புதுடில்லி,டிச.10, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்தனர். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி மனுவை அளித் தனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி, எம்.பி., தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்பி., தேசியவாத காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சரத்பவார், எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் து.ராஜா ஆகிய எதிர்க்கட்சித் தலை வர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேற்று (9.12.2020) மாலை 5.00 மணி அளவில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வினை அளித்தனர்.
அப்போது, “2018ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்திலேயே எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந் துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி அளித்துவிட்டு, அந்த வாக்குறுதியை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. இந்தியாவில் உள்ள விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு மேல் சிறு, குறு விவசாயிகள். இவர்கள் விளைவிக்கும் தங்கள் உற்பத்திப் பொருட்களை, வணிகர்கள் கேட்கும் விலைக்கு விற்கும் நிலையில் இருக் கிறார்களே தவிர, விவசாயிகளே தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை இச்சட் டத்தின் மூலம் கிடைக்காது. எனவே, விவசாயிகளை பெருமளவில் தற் கொலைக்கு தூண்டக்கூடிய இச்சட் டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன், எம்.பி., அவர்கள் தி.மு.க. சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தார்.
“டில்லி சலோ” என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களி லிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியு மாகக் காத்துக் கிடந்து; தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள், எஞ்சியிருக் கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, மத்திய பா.ஜ.க. அரசு எதேச்சாதிகாரத்துடன் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின் றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவாக வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment