ஆசிரியர் எனும் நூலகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 5, 2020

ஆசிரியர் எனும் நூலகம்


இவரது விழிகள்


எறும்பாய் எப்போதும்


ஊறிக் கொண்டேயிருக்கின்றன


புத்தகங்கள் மீது!


பொழுது போக்கப்


புத்தகம் படிப்பவரல்ல


சமூகப் பழுது நீக்க


புத்தகம் படிப்பவர்!


எதிரிகளின்


குற்றச்சாட்டுகளை


அவர்களின் புத்தகம் கொண்டே


நொறுக்கிடும் ஆற்றலாளர்!


புத்தகங்கள் இல்லாமல்


இவரின் பயண வாகனம்


ஒரு நாளும் ஓர் அடியும்


நகர்ந்தது இல்லை!


எத்தனை நிகழ்ச்சிகளில்


கலந்து கொண்டாலும்


புத்தக வெளியீட்டு விழாக்களில்


கூடுதலாய் முகம் பூரித்திருப்பார்!


திருமண நிகழ்ச்சியோ


படத்திறப்பு நிகழ்ச்சியோ


இவரின் ஒலிவாங்கி அருகில்


கொத்தாய் புத்தகங்கள் இருக்கும்!


சிறைப்பட்ட நாட்களில் கூட


தன் சிறை அறையை


நூலக அறையாய்


மாற்றிக் கொண்டவர்!


தன் இரவுகளை


உறக்கத்திற்குத்


தந்ததை விட


புத்தகங்களுக்கே


அதிகம் தந்தவர்!


கீதையின் மறுபக்கம் எனும்


ஒரு புத்தகம் எழுத


ஓராயிரம் புத்தகங்களில்


தரவுகள் தேடியவர்!


இவரின் தன்வரலாற்றுப்


புத்தகத்தில் கூட


இயக்க வரலாறுகளே


கொட்டிக் கிடக்கின்றன!


ஆசிரியர்


நடந்து வருகிறார் என்றால்


ஒரு நூலகம் நடந்து வருகிறது


என்று பொருள் ...


- பாசு. ஓவியச்செல்வன்


No comments:

Post a Comment