சென்னை, டிச. 11-- இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தியாளரும், ஏற்றுமதிச் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளதுமான சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் மட்டுமே 11,478 டிராக்டர்களை விற்பனை செய்து அசாத் தியமான 71% வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்தத் துறையில் எதிர்பார்க்கப்படும் சராசரி வளர்ச்சி 49%தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதி யாண்டில், நவம்பருடன் முடியும் 8 மாதங்களில் மட்டும் - வெளிநாட்டுக்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என இரண்டும் சேர்ந்து, சோனாலிகா நிறுவனம் மொத்தமாக 92,913 டிராக்டர் களை விற்பனை செய்துள்ளது.
அசாத்தியமான இந்த விற்பனை இலக்கை எட்டியது குறித்து பேசிய சோனாலிகா குழும செயல் இயக்குனர் ரமன் மிட்டல், “தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய மாடலான, எங்களது விவ சாய உபகரணங்கள், வேளாண் பெருமக் களின் தனிப்பட்ட தேவைகளை நிறை வேற்றுவதற்கு ஏற்ற வகையிலும் கூட வடிவமைக்கப்படுகிறது. அதனால், எங் களால் விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடிகிறது என அவர் தெரிவித்து ள்ளார்.
No comments:
Post a Comment