நீதித்துறையின் அதிகாரவரம்பைமீறும் புதிய வேளாண் சட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

நீதித்துறையின் அதிகாரவரம்பைமீறும் புதிய வேளாண் சட்டங்கள்

உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடில்லி, டிச.8, புதிய வேளாண் சட்டங்கள், விவசாயி களுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை உருவானால் அதனைத் தீர்த்து வைக்கும் பொறுப்பை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின்கீழ் இயங் கிடும் நீதிமன்றங்களிலிருந்து கழற்றிக் கொண்டு, மாநிலங் களில் வருவாய்த் துறைகளின்கீழ் இயங்கும் அலுவலர்களிடம் மாற்றியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

டில்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வருவாய்த்துறை என்பது அரசின் கட்டுப் பாட்டில் இயங்கக் கூடிய ஒன்றாகும். புதிய வேளாண் சட்டங்களின்படி மாநிலங்களில் உள்ள சிவில் நீதிமன்றங்களின் அதிகார வரம்பு எல்லைகளும், சில மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பு எல்லைகளும்கூட பாதிப்புக்குள்ளாகும்.

இதுநாள் வரையிலும் விவசாயிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை அவர்கள் தங்கள் மாநிலங்களில் இயங்கிடும் சிவில் நீதிமன்றங்களின்முன் வழக்கு தொடுத்துத் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் இனி அவ்வாறு செய்ய முடியாது. விவசாயிகள் தங்கள் மாநிலங்களில் வருவாய்த் துறையின் கீழ் இயங்கிடும் சமரசநீதி மன்றம் (conciliation court) போன்ற நீதிமன்ற ங் களில் தான் முறையிட்டுத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தீர்ப்பு அளிக்கும் நீதிமன் றங்கள் அர சாங்கங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுகின்றன.வருவாய்த் துறையின் கீழ் இயங்கிடும் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் எப்போதும் ஆட்சியில் உள்ளவர் களின் சொல்படிதான் நடந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள்.

இது, நீதித்துறை இதுவரையிலும் கடைப்பிடித்து வந்த நீதித்துறை சுதந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு எதிரானது. இவ்வாறு, விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொறுப்பை, இதுவரை யிலும் இருந்து வந்த, நீதிமன்றத்தின் அதிகாரவரம்பு எல்லையை ஒழித்துக் கட்டிவிட்டு, அதிகாரங்களை வருவாய்த் துறை அதிகாரிகளின் கைகளில் ஒப்படைத்திருப்பதன் பின்னே யுள்ள மனோ பாவம், ஊழலுக்கும் வழிவகுத்திடும். இந்தச் சட்டங் களின் மூலம் நீதி வழங்கும் அமைப்பு முறையை அரசு தன் கட்டைவிரலின் அசைவுக்கேற்ப மாற்ற விரும்பியிருப்ப தாகவே தெரிகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு  ஆதரவு தெரிவித்த நிலையில்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுக்காவல்

புதுடில்லி,டிச.8, நாடு முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 26ஆம் தேதி முதல், டில்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 13ஆவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், அரசு அவர்களுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, 6ஆவது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று (8.12.2020) திட்டமிட்டபடி நாடுதழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பலத்த ஆதரவு பெருகிவரும் நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை அங்கு செய்துவருகின்றனர்.

  இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தகவல் தெரிவித் துள்ளது. அவரது வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல காவல்துறையினர் அனு மதிக்க வில்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தது.

 

 

No comments:

Post a Comment