கடலூர், டிச. 8- 16.11.2020 காலை 9 மணிக்கு, கடலூர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் பகுத்தறிவாளர் கழக குடும்பத்தின் சா.ஜெ.இந்திர ஜித்-ஜோ.அ.நிமிதா ஆகி யோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா கொ.கிருட்டிண மூர்த்தி தலைமையில் நடை பெற்றது.
மணமகனின் தாயார் இல. சாந்தி வரவேற்புரையாற்றி னார். கே.செந்தாமரைக்கண் ணன் மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்துரை வழங் கினார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை துணைத் தலைவர் எம்.சி.ஏ. மார்ட்டின், மருத்துவர் ந.சுந்தர், தணிக் கையாளர் சொ.குமரகுரு, மதி முக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத் தேவன் ஆகி யோர் மணமக்களுக்கு வாழ்த் துரை வழங்கி உரையாற்றி னார்கள். மணமகனின் தந் தையார் கொ.ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.
தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்த கடிதம், விழாவின் தொடக்கத்தில் படிக்கப்பட் டது. பெண் ஏன் அடிமை யானாள்? என்ற கழக நூல் அனைவருக்கும் வழங்கப்பட் டது. மணவிழா மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment