அதுவும் நன்மைக்கே!
மனுதர்மம்பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கூறிய கருத்துத் தொடர்பாக தனி நபர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடக்கட்டும். அப்பொழுதுதான் வீதிமன்றத்தில் மட்டும் பேசும் பதிவு நீதிமன்றத்திலும் பதிவாகும் வாய்ப்புக் கிட்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கர் ஏன் மனுதர்மத்தை எதிர்த்தார் - எரித்தார் - ஏன் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டார் என்பதற்கான காரணங்கள் எல்லாம் இன்றைய புதிய தலைமுறையினரும் கவனம் செலுத்தவும், தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படும் அல்லவா!
ஏது பெருந்தன்மை?
பெங்களூருவில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை இஸ்லாமியர் ஒருவர் அனுமான் கோவில் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார்.
இந்தப் ‘பெருந்தன்மையை' எல்லாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் மனுவாதிகள் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
அந்த இஸ்லாமிய பெரியவரும், வேறு உருப்படியான கல்வி போன்ற பணிகளுக்கு நிலத்தை இலவசமாக அளித்திருக்கக் கூடாதா?
ஆரோக்கியமானதல்ல
வேல் யாத்திரை தொடர்பாக பா.ஜ.க.வினர்மீது 135 வழக்குகள் பதிவு: - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மனு.
மத்தியில் ஆளும் ஒரு தேசிய கட்சி தடை உத்தரவை மீறுவதும், அராஜகமாகப் பேசுவதும் அதன் ஆரோக்கியமற்ற நடத்தையைத்தான் பறைசாற்றும் என்பதோடு பக்தியின் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தும்.
No comments:
Post a Comment