சென்னை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

சென்னை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கைதானவர்களுக்கு வாய்ப்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பானது-ஒரு நாள் சிறைவாசம்!

சென்னை, டிச. 8, சென்னை தொலைக்காட்சியில் சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பை கண்டித்து சென்னையில் நேற்று (7.12.2020) காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைதானவர்க ளுக்கு வாய்ப்பாக பெரியாரியல் பயிற்¢சி வகுப் பானது ஒரு நாள் சிறைவாசம்.

நேற்று (7.12.2020) காலை சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்.

சென்னை தொலைக்காட்சியில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்பு என சமஸ்கிருதத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு தலைமையில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் வரவேற்றார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கண்டன உரையாற்றினார்கள்.

கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி மற்றும் சென்னை மண்டல கழகப்பொறுப்பாளர்கள் உள்பட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினரால் புதுப்பேட்டை வீரராகவன் தெருவில் அமைந்துள்ள சமூக நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைதாகி ஒரு நாள் சிறைவாசமாக சமூக நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் சென்னை மண்டல கழகக் கலந்துறவாடல் நிகழ்வாக கழகத் தலைவரின் வழிகாட்டுதலின்படி கழகச் செயல்பாடுகள் குறித்து அனைவரும் கருத்து களைப் பகிர்ந்து கொண்டனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் கைதானவர்களை சமூக நலக்கூடத்திற்கு சென்று சந்தித்து கருத்துகளை பகிர்ந்தனர்.

இயக்க வரலாறு, கழகம் கண்ட சமூக நீதிக்களங்கள், தந்தை பெரியார் அணுகு முறைகள், போராட்டங்கள், இலட்சிய உறுதி, கொள்கைவழியில் தொண்டர்களை வழிநடத் திய பாங்கு, ஜாதி ஒழிப்புப் போராட்டமான சட்ட எரிப்புப் போராட்ட வரலாறு, தந்தை பெரியார், கழகத்தின் கொள்கை உறுதிக்கு சான்றாக சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று இல்லாத நிலையில், 3 ஆண்டு கடுங்காவல் என்று அறிவிக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கிலான கழகத்தினர், பெண் கள், குழந்தைகளுடன் பங்கேற்ற சிறப்பு, தமிழில் பெயர் மாற்றங்கள், உபன்யாசங்கள் சொற் பொழிவானது என தந்தைபெரியாராலேயே தமிழில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஸ்ரீ என்பதற்கு எதிராகவே போராட்டம் நடைபெற்றது.

தற்பொது திரைப்படங்களால் தமிழில் பெயர் சிதைவடைந்து, வடமொழியில் பெயர் கள் ஏற்பட்டு வருகின்றன.  கேசவன் என்ற பெயர் மயிரான் என்று தந்தை பெரியார் சுட்டிக்காட்டும்போது அனைவரும் அதை ஏற்றனர்.இதுவரை Ôசமூக நீதிÕ என்ற பாடம் பாடத்திட்டத்தில் இல்லை என்பது வேதனைக் குரியது. சமூக நீதி என்றால் என்ன, ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு  ஏன் என்று இளைய தலைமுறையினருக்கு தெரிய வேண்டாமா?

சமூகநீதிக்கான  போராட்டங்கள், மாநாடு கள், மண்டல் அறிக்கை நடைமுறைப்படுத்த கழகம் மேற்கொண்ட பணிகள், அதிகாரத்தில் பார்ப்பனர்கள் மூவர் இருந்த நிலையில், தமிழ கத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான 76ஆவது  அரசமைப்புச் சட்டத்திருத்தம், 31 சி சட்டத்திருத்தம், 9ஆம் அட்டவணையில் பாதுகாப்பு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் சாதனையின் மகுடம்.

தமிழகத்தில் கழகத்தின் பணிகளால் வேரூன் றியுள்ள தமிழ் உணர்வு, இன உணர்வு ஆகிய இரண்டையும் அழித்தொழிப்பதில் ஆரியத்தின் தொடர் முயற்சிகள், குலக்கல்வியின் புதிய வடிவான புதிய கல்விக் கொள்கை, இந்தி, சமஸ் கிருதத் திணிப்புகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.

நீட் போன்றவற்றுக்கெல்லாம் நீதிமன்றத்தை காரணம் காட்டிவரும் நிலையில், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட்டுள்ளது. நீதிமன்றத்தில்  3 வழக்குகள் நிலு வையில் இருக்கும் போதே உயர்ஜாதியினருக்கான வாய்ப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு என்றுமே அரணாக இருந்துவருகிறது கழகம். ஈழ விடுதலை மாநாட்டை நடத்தினோம்.

இன்றைக்கு தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா முழுவதும் தந்தை பெரியார் சித்தாந் தங்கள் பரவி வருகின்றன. திராவிடம் குறித்து வடநாட்டிலும் பேசுகின்ற நிலை உருவாகி விட்டது.

திமுகவை பிளவுபடுத்த முன்பு எம்.ஜி.ஆரை பயன்படுத்தினார்கள். இன்று ரஜினியை முன் னிறுத்தும் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 88ஆவது பிறந்த நாள் செய்தியாக திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  காவிகளை இந்துத்துவா, பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சை விரட்டி அடிக்க ஒற்றைத் திட்டமாக அறிவித்து, வரும் தேர்தலில் நம்முடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும்.

தந்தை பெரியார் காலம்முதல் அன்னை மணியம்மையார் காலத்திலிருந்து தமிழர் தலை வர் ஆசிரியர்  இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்திவரும் இன்றைய காலம் வரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆரியர்களின் சூழ்ச்சி வலைகள், அதனை முன்னதாகவே கணித்து தகர்த்து வரும் கழகத்தின் அளப்பரிய பணிகள், கழகத்தின் சாதனைகள் ஏராளம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு மடைதிறந்த வெள்ளம் போல் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை வகுப்பில் பாடம் எடுப்பதைப்போல் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கழகப்பொறுப் பாளர்களிடையே கருத்துரையாற்றினார்.

கைதான தோழர்களைப்பாராட்டி கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உரையாற்றினார். இயக்கத்தின் வரலாறு, தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையிலான காலகட்டம்வரை கழகத்துணைத் தலைவர் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் பயன்மிக்க தாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

காலை முதல் தொடர் நிகழ்வாக கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள், இளைஞர்கள், மாணவர்கழகத்தினர் என பலரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

ஒரு நாள் சிறைவாசம் கழகத்தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்த பயிற்சி பட்டறையாக அமைந்தது.

கழகப்பொதுச்செயலாளர் அனைவரையும் பாராட்டிப் பேசுகையில் தந்தை பெரியார் நினைவு நாளில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும் பலரையும் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கைதானோர்...

கழக அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் .முத் தையன், செயலாளர் கோ.நாத்திகன், வட சென்னை மாவட்டச் செயலாளர் தி..கணேசன், அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், வட சென்னை மாவட்ட துணை செயலாளர் கெடார் சு.மும்மூர்த்தி, ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, செயலாளர் .இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், பெரியார் சமூக காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ், பெரியார் சமூக காப்பு அணி உதவி இயக்குநர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் பொழிசை கண்ணன், வடசென்னை இளைஞரணி தளபதிபாண்டியன், தென் சென்னை இளைஞரணி மகேந்திரன், கோ.வீ. இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன்,  மயிலை சேதுராமன், தரமணி மஞ்சநாதன், பிடிசி இராஜேந்திரன், சண்முகப்ரியன், .துணைவேந்தன், மயிலை பாலு, பி.விஜயக் குமார், திருவண்ணாமலை கவுதமன், பொன் னேரி வே.அருள், கார்த்திக், பாலு, வடகரை உதயக்குமார், விஜயக்குமார், ஓவியர் ஜனாதிபதி, சோழவரம் .கஜேந்திரன், .சக்கரவர்த்தி, புழல் ...இரணியன், பொன்னேரி தமிழ்செல்வன், குணசேகரன், சி.கா.மகேஸ்வரன், திருவொற்றி யூர் நகர செயலாளர் .இராஜேந்திரன், இளை ஞரணி செயலாளர் இரா.சதீசு தமிழ்மாறன், பா.மாணிக்கம், புதுவண்ணை செல்வம், கவுத மன், இயேசு, ஆவடி .வே.நடராசன், முரளி, ஸ்டீபன், வஜ்ஜிரவேலு, சங்கர், பிரவின்குமார், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், ஊரப்பாக்கம் சீனுவாசன், அனகை கு.ஆறு முகம், குரோம்பேட்டை சட்டநாதன், மேட வாக்கம் விஜய்ஆனந்த், வழக்குரைஞர் இரா.உத்திரக்குமாரன், இராமாபுரம் ஜெனார்த்தனம், பவன்குமார்

மகளிர் அணி, மகளிர் பாசறை

துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, பூவை செல்வி, ஊரப்பாக்கம் சுமதி, நதியா, சி.அறிவுமதி, செ.பெ.தொண்டறம், சி.மெர்சி, வி.தங்கமணி, வி.வளர்மதி, வி.யாழ்ஒளி, பி.அஜந்தா, வெண் ணிலா கதிரவன், மா.இளையராணி, மு.இராணி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்று கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக் கப்பட்டனர்.

No comments:

Post a Comment