தஞ்சையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 15, 2020

தஞ்சையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம், திராவிடர் கழக தோழர்கள் பங்கேற்றனர்

மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றியுள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வழியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும்  தஞ்சை பணகல் கட்டிடம் எதிரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 14-12-2020 அன்று  நடைபெற்றது. அனைத்து அரசியல் அமைப்புகளின் விவசாய அணிபொறுப்பாளர்களும், போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரும், அரசியல் சாராத விவசாய அமைப்புகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் 1000 கணக்கில் பங்கேற்று கோரிக்கைகளை வழியுத்தி முழக்கமிட்டனர்.  தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார்  தலைமையில் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, கழக பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு .இராமலிங்கம், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் .லெட்சுமணன். பெரியார்நகர் .உத்திராபதி. மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து 3 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

No comments:

Post a Comment