ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 9, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     விவசாய அமைப்புகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய பேச்சு வார்த்தை எந்த முடிவையும் எட்ட முடியாமல் தோல்வியடந்தது. இன்று நடக்க இருந்த விவசாய அமைச்சருடன் பேச்சு வார்த்தையும் ஒத்தி வைக்கப்படுள்ளது.

·     மோடி அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி அருகே  நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தனித் தன்மை வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு அசம்பாவிதமும் இதுவரை நடைபெறாமல் நாள் தோறும் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் அமைதியாக போராடி வருகிறார்கள். பாஜக - ஆர்.எஸ்.எஸ். தவிர்த்து அனைவரும் ஆதரவு தருகிறார்கள். தேச விரோதிகள், ஹிந்து விரோதிகள், பாகிஸ்தானுக்குப் போ என்றெல்லாம் சொல்ல முடியாத நிலையில் இந்த போராட்டம் ஒரு இயக்கமாக நடைபெறுகிறது என ஆனந்த் கே.சகாய் தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

·     விவசாய சட்டம் ரத்து குறித்து கருத்து தெரிவிக்க சரத் பவார், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்கள்.

·     டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தாகவும், தாங்கள் அவரை சந்திக்க முடியவில்லை என்றும் அக்கட்சித் தொண்டர்கள், கேஜ்ரிவால் வீட்டு வாசலில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

·     டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற முழு அடைப்புக்கு கலப்பை, டிராக்டர், பயிர்கள் படங்களை வெளியிட்டு பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்தனர்.

·     சென்னை சேலம் எட்டு வழிச் சாலை அமைத்திட அரசு முன் அனுமதி பெற தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

·     பிரிட்டனில் வசிக்கும் மாகி விருது பெற்ற 90 வயது மூதாட்டியார் மார்கிரட் கீனனுக்கு முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

·     புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அவசரம் அவசரமாக குஜராத்தைச் சேர்ந் தவர்களை ஒப்பந்ததாரர் ஆக்கி இந்த கட்டடம் கட்டுவதில் ஆளும் கட்சியினர்க்கு பலன்கள் இருக்கலாம் என செய்திகள் வருகின்றன. டிசம்பர் 10ஆம் தேதி அடிக்கல் நாட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், மதசார்பின்மைக் கொள் கைக்கு எதிராக பூமி பூஜைகள் நடத்தப்படும் நிலையும் உள்ளது என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பும் அனைத்து அறிவிக்கைகளையும் அந்தந்த மாநில மொழியிலும் மொழி பெயர்த்து அனுப்பிட வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

·     அரசுப்பள்ளியில் தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதுபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்துவரும் மாணவர்க ளுக்கும் அளிக்க வேண்டும் என்ற பொது நல மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய பிரதேசத்தில் தேர்வாணையம் மூலமாக பணியமர்த்திடுவதில் நடைபெற்ற புகழ் பெற்றவியாபம் ஊழல்குறித்த வழக்கில் மேலும் குற்றச்சாட்டுக்களை சிபிஅய் தற்போது இணைத்துள்ளது. ஏறத்தாழ 16 லட்சம் பேர்கள் போலியாக இந்த தேர்வில் கலந்து கொண்டதாக சிபிஅய் தெரிவித்துள்ளது.

தி டெலிகிராப்:

·     .பி.யில் மதம் மாறி திருமணம் செய்வதைத் தடுக்கும் சட்டம் என்ற பெயரில் பலரையும் அரசு கைது செய்து வருகிறது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒரு அரசும் அதன் காவல் துறையும் எவ்வாறு செயல்படலாம் என தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது..

குடந்தை கருணா

9.12.2020

No comments:

Post a Comment