எங்கே போய்ச் சொல்லுவதோ?
களக்காட்டூர் வேளாண் துறை அலுவலகக் கட்டடத்தில் கழிப்பறை இல்லாத நிலையில் பக்கத்தில் உள்ள வீட்டின் கழிப்பறையைப் பயன்படுத்தச் சென்ற இடத்தில் மாற்றுத் திறனாளிப் பெண் சரண்யா, மூடப்படாதிருந்த கழிப்பறைத் தொட்டிக்குள் விழுந்து மரணம்.
இது நாடா? ஓர் அரசு அலுவலகத்தில் கழிப்பறை இல்லையாம்; இங்கு மாற்றுத் திறனாளிகள் உள்பட பெண்கள் பணியாற்றுகிறார்களாம். இந்த வெட்கக்கேட்டை எங்கே போய்ச் சொல்ல?
விபரீதமான ஏற்பாடு!
சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதம் - தபால்மூலம் பெற சிறப்பு ஏற்பாடு.
கரோனா காலத்தில் இதுபோன்ற விபரீத முயற்சியா? கோவில் 'பிசினஸ்' எப்படி எல்லாம்தான் நடக்கிறது?
நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்!
பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 198 ஆசிரியர் இடங்கள் காலி.
பழங்குடியினர் தானே - அதற்கு என்ன இப்பொழுது அவசரம் என்ற நினைப்பாக இருக்கலாம்.
படுஜோர்தான்!
குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரியில் அமல்: - பா.ஜ.க. பொதுச்செயலாளர் வர்கியா தகவல்.
ஆரம்பிச்சிட்டாங்கய்யா அடுத்த சர்ச்சையை!
மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் பா.ஜ.க. ஆட்சியில் இல்லையென்றாலும், சதா மக்களைப் போராட்டக் களத்திலேயே நிறுத்தும் வேலையை மட்டும் மத்திய பா.ஜ.க. ஆட்சி ‘ஜோராக' செய்துகொண்டேதான் இருக்கிறது.
பிரதமரிடம் கேளுங்கள்!
தமிழ்நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 63 லட்சத்து 41 ஆயிரத்து 639 பேர்.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று பேசும் பிரதமரைத் தான் இதுபற்றிக் கேட்கவேண்டும்.
என்ன செய்வார்?
ஆன்மிக அரசியலை ரஜினி உண்மையாக செய்வார்: - சு.சாமி.
ரஜினியோடு பா.ஜ.க. கூட்டு சேர்ந்தால் கட்சியை விட்டு விலகுவேன் என்றவர் இவர்.
என்ன செய்கிறார், பார்ப்போம்!
அம்பேத்கர் கனவு என்ன?
அம்பேத்கர் கனவை நனவாக்குவோம்! - பிரதமர் மோடி
இந்துவாக சாகமாட்டேன் என்று கூறி, அதன்படி செய்து காட்டினாரே, அதையா?
எல்லாம் அவன் செயல் என்று சொல்லாமல் இருந்தால் சரி!
கரோனாவால் 2030 ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடி.: - அய்.நா. கணிப்பு
‘எல்லாம் அவன் செயல் என்று இங்கே இருப்பவர்கள் சொல்லாமல் இருந்தால் சரி!
நம்ம ஊர் முருகனிடம் சொல்லுங்கள்!
சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நடைபயணம் சென்ற போரூர் லட்சுமணன் லாரி மோதி மரணம்.
இதனை நம் ஊர்
எல்.முருகனுக்குச் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment