- உதயநிதி ஸ்டாலின்
மாநில இளைஞரணி செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு 88ஆவது பிறந்த நாள். அதையொட்டி வெளிவரும் ‘விடுதலை’ சிறப்பு மலரில் எனது கட்டுரையும் வேண்டும் என்று ‘விடுதலை’ ஆசிரியர் குழுவில் இருந்து அழைப்பு வந்தது.
தி.மு.கழகத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்படி ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பிரச்சாரப் பயணத்தில் இருந்த நேரத் தில் இந்த அழைப்பு வந்தது.
எனினும், ஆசிரியரைப் பற்றி அவரது பிறந்த நாளுக்காக உருவாகும் மலரில் எழு துவது எனக்கு பெருமையளிக்கும் ஒன்று என்பதால் எப்படியும் எழுதி அனுப்புவது என்று தீர்மானமாக இருந்தேன்.
தஞ்சை மாவட்டத்தின் கோடியில் உள்ள கடற்கரைக் கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுவிட்டு, மாலை தம்பிக்கோட் டையில் அமர்ந்து ஆசிரியரைப் பற்றி எண் ணியவாறே இந்தக்கட்டுரையை எழுதி னேன்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா- கலைஞர் அவர்களுக் குப்பின் திராவிட இயக்கத்தில் நம்மிடம் நின்று வழி நடத்திக்கொண்டிருக்கிற மூத்த தலைவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
கலைஞர் அவர்களைப் போலவே பள்ளி மாணவராக இருந்த காலத்தில் இருந்தே பொதுவாழ்க்கைக்கு வந்தவர். ‘பெரியாரைப் பேசா நாள் என் வாழ்நாளில் பிறவா நாள்‘ என்று அன்று முதல் இன்றுவரை பெரியாரை - பகுத்தறிவை - சுயமரியாதையை சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு மேல் பேசிக்கொண் டிருக்கிறார்.
தமிழகம் மட்டுமன்றி அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என உலகம் முழுக்க பெரியாரைப் பேசச் செய்தவரும் ஆசிரியர் அவர்களே! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர் மட்டு மின்றி, என்னுடைய ‘கீ (key- சாவி) வீரமணி’ எனப் புகழும் அளவுக்கு ஆசிரியர் அவர்கள் கலைஞர் அவர்களின் செயல் பாடுகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தவர். இன்றும் நம் கழகத்துக்குக் கொள்கை திசைகாட்டியாக இருக்கிறார்.
கழகத் தலைவர் அவர்களுக்கும் ஆசிரி யர் என்றால் அத்தனை மதிப்பு, ஆசிரிய ருக்கும் தலைவர் மீது பெரும் அன்பு உண்டு. ‘எங்கள் பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது‘ என்று தலைவர் சொன் னதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் - தமிழகத்தில் அடிமைகளின் காட் டாட்சி தொடங்கியது முதல் உ.பி., ம.பி.யை சூழ்ந்த மதவெறி மேகங்கள் தமிழகத்தையும் சூழத்தொடங்கிவிட்டன.
மொழித்திணிப்பு, பிற்படுத்தப்பட்ட - பட்டியலின மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் அபாயத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டே உருவாக்கி வருகிறது. குறிப்பிட்ட அரியவகை 10% ஏழைகள் தவிர அனைவரையுமே இரண்டாந்தரக் குடிமக் களாக நடத்துவதை பாஜக விரும்பிச் செய் கிறது.
தினம் விடிந்ததும் இன்றைக்கு என்ன மாதிரியான மக்கள் விரோதத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரப் போகிறது - அதை அதிமுக வாய்பொத்தி ஆதரிக்கப் போகிறது என்ற அச்சத்துடனுடன் தான் மக் கள் தங்கள் நாள்களை தொடங்குகிறார்கள்.
இதுமாதிரியான பல விஷயங்களில் ஆசிரியர் அவர்கள் என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றுகிறார் என நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம்.
அவருடைய அறிக்கைகள் ஆனாலும் சரி, பேச்சானாலும் சரி, அதிலுள்ள செறிவும், கருத்து ஆழமும், எனக்குப் பல நேரங்களில் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே இருந் திருக்கின்றன.
எவ்வளவு இடங்களில் பேசினாலும், பெரியார் திடலில் பேசுவது என்பது என் வாழ்நாளில் திரும்பத் திரும்ப கிடைக்கும் பெருமையாகவே நான் நினைக்கிறேன். அதற்கு பல நேரங்களில் ஆசிரியர் அவர் கள் களம் அமைத்து தந்திருக்கிறார்.
பல நேரங்களில் திராவிட சித்தாந்தம் சம்பந்தப்பட்ட நுனுக்கமான விஷயங்கள் குறித்தும் ஆசிரியர் அவர்களிடம் ஓர் மாண வனாக கேட்டுத் தெளிந்துள்ளேன்.
நம் கொள்கைகளை அடுத்த தலை முறைக்குக் கடத்தும் பொருட்டு இந்த கரோனா காலத்திலும் zoom meeting வாயிலாக அடிக்கடி உரையாடல், இணையக் கருத்தரங்குகள் போன்றவற்றை ஆசிரியர் நடத்துகிற விதம் - அந்த உழைப்பு எங்களை யும் அவர் வழியில் இழுத்து செல்கிறது.
பெரியாருக்குப்பின் விடுதலையைப் பல நெருக்கடிகளுக்கு இடையேயும் வெற்றிகர மான கொள்கை ஏடாக ஆசிரியர் அவர்கள் நடத்தி வருகிறார். தேர்தல் அரசியலில் பங்கேற்காத ஓர் இயக்கம் தனக்கென ஒரு கொள்கைப் பத்திரிகையை பல பத்தாண்டு களுக்கு மேல் நடத்துவது என்பது மிகப் பெரிய சாதனை. அதை சாதித்து காட்டியவர் ஆசிரியர் அய்யா.
பல நூறு ஆண்டுகளாக நமது தமிழினம் - பண்பாடு - கலாச்சாரம் போன்றவற்றுக்கு எதிராக போர் புரிந்து வரும் அந்தக் கூட்டம் இன்றைக்கு அதிகாரத்தை கையில் வைத் துக்கொண்டு அந்தப் போரைத் துரிதப்படுத் தப்பார்க்கிறது.
அதை தடுத்து நிறுத்தும் வல்லமை திக, திமுக இயக்கங்களுக்கே உண்டு. அதை நாம் செய்தும் வருகிறோம். இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். அந்த துப்பாக்கி இன்றும் பழுதாகாமல் தொடர்ந்து நம் இன எதிரிகளை குறி வைத்துக் கொண் டிருப்பதில் ஆசிரியர் அய்யாவின் பங்கு மகத்தானது.
நம் இலட்சியங்களை முழுமையாக வென்றெடுக்கும் காலம் வரை, நம்மைச் சூழும் சூழ்ச்சிகளை அழித்தொழிக்கும் அந்த நாள் வரை திராவிடக்கொள்கைகளை தூக்கிப்பிடிப்பதில் ஆசிரியர் அவர்களின் கரம்பற்றி வருவேன் என்று இந்த நேரத்தில் உறுதியளிக்கிறேன்.
ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் அவர் தொண்டைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment