மதம் ஜாதி மூடச் சழக்கு
பெண்ணடிமை ஆரியம் கடவுள் -
மாய்த்திடக் களமாடிச் சமூகநீதி பகுத்தறிவு -
பாய்ச்சி தன் மானம் -
இன மானம் காத்த -
பெரியாரின் பெருந்தொண்டர் -
அய்யாவின் அணுக்கத் தொண்டர் -
வீண் செயல் எதிலும் வீழ்ந்திடாமல் -
திராவிடர் கழகத்துக்காய் -
திராவிடர் சமுதாயத்திற்காய் -
70 - 75 ஆண்டுக் காலம் -
ஓயாது உழைத்திடும் -
ஒலித்திடும் பகுத்தறிவு மணியோசை -
டிசம்பர் - 2இல் 88ஆவது பிறந்த நாள் காணும் -
ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கு -
ஆரிய ஆதிக்கத்தின் வேரறுக்க -
ஆண்டுகள் நூறைக் கடந்து வாழ -
அன்பின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
அன்புடன்
- மு . பாண்டியன் நெடுஞ்செழியன், பி.ஏ.
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்
No comments:
Post a Comment