மதுரை மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள்விழா-நூல்கள் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 10, 2020

மதுரை மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள்விழா-நூல்கள் அறிமுக விழா

மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் பங்கேற்று சிறப்புரை

மதுரை, டிச. 10- மதுரை மாநகரத்தில் 5.12.2020 அன்று மாலை 5.30 மணிக்கு சிம்மக்கல்லில் உள்ள எஸ்..எஸ்.அரங்கில் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்க ளின் 88ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

பிறந்தநாளே கொண்டாடாத, அதை விரும்பாத, அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தாலும் அதன் மீது நாட்டமில்லாமலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல்என் கடன் பெரியார் பணி செய்து கிடப்பதேஎன்ற குறிக்கோளுடன் இலட்சியப் பயணம் மேற்கொள் ளும் தமிழர்  தலைவரின் 88ஆவது பிறந்த நாள் விழாவினை அவர் விரும்பும் விழாவாக மாற்றுவதற் காக, மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் அதனை  பெரியார் கொள்கை பிரச்சார நாளாகக் கொண்டாடினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழா, நூல்கள் அறிமுக விழா, விடுதலை சந்தா வழங்கும் விழா, மதுரை மாநகரத்தில் வாழும் இயக் கத்திற்கு தோன்றாத் துணையாக இருக்கும் மூத்த பெரியார் பெருந் தொண்டர்களுக்கு பாராட்டுவிழா என்று நான்கு விழாக்களை ஒன்று சேர்த்து கொள்கை பிரச்சார விழா வாக நடத்தியது மதுரை மாநகர் திராவிடர்  கழகம்.

நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் .முருகானந்தம் தலைமையேற்று, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின்  'வாழ்வியல் சிந்தனைகள்' தனது வாழ்விலும், தனது குடும் பத்தினர் வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்களைப் பகிர்ந்துகொண்டு உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் .சரவ ணன் அனைவரையும் வரவேற்றார். மாநில அமைப்புச்செயலாளர் வே. செல்வம் தொடக்க உரையாற்றினார்.

அவர் தனது உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிறப்புகளையும்,இன்று பாராட்டு பெறும் மூத்த பெரியார் தொண் டர்கள் 'பொறியாளர் முத்தையா, துரை.எழில்விழியன், அவனியா புரம் இராக்கு, காசிவிசுவநாதன், ராஜம் காசிவிசுவநாதன், .பால கிருஷ்ணன், .கேசவன், புதூர் பாக்கியம், வண்டியூர் கிருஷ்ண மூர்த்தி, ராமசாமி, ராஜேஸ்வரி ராமசாமி, சொக்கலிங்கபுரம் சோ.இராமமூர்த்தி, வடக்குமாசி வீதி செல்லத்துரை, விராட்டிபத்து அய் யாச்சாமி ஆகியோரின் சிறப்புக ளையும், தனித்தன்மைகளையும் எடுத்துரைத்தார்.

100 விடுதலை சந்தாக்கள் சேகரிப்பு

விடுதலை சந்தா சேகரிப்பில் வழக்குரைஞர் அணிப் பொறுப்பா ளர்கள் வழக்குரைஞர் நா.கணேசன் 75 சந்தாக்கள், வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் 25 சந்தாக்கள் என 100 சந்தாக்கள் சேர்த்திருப்பதையும், மற்ற தோழர்களும் சிறப்பாக விடு தலை சந்தா சேகரித்துக் கொடுத்தி ருப்பதைக் குறிப்பிட்டார்.

பெரியார் தொண்டர்களுக்கு பாராட்டு

மூத்த பெரியார் தொண்டர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து, பதக்கங்களை மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங் கம், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் நன்மாறன் வழங்கினர்.

நூல்கள் வெளியீடு

மேனாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் நூல்களை வெளியிட மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன்  உரிய தொகை கொடுத்து பெற்று கொண் டனர். அவரைத் தொடர்ந்து பல ரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

நூல்கள் ஆய்வரங்கம் நடை பெற்றது. தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்-பாகம் 15 ' நூலினைப் பற்றி திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர், கவிஞர் சுப.முருகானந்தம் உரை யாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுதிய 'ஒப்பற்ற தலைமை' என்னும் நூலினைப் பற்றி பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா. நேரு உரையாற்றினார். தோழர் அருணன் எழுதிய 'ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் 'என்னும் நூலினை மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர் நன்மா றன் அவருக்கே உரித்தான நகைச் சுவை நடையில் அறிமுகம் செய் தார்.

மூன்று நூல்களின் ஆய்வுரை களை இணைத்தும், தமிழர் தலை வரின் சிறப்புகளைப் பற்றியும், இன் றைய சூழலில் தமிழர் தலைவர் களின் தொண்டு, உழைப்பு பற்றி யும் தி.மு.,வின் மேனாள் அமைச் சர், எந்நாளும் சுயமரியாதை உணர்வு உடையவருமான பொன்.முத்துராமலிங்கம் சிறப்புரையில் எடுத்துரைத்தார். திராவிடர் கழ கத்தின் மாவட்ட அமைப்பாளர் திருப்பதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment