சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ள மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. அதில் 12 காலியிடங்கள் உள்ளன. இதில் (Bar) வழக்குரைஞர்களிலிருந்து 9 பேரும், மாவட்ட நீதிபதிகளிலிருந்து 3 பேரும் நிரப்பப்படுவார்களாம்.
5 பேர் மட்டும்தான் பரிந்துரைக்கப்பட்டதாம்; காரணம், ஏற்கெனவே சிபாரிசு செய்யப்பட்டதல்லாமல், மற்றொரு பார்ப்பன வழக்குரைஞரான பெண்மணியையும் சேர்த்து பரிசீலிக்கும் முயற்சி அழுத்தத்தால் அது தாமதமாகிறதாம்!
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 பார்ப்பன நீதிபதிகள் தங்கள் ஜாதி விகிதாச்சாரத்திற்கு இரட்டிப்பு மடங்கு அதிகமாகவே உள்ள நிலையில், மேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகளா? பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்துடன் தொடர்புள்ள ஒரு குடும்பத்திலிருந்து, (ஏற்கெனவே பா.ஜ.க. அமைப்பில் பொறுப்பில் இருந்த ஒருவர்) சேர்க்கப்பட்டுள்ளதாக - உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறதே, இது உண்மையா?
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக பெண் வழக்குரைஞர்கள் இல்லையா?
தமிழ்நாட்டில் பத்திரிகை நடத்தும் பூணூலாரான அரசியல் புரோக்கரின் பரிந்துரையின் பேரில் இவர் பெயர் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுவதும் உண்மையா?
No comments:
Post a Comment