ஈரோடு மாவட்டம் சிவகிரியில் "மயக்கப் பிஸ்கட் ஓர் எச்சரிக்கை" புத்தகம் கடைவீதியில் பொது மக்களுக்கு மாவட்ட அமைப்பாளர் சிவகிரி - கு.சண்முகம் தலைமையில் கொடுக்கப்பட்டது. பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கினார்கள். உடன்: கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த சண்முகம், மாவட்டக் கழக தலைவர் கு.சிற்றரசு, மாவட்டகாங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.எஸ்.வாசுதேவன்.
‘மயக்க பிஸ்கட்-ஓர் எச்சரிக்கை’ புத்தகம் ஈரோடு பேருந்து நிலையம் மற்றும் கடை வீதிகளில் பொதுமக்களிடம் மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு தலைமையில் அளிக்கப்பட்டது. பொதுமக்கள் உரிய தொகை கொடுத்து ஆர்வமுடன் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பேருந்துகளில் ஏறி புத்தகம் பற்றி பேசி பொதுக்குழு உறுப்பினர் செ.பிரகாசன், மண்டல இளைஞரணி செயலாளர் செபராசு செல்லத்துரை, மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ்செல்வன், சீனு.மதிவாணன், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
‘மயக்க பிஸ்கட்-ஓர் எச்சரிக்கை’ 6.12.2020 அன்று மாலை7 மணியளவில் குன்றத்தூர் கரைமா நகர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிடர் மாணவர் கழக மாநில தலைவர் பிரின்சு என்னாரசு பெரியார் தலைமையில். தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் அவர்கள் முன்னிலையில் மேட்டு தெரு,பள்ளம் தெரு இந்த இரு தெருக் களை சுற்றியுள்ள தெருக்களில் உள்ள இல்லங்களின் இல்லத்தரசிகள், பெரியோர்கள், பெண்கள், வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களிடம் (மயக்க பிஸ்கெட்'கள்:) என்னும் புத்தகம் வழங்கப்பட்டது. மக்கள் பேராதரவு வழங்கினர். உடன் தி.இர.சிவசாமி, பொழிசை கண்ணன், கரை மாநகர் தே.சுரேஷ், கண்ணதாசன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.சிறீதர், பி.சாமிநாதன், பைந்தமிழ். பெரியார் பிஞ்சுகள்: ப.இன்பதமிழ், ப.அம்பேத்கர், சு.யாழினி, சு.அமுதன், வி.வீரதமிழ், வி.வீர.பிரபாகரன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment