உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு
திருவனந்தபுரம், டிச.9 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார் கூறி உள்ளதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட கேரளா முடிவெடுத்துள்ளது. நாங்கள் இந்த வாரமே முறையிடவுள்ளோம். கேரளாவில் வேளாண் சட்டங்கள் அமல் படுத்தப்படாது. அதற்கு மாற்றாக ஒரு சட்டம் பரிந்துரைக்கப் படும் என்று தெரிவித்தார். புதிய வேளாண் சட் டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து 12ஆவது நாளாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்கள் பாரத் பந்த் போராட் டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கேரள அரசு உச்சநீதிமன்றம் செல்ல முடி வெடுத்துள்ளது.
No comments:
Post a Comment