எட்டுவழி சாலை திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

எட்டுவழி சாலை திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

  தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,டிச.9, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் நேற்று (8.12.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,

விவசாயிகள் தமது வாழ்வுரி மைகளைப் பாதுகாத்துக் கொள்வ தற்காக தொடர்ச்சியான போராட் டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறை வேற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  விவசாயிகள் மற்றும் இயற்கை-சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

குறிப்பாக விவசாயிகளின் வாழ் வாதாரம் மற்றும் ஜீவாதார நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவாக அதிமுக அரசு கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக் காதது இதற்கு முக்கிய காரணமாகும். மத்திய பாஜ அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்தாகக் காரணம் ஆகி விட்டது. எல்லா வகையிலும் விவ சாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பாஜ அரசும், அதிமுக அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு-வளர்ச்சி என்ற போர்வையில் விவ சாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற் போதைக்கு வெற்றி பெற்றி ருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய பாடத்தை வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும். விவசாயிகளின் நலனைத் துச்சமென நினைத்து, ‘கமிஷன்என்ற ஒரே நோக்கத்தில் இத்திட் டத்தைச் செயல்படுத்த அராஜகமாக-காவல் துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளின் மீது தடியடி நடத் திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இனியேனும் விவசாயிகளின் நலன் காத்திட முன் வருவாரா?. 

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும் இத் திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. ஆகவே சேலம் எட்டு வழிச் சாலை திட் டத்தைக் கைவிட வேண்டும் என முதல்வர் பழனிசாமியை வலியு றுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறி விக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க் கிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment