பொருளாதார நெருக்கடி காலத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

பொருளாதார நெருக்கடி காலத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவையா?

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திரமோடி வரும் 10ஆம் தேதி,தொடங்கி வைக்கிறார்.

 2022 அக்டோபரில் பணிகள் முடிவடையும். 75-ஆவது சுதந்திர தின விழா புதிய நாடாளுமன்றக்கட்டடத்தில் நடைபெறும் என்று மக்களவை தலைவர் தெரிவித்தார்.


இந்தத் தொடக்க விழாவில் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனராம்.

செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பழைய கட்டடத்தில் இருந்து சுதந்திர இந்தியாவின் பயணம் தொடங்கியது. 75-வது சுதந்திர தின விழாவை நிறைவு செய்யும்போது, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இரு அவைகளின் அமர்வையும் நாங்கள் பெறுவோம் இந்த நாடாளுமன்றம், வெறும் செங்கல்மற்றும் காரைகளால் கட்டப்பட்ட கட்டடம் இல்லை. இது, 130கோடி மக்கள் கனவுகளின் ஒரு முழுமை  என்று தெரிவித்தார்.


புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டும் பணி டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2019 அக்டோபரில், டாக்டர் பிமல் படேல் தலைமையிலான குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட எச்.சி.பி டிசைன், பிளானிங் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் இத்திட்டத்தை வடிவமைத்தது.

புதிய நாடாளுமன்றம் குறித்து, மூத்த அதிகாரி கூறுகையில், இது அதிநவீன ஒலியியல் மற்றும் மூன்று கோபுரங்களைக் கொண்ட ஒரு முக்கோண நாடாளுமன்றமாக இருக்கும். இது ஜனநாயகத்தின் உணர்வை பிரதிபலிக்கும். இந்தப் புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு சாளரமும் இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவமாக இருக்கும். 

புதிய நாடாளுமன்றத்திற்குள் 75ஆவது ஆண்டு அமர்வு (2022) நடக்க வேண்டும் என்பதே குறிக்கோள். என்று கூறினார். சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டடம் தற்போது என்ன தேவை என்று கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பில் இருந்துமே கேள்விகள் எழுப்பப்பட்டன, பாஜகவிலிருந்து கூட சில தலைவர்கள் மறைமுகமாக இது இப்போது தேவையா என்று முணு முணுத்தனர்.

2017-ஆம் ஆண்டு சர்தார் வல்லபாய் படேல் சிலை ஆரம்பிக்கும் போது இதே போல் இது வெறும் சிலை அல்ல 130 கோடி மக்களின் உணர்வு என்று கூறி இந்தியா எங்கும் மண்ணை எடுத்து வந்து குறளி வித்தைகளைக் காட்டி மக்களை ஏமாற்றினர், சுமார் 3000 கோடி ரூபாய் செலவில் அமைந்த அந்தச்சிலை துவக்கவிழாவின் போது அதன் பெயர் பலகையைக்கூட தமிழில் சரியாக மொழி பெயர்க்கவில்லை அந்த பெயர்ப் பலகை அமைக்க மட்டும் 2 லட்சம் ரூபாய் செலவழித்திருந்தார்கள் என்று தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது, அதே தேசபக்தி மயக்கபிஸ்கட் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது 130 கோடி மக்கள் கனவுகளின் வடிவம் என்று கூறியுள்ளனர். ரூ.3000 கோடி படேல் சிலை ஊழல்

இப்போது வெளிவந்து கொண்டு இருக்கிறது, இந்த ஆட்சி மாறினால் சிலை ஊழல் தொடர்பான விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மை வெளிவரும், அதற்குள் இப்போது ரூ.1000 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் துவங்கி விட்டார்கள்.

நாட்டின் எந்த ஒரு புதிய திட்டமும் குஜராத் முதலாளிகளுக்கே கொடுக்கின்றனர். இந்தியாவில் மிகப்பெரிய ஊழல்களான பங்குச்சந்தை மோசடி, போலி ஸ்டாம்ப் பேப்பர் மோசடி போன்றவை குஜராத்திகளால் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது,புதிய நாடாளுமன்ற கட்டடத் திட்டம் துவங்கும் முன்பே இந்த திட்டத்தில் ஊழல்கள் குறித்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது வழக்கு விசாரணை முடியும் வரை புதிதாக கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டுமானங்களை இடிக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மரங்களை வெட்டக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்கு மாறாக, மத்திய அரசு நடந்து கொள்ளும் போக்கின்மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதை விட்டுவிட்டு, நாடே கரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது, தலைநகரைச் சுற்றிலும் விவசாயிகள்போராட்டக் களத்தில் இருக்கின்றனர். இதை கிஞ்சித்தும் மதிக்காமல் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதில் முனைப்பாக உள்ளார்

பிஜேபி ஆட்சிக் காலத்தில் அதுவும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டது என்ற பெருமை நிலைக்கத்தான் இந்த ஏற்பாடு.

பெங்களூரிலும், குமரிமுனையிலும் திருவள்ளுவர் சிலைகளை நிறுவியதற்குக் கிண்டல் செய்த பார்ப்பனர்கள்,ஊடகங்கள் இவைபற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டார்கள் ன்பது மட்டும் உண்மை 

No comments:

Post a Comment