வடபுலத்தில் சில ஜாதிகளை வைத்து சில உத்திகளை செய்தார்!
அந்த வித்தைகள் இங்கே எடுபடாது - தமிழக மண் சமூகநீதி மண்; மக்கள் தெளிவாக உள்ளனர்!
சிறப்புக் கூட்டத்தில் காணொலிமூலம் தமிழர் தலைவர்
சென்னை, டிச.9 ஜாதி அரசியலை செய்து பார்த்தவர் தானே, அமித்ஷா! இங்கே சிலரைப் பிரித்து வைத்தார்கள்; வடபுலத்திலே, சில ஜாதிகளை வைத்து சில உத்திகளை செய்தார்கள். அந்த வித்தை கள் அங்கே எடுபடலாம்? ஆனால், தமிழக மண் சமூகநீதி மண். இங்கே தெளிவாக உள்ளனர் தமிழக மக்கள். உங்கள் வித்தைகள் இங்கே பயன்படாது. எனவே, நீங்கள் நிச்சயமாக அந்த முறையை நம் பினால், தோல்வி அடைவதைத் தவிர வேறு வழி கிடையாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும்- கூட்டணி வியூகங்களும்''
கடந்த 24.11.2020 அன்று மாலை ‘‘2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும்- கூட்டணி வியூகங் களும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது சிறப்புரை யின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
காலங்காலமாக தமிழகம், சமூகநீதிக்காக, இந்தியா விற்கு வழிகாட்டிய மாநிலமாகும்.
ஆனால், பா.ஜ.க.வினுடைய வரலாறு என்ன?
வி.பி.சிங் அவர்களுடைய ஆட்சியைக் கவிழ்த் தார்கள் என்ற தகவல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தெரியும்.
எதற்காக? மண்டல் கமிசனுக்காக!
எதற்காக? வி.பி.சிங் வேலை வாய்ப்பைக் கொடுத் தார் என்பதற்காக.
அதற்குப் பிறகு வந்த மத்திய காங்கிரஸ் ஆட்சி யில், திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்று, அதன்மூலமாக கலைஞர் அவர்கள், மத்திய அரசாங்கத்தில், பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு என்பதற்காக அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள்.
பெண்களைப் பொறுத்தவரையில், பெண்களுக்கு உரிமையோ, பெண்களுக்குச் சொத்துரிமையோ கொடுக்கக் கூடாது என்பதற்காக, கீதா பிரஸ் என்று, கோரக்பூரில் ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, அங்கே சனாதனிகளுடைய அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அமைப்பு என்று சொல்லி, அம்பேத்கரை சட்டபூர்வமாகவே அமைச்சராக விடக் கூடாது என்று தடுத்தனர். 'இந்து கோட் பில்' என்பதை அமைச்சரவையில் நிறைவேற்றக் கூடாது என்பதைத் தடுத்தனர். குடியரசுத் தலைவர் உள்பட நெருக்கடி கொடுத்தவுடன், அதுவரையில், ஆதரவாக இருந்த பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்களாலும், அதற்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை.
கொள்கைக்காக அண்ணல் அம்பேத்கர்
பதவியைத் தூக்கி எறிந்தார்
"எனக்கு பதவி முக்கியமல்ல; என்னுடைய கொள் கையைச் செய்ய முடியவில்லை. பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, இந்தப் பதவியில் இருந்து என்ன லாபம்?" என்று சொல்லி, அமைச்சர் பதவி யைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.
கொள்கையா? பதவியா? என்று சொல்லும் பொழுது - அன்றைய நிலையையும், இன்றைய நிலை யையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!
அம்பேத்கர், தன்னுடைய சட்ட அமைச்சர் பத வியை ஒரு நொடிப் பொழுதில் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்.
அம்பேத்கர் அவர்களைச் செய்யவிடாமல், எந்த சனாதனம் அங்கே அமர்ந்துகொண்டு தடுத்ததோ, அதே திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் பங்கேற்ற 2005இல் பெண்களுக்குச் சொத்துரிமை என்ற சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதே, அது யாருடைய சாதனை?
மத்திய அரசில் பங்கேற்ற தி.மு.க. என்ன செய்தது என்று வாய்ப் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கேட்கிறீர்களே, காலம் காலமாக, பல்லாயிரம் கணக்கு ஆண்டுகளாக மறுக்கப்பட்ட பாலின நீதி, ஒரு பக்கம் சமூகநீதி - இன்னொரு பக்கம் பாலியல் நீதி. எனவே, பாலியல் நீதி கலந்த சமூகநீதி. இன்னமும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உரிய இடம் கிடைக்கவில்லையே! பல பிரதமர்களை நாடு பார்த்துவிட்ட நிலையில், வரவில்லையே என்று இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்ற இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமும், அதனுடைய கூட் டணியில் இருக்கின்ற கட்சிகளும் இருக்கின்றன.
மத்தியில் இரண்டு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந் திருக்கிறதே, அக்கறை உங்களுக்கு உண்டா? ஆர். எஸ்.எஸ். அமைப்பு தொடங்கும்பொழுது, அந்த அமைப்பில் பெண்களை சேர்ப்பதற்கு அனுமதித் தீர்களா? 10 ஆண்டுகள் கழித்துதான், பெண்கள் அமைப்பே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உருவானது. இன்னுங்கேட்டால், பெண்களுக்கு உரிய முக்கியத்து வத்தை ஆர்.எஸ்.எஸ்., சமமாகக் கொடுக்கவில்லை.
பா.ஜ.க.வில் அரசியல் அணிகள் உருவாகியிருக் கலாம். இது பின்னாளில் ஏற்பட்டிருக்கின்ற தந்திரமான சில மாற்றங்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், பெண் களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக் கிறார்கள்? என்பதை எண்ணிப்பாருங்கள்.
தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில்,
பகுத்தறிவு மண்; சமூகநீதி மண்
திராவிடர் கழகத்திற்கு, ஒரு பெண் தலைமை தாங்கக் கூடிய அளவிற்கு வந்தார்களே, அதுபோன்ற நிலை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் வருமா? என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்க முடியும்? தயவு செய்து புரிந்துகொள்ளவேண்டும்.
எதற்காக இதனைச் சுட்டிக்காட்டுகிறோம் என் றால், வெறும் அரசியல் பார்வையல்ல இது. சமுதாயம் சார்ந்த மக்கள் பார்வை - மக்கள் உரிமைகளுக்கான பார்வை இது. தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில், பகுத்தறிவு மண்; சமூகநீதி மண்.
எனவே, மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். கடவுள் நம்பிக்கையாளர்களாகக் கூட இருப்பார்கள்; கோவிலுக்குக்கூட செல்வார்கள். ஆனால், வாக்குச் சாவடிகளுக்கு அவர்கள் போகின்ற நேரத்தில், யார் நம்முடைய உரிமைகளைப் பாதுகாக்கக் கூடியவர்கள் என்பது தெரியும்.
ஆகையால்தான், 1971 ஆம் ஆண்டு தவத்திரு அடிகளார் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்,
''இன்றைய ஆத்திகம் என்பது ஆதிக்கவாதிகளு டைய கொடுங்கரத்தைப் பலப்படுத்துவது. இன்றைக்கு நாத்திகம் சமூக மக்களுக்காகப் பேசக்கூடியது; எது தேவை?'' என்று, அவர் சொன்னது, கல்லில் செதுக்கப் படவேண்டியது; என்றைக்கும் அழியாத ஒரு தத்து வத்தை விளக்கிச் சொன்னார்.
எனவேதான், மக்களை "ஆத்திகம் - நாத்திகம்" என்று சொல்லிக் குழப்ப முடியாது. நீங்கள் 'வேலை'த் தூக்கினாலும், ஈட்டியைத் தூக்கினாலும், எதைத் தூக்கினாலும் ஒன்றும் நடக்காது. வேலைக்கு ஆகாது; வெற்றி ங்கள் கதவைத் தட்டாது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல, சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரசுவதி, விசுவ இந்து பரிசத் என்ற பெயராலே, திருச்சியில் பிரவீன் தொகாடியா என்று ஒரு டாக்டரை அழைத்து வந்து, (இப்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாது) திரிசூலத்தை வழங்கினார்கள். அந்தத் திரிசூலத்தில், ஒரு முனை, கிறித்தவ மதத்தவருக்கு, இன்னொரு முனை, இஸ்லா மிய மதத்தவருக்கு, இன்னொரு முனை ஆத்திகத்தை எதிர்க்கின்ற நாத்திகர்களுக்கு என்று வியாக்கியானம் சொன்னார்களே, அந்த சூலம், அவரையே சுற்றி சுற்றி, அவர் எங்கே ஓடினார் என்றே சொல்ல முடி யாத அளவிற்கு வந்தது. ஆகவே, இவையெல்லாம் பயன்படாது.
இந்தியாவில் வேலையில்லாமல்
கோடிக்கணக்கான இளைஞர்கள்!
வேலையில்லாமல் கோடிக்கணக்கான இளைஞர் கள் இந்த மண்ணிலே பரிதவித்துக் கொண்டிருக் கிறார்கள். அதற்கு என்ன வழி? அதற்காக என்ன செய்திருக்கிறார்கள்? தமிழ்நாட்டு மக்களுக்கு முன் னுரிமை கொடுக்கவேண்டும். அதேநேரத்தில், பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலத்தை எடுத்துக்கொண்டால், 80 விழுக்காடு வாய்ப்பினை உள்ளூர்க்காரர்களுக்குத் தான் கொடுப்போம் என்று சட்டம் இயற்றுகிறார்கள். அதேபோல, மற்ற இடங்களில் சொல்கிறார்கள்.
தமிழ்நாடு என்று வரும்பொழுது, அந்தப் பேச் சுக்கே இடம் கிடையாது என்கிறார்கள். தமிழகத்தில், ரயில்வே அமைப்பாக இருந்தாலும், பொன்மலை அமைப்பாக இருந்தாலும், வங்கிகளுடைய தேர்வாக இருந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி! அநீதி! அநீதி! என்பதுதான். அவர்களுக்கு இடமில்லாமல் செய்யக்கூடிய அளவிற்குத் தந்திரங்களும், சூழ்ச்சி களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது, எரிமலை எரிவதைப்போல, மனதிற்குள் எரிந்து கொண்டிருக்கிறது.
எப்போது வாக்குச் சாவடிக்குப் போவோம் என்று நினைக்கக்கூடிய அந்த உணர்வை இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். இது கட்சியைப் பொறுத்ததல்ல; இது லட்சியத்தைப் பொறுத்தது. அவர்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு நீங்கள் செய்த பரிகாரம் என்ன?
இந்த இரண்டாண்டு காலத்தில், தமிழக மக்களுக்கு எப்படிப்பட்ட அநீதிகளை செய்திருக்கிறது மத்திய அரசு.
இங்கே இருக்கின்ற ஆளுங்கட்சி, "நீட் தேர்வை நாங்கள் ஒழிப்போம்" என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்காக எந்தவிதமான வலியுறுத்தலும் கிடையாது.
அரும்பாடுபட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக வழக்குப் போட்டது, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள கட்சிகள், திராவிடர் கழகம் உள்பட வழக்குகள் போட்டன.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சொல்கிறார்கள்!
மருத்துவப் பட்டப் படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு தெளிவாக வந்தபொழுது, அந்தத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடிய அளவிற்கு, அந்த உரிமைகளைப் போராடிப் பெறக் கூடிய ஓர் ஆட்சி இங்கே இருக்கிறதா?
நாங்கள் வெளிப்படையாகவே கொடுக்கமாட் டோம் என்று மத்திய அரசின் சார்பாக, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக சொல்கிறார்கள். உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது, தமிழ் மண்ணில்; எங்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று கேட்பதற்கு?
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுவதா?
உயர்ஜாதியினரில் "பொருளாதாரத்தில் பின்தங்கி யோருக்கு" 10 சதவிகித இட ஒதுக்கீட்டில் நீங்கள் காட்டுகின்ற அக்கறையை, எங்களுடைய பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதில் காட்ட வேண்டாமா?
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுவதா? என்று கேட்ட காரணத்தினால்தானே, இப்போது 10 சதவிகித உள்ஒதுக்கீடு தரலாம் என்று சொல்லி. அதிலும், 10 சதவிகிதத்தை நடைமுறைப்படுத்தவில் லையே! 7.5 சதவிகிதம் என்ற அளவில் தானே உங்களால் கொண்டு வர முடிந்தது.
பண்பாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால், மொழிப் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் பார்த்தாலும் சரி, மொழி உரிமை என்ற அளவிற்கு வாய்ப்புகளைப் பார்த்தாலும் சரி, எந்தத் துறையில் தமிழ்நாடு இருக்கிறது?
அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஓராண்டு இருந்தபொழுது, அமெரிக்காவிற்குப் போய்விட்டு திரும்பிய பிறகு, உடல்நலக் குறைவு ஏற்பட்டபொழுது ஆற்றிய சொற்பொழிவில் சொன்ன தத்துவம் இருக்கிறதே, அது மிக முக்கியமான தத்துவமாகும்.
அண்ணாவின் முப்பெரும் சாதனைகள்!
ஏதோ மூன்று செய்திகளை அன்றைக்குச் சொன்னார் என்பதல்ல.
அண்ணா அவர்கள் சொன்னபொழுது, ஓராண்டு காலத்தில் முப்பெரும் சாதனைகளைச் செய்தோம்.
1. சுயமரியாதைத் திருமணச் சட்ட வடிவம்!
2. தாய்த் திருநாட்டுக்கு, தாய் மண்ணுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்.
3. இருமொழிக் கொள்கைகள் தமிழ் - ஆங்கிலம் தான்.
இதிலே கைவைக்கக் கூடிய துணிச்சல் உங்களுக்கு உண்டா? இன்றைக்கு நீங்கள் முட்டிப் பார்க்கிறீர்களே, மறைமுகமாக முன்னே பார்த்தால், நாய்க்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை என்று பழமொழி சொல்வதுபோல, பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் என்று மாறி மாறி சொல்லக்கூடிய, விலாங்கு அரசியல் போன்று, இந்த மாநிலத்தில் இருக்கின்ற ஓர் ஆட்சி, சட்டபூர்வமாக, அதிகாரப்பூர்வமாக நாங்கள் மும் மொழித் திட்டத்தை செய்வோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறதா? நீங்கள் சொல் வதை ஏற்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்களா?
ஆனால், அவர்களோடு நீங்கள் கூட்டு சேர்ந் தாவது, கொஞ்சம் கொஞ்சமாக வருவார்களாம்; பிறகு அடுத்த அய்ந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டை அவர்கள் வயப்படுத்திக் கொள்வார்களாம். இது போன்ற ஒரு திட்டத்தைப் போடுகிறீர்களே, எந்த அளவிற்கு இந்தத் திட்டம் பயனளிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர் கள், அரசு விழா என்ற பெயரால் அரசியல் பேசினார்.
குடும்ப அரசியல் - ஊழல், ஊழல்
ஜாதி அரசியல் என்றார்.
தமிழகத்தில் உங்கள் வித்தைகள் எடுபடாது
ஜாதி அரசியலை செய்து பார்த்தவர்தானே, அமித்ஷா! அதைத்தானே என்னுடைய தொடக்க உரையிலேயே சொன்னேன். இங்கே சிலரைப் பிரித்து வைத்தார்கள்; வடபுலத்திலே, சில ஜாதிகளை வைத்து சில உத்திகளை செய்தார்கள். அந்த வித்தைகள் அங்கே எடுபடலாம்? ஆனால், தமிழக மண் சமூகநீதி மண். இங்கே தெளிவாக உள்ளனர் தமிழக மக்கள். உங்கள் வித்தைகள் இங்கே பயன்படாது.
எனவே, நீங்கள் நிச்சயமாக அந்த முறையை நம்பினால், தோல்வி அடைவதைத் தவிர வேறு வழி கிடையாது.
அடுத்ததாக, ஊழலைப்பற்றி, அமைச்சர்களை வைத்துக் கொண்டு பேசுகிறீர்களே; தலைமைச் செயலகத்தின் உள்ளேயே மிகப்பெரிய அளவிற்கு லஞ்சம் ஊழல் என்று உள்ளே நுழைந்தது வழக்கு முடிந்துவிட்டதா?
குட்கா ஊழல் என்று, கணக்குப் போட்டு, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற பட்டிய லைக் கண்டுபிடித்தார்கள்; ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்ன நடந்தது? முடிந்துவிட்டதா?
டி.ஜி.பி. அலுவலகத்திற்கு உள்ளேயே போனார்கள் என்ற வரலாறு இருக்கிறதே, அது முடிந்துவிட்டதா?
- தொடரும்
No comments:
Post a Comment