“இங்கு அறிவாயுதங்கள் விற்பனைக்கு!” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

“இங்கு அறிவாயுதங்கள் விற்பனைக்கு!”

போராட்டக்களத்தில் மாடுகளுக்குத் தீனி போடும் மூங்கில் கூடையையும்சில மரக்கிளைகளையும் வைத்து புத்தக விற்பனை நிலையம் அமைத்த ஓர் புரட்சிகர மாணவர் அமைப்பின் தோழர் ஒருவர்.

புதுடில்லி, டிச.9 டில்லியின் அனைத்து எல்லையிலும் 10 நாள்களைக் கடந்து நடந்து வரும் போராட்டம் உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கனடா பிரதமர் டில்லி விவசாயிகள் போராட்டம் குறித்துப் பேசியதை அடுத்து தற்போது ஜெர்மன் மற்றும் நார்வே நாட்டு அரசியல் தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.

ஆனால், மோடி இது குறித்து எதிர்கட்சிகளின் தூண்டுதல், விவசாயிகளுக்கு புரிதல் இல்லை என்றுமன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுகிறார். வாரணாசியில் பாடலை ரசித்துக்கொண்டே கருத்து தெரிவிக்கிறார். அவரது அமைச்சரவை சகாக்கள் பேச்சு வார்த்தை என்ற பெயரில் அலைக்கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

‘‘சட்டத்தை நீக்க முடியாது இதற்கான வேறு உபாயம் இருந்தால் கூறுங்கள்'' என்று விவசாயத்துறை அமைச்சர் தோமார் கூறுகிறார். ‘‘போராட்டமே, சட்டத்தை முற்றிலு மாக விலக்குங்கள்'' என்று கூறித்தான் நடக்கிறது. ஆனால், அரசு சட்டத்தை நீக்க முடியாது என்று கூறியதற்கு,

விவசாயிகள், ‘‘நாங்கள் என்ன டில்லியை சுற்றிப் பார்க்க வந்தோமா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டு தங்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் புரிதல் இல்லாமல் போராடி வருகின்றனர் என்று போராடி வரும் விவசாயிகளை முட்டாள்கள் என்று மறைமுகமாக சாடியுள்ளார்.    உண்மை என்னவென்றால் போராட்டக் களத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள நூல்களே அவர்களின் போராட்ட பலத்திற்கு சான்றாக உள்ளது,

டில்லியைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்,  பகத்சிங், காரல் மார்க்ஸ், ஸ்டாலின், ஏங்கல்ஸ் மற்றும் அமெரிக்க நிறவெறி ஒழிப்பு குறித்த நூல்கள், பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, ஆப்பிரிக்க நாடுகளின் அடிமை ஒழிப்புப் போராட்டம், பெரும் முதலாளிகள், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் முசோலினியின் இத்தாலியப் படைகளை லிபியப் பாலைவனப் பிராந்தியத்தில் எதிர்த்து நின்ற உமர் முக்தார் போராட்ட வரலாறு,  போன்ற நூல்கள் பஞ்சாபி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில்  உள்ளது அதை பெரும் பாலான போராட்டக்காரர்கள் வாங்கிப் படிக்கின்றனர்.

 



No comments:

Post a Comment