மத்திய அரசின் விவசாய விரோத புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 8-12-2020 அன்று நடைபெறும்(முழு அடைப்பு) மறியலில் பங்கேற்ற அனைத்துக் கட்சி தோழர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் கீழவாசல் எம்.ஆர். திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைத்துக்கட்சி முக்கிய பொறுப்பாளர்களிடம் விடுதலை சந்தா சேகரிக்கும் பணியில் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். தி.மு.க தலைமைச்செயற்குழு உறுப்பினர் து.செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க மாநிலசெயலாளர் சி.சந்திரகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி ஆகியோர் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் ஆகியோரிடம் வழங்கினார், உடன் மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகரச் செயலாளர் சு.முருகேசன் இருந்தனர்.
No comments:
Post a Comment