தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை,டிச.10, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
தமிழக விவசாயப் பெருமக்களும், மீனவ சமுதாயத்தினரும், மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளின் இரட்டைத் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பது போதாதென்று, இப்போது நிவர் - புரெவி எனும் இரட்டைப் புயல்களின் வீச்சுக்கு ஆளாகி, நொந்து நொறுங்கிப் போயிருக்கிறார்கள். இத்தகைய சோகம் கவிந்திருக்கும் சூழலில், நிவர் புயல் நிவாரணத்திற்காக மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே 74 கோடி ரூபாய் ஒதுக்கி விட்டு, இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்- மீனவர்களுக்கும் - ஏழை எளியோர்க்கும் இடைக்கால நிவாரணம் கூட, முதல் தவணையாக, எதுவும் அறிவிக்காமல் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போ ரின் சார்பில், கடுமையான கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உழவர்களின் துயரத்தை நேரில் பார்க்கப் போகிறேன் என்று கூறிவிட்டு திருவாரூர் சென்றவர், தனது ஊழல் நாயகர் என்ற உண்மைத் தோற்றத்தை மறைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பது, அவரது பேட்டிகளில் பரிதாப வண்ணத்தில் தெரிகிறதே தவிர- ஒதுக்கிய நிதியை ஒரு வாரமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரிய வில்லை. விளை பொருட்களுக்கு உரிய விலை சட்டபூர்வமாகக் கிடைக் கப் போவதில்லை என்றுதான், அதிமுக ஆதரித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடே போராடிக் கொண்டிருக்கிறது. தமிழக விவசாயிகளும் நேற்றைய தினம் பெருந்திரள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் காவிரி டெல்டாவில் நின்று கொண்டு விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு சொல்லுங்கள் என்றும், விவசாயி என்ற முறையில் வேளாண் சட்டங்களை ஆதரித்தேன் என்றும் ஒரு சாதாரண விவசாயியின் சங்க டங்களை உணராமல் முதலமைச்சர் பேசுவது விவசாயிகளை கொச்சைப் படுத்தும் போக்காகும்.
தன்னை விவசாயி என்று சொல் லிக் கொள்பவரின் அவமானகரமான அணுகுமுறையாகும். எப்படி ஊழல் வழக்கில் சிபிஅய் விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தால் உட்படுத்தப் பட்ட ஒரே முதலமைச்சராக பழனி சாமி இருக்கிறாரோ, அதே போல் குறைந்தபட்ச ஆதார விலையே உத்தரவாதம் அளிக்கப்படாத வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதலமைச்சர் பழனிச் சாமியாக மட்டும்தான் இருக்க முடியும் என்பது தமிழகத்திற்கே தலை குனிவாகும்.
நிவர் புயலால் நெல், வாழை உள்ளிட்ட விளை பொருட்களை இழந்து தவிக்கும் விவசாயிகள், வீடுகளை இழந்து வேதனையில் உழலுவோர், வேறு வழியின்றி நிவாரண முகாம்களில் தங்கியிருப் போர் எல்லாம் தங்களின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய நிச்சயமின்மையிலும்,அச்சத்திலும் உறைந்து போயிருக்கிறார்கள்.
ஆழ்ந்த சோகத்திலும், துயரத் திலும் மூழ்கியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறைந்தபட்சம் 5ஆயிரம் ரூபாயும், விளை பொருட் களை இழந்து விழிநீர் பெருக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல் தவணை நிவாரணமாக - உடனடியாக வழங்கிட வேண்டும்.வியர்வை சிந்தி உழைத்த விவசாயிகளை, வீணே கண் கலங்க வைக்காமல்- முதலமைச்சர், இடைக்கால நிவாரணம் கொடுத்து உதவிட, மறு சிந்தனைக்கு இடம் கொடுத்துக் காலம் தாழ்த்தாமல், உடனடியாக முன்வர வேண்டும். ஒதுக்கிய பணத்தைப் பயன்படுத் தாமல், விவசாயிகளின் கண்ணீர் துடைக்கிறேன் என்று கபட நாடகம் போட்டு, வழக்கம் போல் இங்கு யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம். இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment