெழுத் தெல்லாம் சரிதான். இந்த நாட்டிற்குப் பயன்படக் கூடிய கையெழுத்தைத் தான் நான் போட்டேன். நான் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் சட்டப்படி சரியானது" என்று சொன் னேன்.
14 நாள்கள் சி.பி.அய். என்னை குறுக்கு விசாரணை செய்யும் வகை யில், நானே கூண்டேறினேன்.
நான் முதலமைச்சருக்குப் பதில் சொல்ல விரும்புகிறேன்.
உங்கள் அம்மாவுக்கும், உங்கள் ஆத்தாவுக்கும் அந்தத் தகுதியில்லை. 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் இழுத் தடித்தார்கள். சாட்சிக் கூண்டிற்குப் போகவில்லை.
வழக்கைச் சந்திக்கத் தயாரா?
நான் இப்போது சொல்கிறேன், உங்கள்மீது சொல்லப்பட்ட குற்றச் சாட்டுகளுக்கு, உச்சநீதிமன்றம் போட்ட தடையை விலக்கிக் கொண்டு, நீங்களே சாட்சிப் பெட்டியில் ஏறி, "ஆர்.எஸ்.பாரதி போட்ட வழக்கு, தி.மு.க. போட்ட வழக்கு தவறுதான்; நான் என்னைக் குற்றவாளியல்ல என்று நிரூபித்துக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். நான் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறேன். நான் நிரபராதி, நான் யோக்கியன்"" என்று சொல்வதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்குமேயானால், உச்சநீதிமன்றத்தில் நீங்கள் பெற் றிருக்கின்ற தடை ஆணையை அகற்றிவிட்டு, உடனடியாக அந்த வழக்கைச் சந்திக்கத் தயாரா?
ஏனென்றால், 2ஜி வழக்கில் மிகத் தெளிவாக, நீதிபதி சொல்கிறார், "ஏழாண்டு காலம் காத்திருந்தேன்; எந்த ஆதாரமும் எங்களுக்கு வர வில்லை. யாரும் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக, இராசா சாட்சிக் கூண்டில் நிற்கிறார். அவர் சொன்ன தெல்லாம், கோப்புகளின்படி சரியாக இருக்கிறது"" என்று சொன்னதோடு மட்டுமல்ல;
"சில கோப்புகளை சரிவரப் படிக்கத் தவறிவிட்டார்கள்;
சில கோப்புகளைப் படிக்காமலே விட்டுவிட்டார்கள்;
சில கோப்புகளைத் தவறாகப் படித்திருக்கிறார்கள்;
சில கோப்புகளைத் தேர்ந்தெடுத்து, அதை மட்டுமே படித்திருக்கிறார்கள்.
இதனால்தான், இந்த வழக்கு இங்கே வந்திருக்கிறது. இந்த வழக்கு தவறு. இந்த வழக்கு, சில நிறுவனங் களையே திகைக்க வைத்துவிட்டது." சில நிறுவனங்கள் என்று நீதிபதி ஓ.பி.சைனி சொல்வது, சி.ஏ.ஜி. வினோத் ராய் அவர்களையும், உச்ச நீதிமன் றத்தையும் தவறுதலாக வழி நடத்திவிட்டது என்று, தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்ற அந்தத் தீர்ப்பு - இன்னும் அப்பீல் நெம்பர்கூட ஆகவில்லை. தீர்ப்பு வந்து விட்டது.
அப்பீலே நெம்பர் ஆகாத ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு, ஒரு முதலமைச்சர் தற்குறித்தனமாக, 2ஜி வழக்கில் அது இருக்கிறது, இது இருக்கிறது என்று சொல்கிறார், அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆன பிறகு!
சின்னம்மாவின் காலை நக்கி
முதலமைச்சரானவர்!
உங்கள் அம்மா குற்றவாளி, உங்கள் அம்மாவிடமிருந்து 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார்கள்; உங்கள் சின்னம்மா விடமிருந்து 10 கோடி ரூபாயை வசூல் செய்திருக் கிறார்கள். எந்த சின்னம்மாவின் காலை நக்கி முதலமைச்சராக ஆனாயோ, அந்த அம்மா உள்ளே இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், அந்த அம்மா குற்றவாளியல்ல; இந்த அம்மாவைக் குற்றவாளியாக்கியது பெரியம்மாதான் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள்.
உடனடியாக மன்னிப்பு
கேட்க வேண்டும்!
இவ்வளவையும் வைத்துக் கொண்டு, நீங்கள் தி.மு.க.மீது குறை சொல்வதும், தி.மு.க. தலைவர்மீது குறை சொல்வதும், 2ஜி வழக்கை குறை சொல்வதும் எந்த விதத்திலும் நியாயமல்ல. உடனடியாக நீங்கள் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
ஒன்று, மன்னிப்புக் கேளுங்கள்; இல்லையென்றால், உங்களுக்கு மனவலிமை இருந்தால், என்னை தயவு செய்து கோட்டைக்கு அழை யுங்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற, இந்தியாவில் இருக்கின்ற அனைத்து ஊடகங்களையும், பத்திரிகைகளை யும் கூட்டுங்கள்;
யார் குற்றவாளி? யார் ஊழல்வாதி?
2ஜியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
2ஜி வழக்கின் தீர்ப்பு என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?
அந்தத் தீர்ப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதே, அதைப் படித்திருக்கிறீர் களா? உங்களால் ஆங்கிலம் படிக்க முடியவில்லை என்றால், - தவ றில்லை, அது ஒரு குறையில்லை - அந்தத் தீர்ப்பை அதிகாரிகளிடம் கொடுத்துப் படித்தீர்களா?
உங்களுக்கு, இந்தப் பேட்டிக்கான ஆதாரத்தைக் கொடுத்தது யார்?
இவற்றையெல்லாம் பகிரங்கமாக வெளியிடத் தயாரா - என்று நான் சவால் விடுகிறேன்.
பா.ஜ.க. வுக்கு ஏஜண்ட், அடியாள்
என முதலமைச்சரே ஒப்புதல்!
செய்தியாளர்: வேளாண் சட்டங் களைப் பொறுத்தவரையில் அதில் என்ன குறை இருக்கிறது என்பதைப் பற்றி நேரிடையாகச் சொல்லுங் களேன். அதில் குறையேதும் இல்லை; இதுபோன்ற விசயங்களை பா.ஜ.க. தான் மக்களிடம் கொண்டு போக வேண்டும்; ஆனால், நான்தான் மக்களிடம் கொண்டு போகிறேன் என்று சொல்லியிருக்கிறாரே, முதலமைச்சர்?
ஆ.இராசா: அவரே ஒப்புக்கொள் கிறார். பா.ஜ.க.விற்கு நான்தான் வக்காலத்து; பா.ஜ.க.விற்கு நான்தான் ஏஜெண்டு. தமிழ்நாட்டைப் பொறுத் தவரையில், பா.ஜ.க.விற்கு நான்தான் அடியாள்.
பா.ஜ.க. என்ன சொல்கிறதோ, அதனைச் செய்வதற்கு, நான்தான் அடியாள் என்பதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் நேரிடை யாக, வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்காக நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.
ஏனென்றால், எந்த ஒரு முதல மைச்சரும், பா.ஜ.க. சொல்ல வேண்டியதைத்தான் நான் சொல் கிறேன் என்று சொல்வதற்கு, வெட்கப்படவேண்டும். ஏனென்றால், அது வேறு கட்சி; கூட்டணியில் இருந்தாலும், அது வேறு கட்சிதான்.
ஆனால், அந்தக் கட்சி செய்த தவறையெல்லாம் நான் ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு, கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால் அப்படிச் சொல்ல மாட்டார். அது அவருக்கு இல்லை, அது வேறு விஷயம்.
நம்மில் பாதி பேர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருப்போம். நான் விவசாயி னுடைய பிள்ளை; எங்கள் அப்பா விவசாயி. நான் ஏர் ஓட்டியிருக் கிறேன், மண் வெட்டி எடுத்துப் பணியாற்றி இருக்கிறேன். நான் படித்ததெல்லாம் அரசாங்கப் பள்ளிக் கூடம் தான்; அரசுக் கல்லூரிதான். மழைக்குக்கூட தனியார் பள்ளி யிலோ, தனியார் கல்லூரியிலோ ஒதுங்கியது கிடையாது.
குறைந்தபட்ச ஆதாரவிலை கொடுக்கவும்!
நான் சொல்கிறேன், எங்கள் தாத்தா காலத்திலிருந்து, எங்கள் அப்பா காலத்திலிருந்து நாங்கள் கேட்பதெல்லாம், நாங்கள் விளைவிக் கின்ற பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுங்கள். ஒழுங் காக விற்றுக் கொடுப்பதற்கு ஒரு கூடம் இருக்கவேண்டும். நம்முடைய விளை பொருள்களை எடுத்துக் கொண்டு போய் மண்டியில் வைத் தால், அதனை விற்றுக் கொடுக்க வேண்டும். அதற்காக கமிசன் கொடுப்பார்கள்.
நான் எங்களுடைய வயலில் விளைந்த வெங்காயத்தை எடுத்துக் கொண்டு போய் மண்டியில் போடுவேன். அங்கே ஆயிரக்கணக் கானோர் வருவார்கள் அதனை வாங்குவதற்கு, பொருளின் தரத்தைப் பார்த்து விலை கேட்பார்கள்; மண்டிக் காரர், இந்த விலைக்குக் கேட்கிறார் கள்; கொடுக்கலாமா? என்று கேட்பார்.
அதற்குரிய கமிசனை எடுத்துக் கொண்டு பணத்தை எங்களிடம் கொடுத்து விடுவார்கள்.
இன்றைக்கு மண்டி கிடையாது; அதைவிட கொடுமை என்னவென் றால், நீங்கள் அதானியிடமும், அம்பானியிடமும் நேரிடையாக நிலத்தைக் கொடுத்துவிட்டால், பி.டி.எஸ். சிஸ்டம் என்னவாகும்?
தமிழ்நாடுதான், யுனிக் ஃபார் பி.டி.எஸ். சிஸ்டம். தமிழ்நாடுதான் பொது விநியோகத் திட்டத்திற்குப் பெயர் போனதாகும். உச்சநீதி மன்றமே, அதற்காக தி.மு.க. அரசாங் கத்தைப் பாராட்டியிருக்கிறது.
ஆக, அந்தத் திட்டம் என்னாகும்?
மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று சொல்கிறாயே, நீ முதலமைச்சரா? குறைந்த பட்ச ஆதார விலை இல்லை - ஒழுங்கு முறை கூடம் இல்லை. ஆக, பி.டி.எஸ். என்னாகும் என்று உனக்குத் தெரி யாது.
ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு, பா.ஜ.க.வின் பின் பொறியைப் பிடித்து கழுவிக் கொண்டிருக்கிறாய் என்று தெரியவில்லை.
தமிழக ஆட்சியாளர்கள் மீது
சி.பி.ஐ. நெருக்குதல்!
தமிழக ஆட்சியாளர்கள் எல்லோர் மீதும் வழக்கு இருக் கிறது; சி.பி.அய். ரெய்டு செய்த ஆதாரங்களை வைத்திருக் கிறார்கள்.
எனவே, அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் மத்திய அரசாங்கம், தமிழக ஆட்சியாளர் களை நெருக்குகிறார்கள். அப்படி இல்லையென்றால், மத்திய உள்துறை அமைச்சர் தமிழகத்திற்கு வரும் பொழுது, ஒட்டுமொத்த கேபி னெட்டே சென்று குலுங்கி நின்று வரவேற்ற கேவலத்தைப் பார்த்திருக் கிறீர்களா?
இந்தியாவினுடைய ஜனாதிபதி வந்தபொழுதே, ஒரு அமைச்சரைத் தான் முதலமைச்சர் கலைஞர் அனுப்பினார்.
முதலமைச்சரின் ஈனப் பிழைப்பு!
வெங்கட்ராமன், ஜனாதிபதியாக இருந்த பொழுது தமிழகத் திற்கு வந்தபொழுது, அமைச்சரவை சார் பாக, ஒரு அமைச்சரைத் தான் அனுப்பினார் கலைஞர் அவர்கள். தமிழ்நாடு அமைச்சர வைக்கு என்று ஒரு கவுரவம் இருக்கிறது.
அந்தக் கவுரத்தையெல்லாம் தொலைத்து விட்டு, ஒரு ஈனப் பிழைப்பை நடத்திக் கொண்டிருக் கின்ற முதலமைச்சர், தான்தோன்றித் தனமாக, யாரோ எழுதிக் கொடுத்தை வைத்துக்கொண்டு பேட்டியளிப்பது என்பது நம்முடைய ஜனநாயகத்திற்கு, நம்முடைய தமிழ்நாட்டின் அரசியல் மாண்பிற்கு நல்லதல்ல!
இவ்வாறு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா எம்.பி., பேட்டியின் போது குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment