''அங்கேயே ஆரம்பமாகிவிட்டது!'' கார்ப்பரேட்டுக்கு ஆதரவானதே அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் ஆர்எஸ்எஸ்-சின் துணை அமைப்பு ஒப்புதல் வாக்குமூலம் தாங்களும் எதிர்ப்பதாக தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

''அங்கேயே ஆரம்பமாகிவிட்டது!'' கார்ப்பரேட்டுக்கு ஆதரவானதே அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் ஆர்எஸ்எஸ்-சின் துணை அமைப்பு ஒப்புதல் வாக்குமூலம் தாங்களும் எதிர்ப்பதாக தீர்மானம்

புதுடில்லி,டிச.16 அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான வேளாண் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், கார்ப்பரேட் சுரண்டலுக்கும், பதுக் கலுக் கும் துணைபோவதாக உள் ளன. ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சுவதேசி ஜாக்ரான் மஞ்ச் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சுவ தேசி ஜாக்ரான் மஞ்ச் நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தை, அதன் இணை ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் வெளியிட்டுள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது:

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம், சேமிப்புக் கிடங் குகளில் வைக்கப்படும் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிவிடும். இதனால் ஏற்றுமதியாளர்கள், பெரும் அங்காடிகளின் முதலாளிகள், மிகப்பெரிய மொத்த விற்பனையாளர்கள் பதுக்கல் வேலையில் ஈடு படுவார்கள். தற்போது சில்லரை வர்த்தகத்தில் 38 சதவிகிதம் ரிலையன்ஸிடம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த வளர்ச்சி என்பது சந்தையில் ஏக போகம் என்ற நிலையை ஏற்படுத்தி, விவசாயிகள், விநியோகம் செய்பவர்களை சுரண்டும் நிலைக்குதள்ளும். அதேபோல, வேளாண் சாகுபடி விற்பனை சந்தைக்கு வெளியே கொள்முதலை அனுமதிப்பது, பெருநிறு வனங்கள் விவசாயிகளைச் சுரண்டுவதற்கே உதவி செய்யும். ஆதலால், ஏபி எம்சி சந்தைக்கு வெளியே கொள் முதல் நடப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழ் அரசு நிறு வனங்களும், தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்வதை சட்டவிரோதம் என்று அறிவித்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு ஆர்எஸ்எஸ் துணை அமைப்பு கூறி யுள்ளது.

No comments:

Post a Comment