டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· மோடி அரசு எந்த பிரச்சினையிலும் விளக்கமோ, வருத்தமோ தெரிவித்தது கிடையாது. தற்போது எழுந்துள்ள நாடு தழுவிய விவசாயிகளின் தன்னெழுச்சியான போராட்டத் திலும், இதே போன்ற நிலையை எடுக்கக்கூடும் என எழுத்தாளர் ஆகார் படே ல் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
· இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் மற்றும் அதை யொட்டிய பிற கட்டுமானங்களை கட்டுவதற்கான 'சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட்'-அய் தொடங்க இந்திய அரசு காட்டிவரும் தீவிரத்தின் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டலாம், ஆனால் கட்டு மானத்தைத் தொடங்கக் கூடாது என்று நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு மோடி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
· ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய லாம் என்ற மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண் டும் என எய்ம்ஸ் மருத்துவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
· கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்துக்கள் பங்கேற்கக் கூடாது என அசாமில் ஹிந்துத்துவா அமைப்பு கூறியது மத நல்லி ணக்கத்தை சீரழிக்கும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட மத்திய அரசை மகாராஷ்டிரா அரசு வலியுறுத்த வேண்டும் என அமைச்சர் சக்கன் பூஜ்பல் தலைமையிலான குழு முதல்வர் உத்தவ் தாக்க ரேயை சந்தித்து அறிக்கை அளித்துள்ளது. பிற்படுத்தப்பட் டோர்க்கான இட ஒதுக்கீட்டை 67 சதவீதமாக உயர்த்திடவும் வலியுறுத்தியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மோடி அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலாளர்கள், மாண வர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவு பெருகியுள் ளது.
· தமிழ் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக் கப்பட்டுள்ளதாகவும், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான வழிமுறைகளை அறிந்து, அது பற்றிய அறிக்கையை இக்குழு அளிக்கும் எனவும் தமிழ் நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.
தி ஹிந்து:
· அரியானாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவு அளித்துவரும் ஜேஜேபி கட்சியின் அய்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள், வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத் திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
· மோடி அரசின் வேளாண் சட்டங்கள், விவசாய சீர்திருத் தம் அல்ல, அது அதானி -அம்பானி வேளாண் சட்டம். அது ரத்து செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்..
குடந்தை கருணா
8.12.2020
No comments:
Post a Comment