சென்னை,டிச.11, நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் ஓ.எம்.ஆர். விடைத் தாள்கள் ஏற்கெனவே மாற்றப்பட்ட தாக மாணவர்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது பதிவேற்றம் செய்யப்படுவதிலும் முறைகேடு நடை பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. நீட் தேர்வு தொடர்பான முறைகேடுகளும் அரங்கேறிக்கொண்டு தான் இருக் கின்றன. கடந்தாண்டு நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தமிழகத்தை அதிர வைத்தது. தற்போது நீட் தேர்வில் விடைகளை சரியாக பதிவிட்டதாகவும் ஆனால் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களில் பதில்கள் மாறியிருப்பதாகவும் மாணவர்கள் பல் வேறு வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
அக்டோபர் 15ஆம் தேதி தேர் வுக்கான இணையதளத்தில் மாண வர்களின் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 594 மதிப்பெண் என இணையதளத்தில் முடிவு வெளியான நிலையில் 248 என மதிப்பெண் குறைக்கப்பட்டதாக கோவையை சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முதலில் வெளியிடப்பட்ட மதிப் பெண்களை கொண்டு தனக்கு மருத் துவப்படிப்பு படிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண் டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடை பெற்றது. அச்சமயம் அசல் ஓ.எம்.ஆர். விடைத்தாள் சம்பந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது. அதேசமயம் மாணவர் தரப்பில் ஏற்கெனவே வெளியான ஓ.எம்.ஆர். நகல்கள் காண்பிக்கப்பட்டது. இதனை கண்ட நீதிபதிகள் இரு தரவுகளுமே சந்தேகம் எழுப்புவதாக தெரிவித்து, அக்டோபர் 15ஆம் தேதி காண்பிக்கப்பட்ட மதிப்பெண் எவ்வகையில் அக்டோபர் 17ஆம் தேதி குறைத்து காண்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
ஓ.எம்.ஆர். விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில் இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும், இது எதிர்கால மருத்து வர்களின் வாழ்வு என்றும் சுட்டிக் காட்டிய நீதிபதி, ஒரு மாணவருக்கு 2 விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மதிப்பெண் எவ் வாறு வேறுபட்டது என்பது தொடர் பாக மாணவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படை யில் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள் ளார். மேலும் வழக்கு தொடர்ந்த மாணவரின் பழைய மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு கலந்தாய்வுக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் இறுதி முடிவு தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
No comments:
Post a Comment