டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· மத்திய அரசின் இணை
செயலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு நேரடியான
நியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல்
தனியார் நிறுவனங்களில் இருந்து மோடி அரசு நியமனம்
செய்த ஒன்பது பேரில் பலரும்
ஒரு ஆண்டுக்குப் பிறகு விலகும் நிலை
ஏற்பட்டுள்ளது மோடி அரசுக்கு பெரும்
பின்னடைவு என பத்திரிக்கையாளர் திலீப்
செரியன் குறிப்பிட்டுள்ளார்.
· திருப்பதி கோயிலுக்கு ஆந்திர அரசின் முதல்வர்
என்ற நிலையில் சென்றுள்ளதால், அவரது மதம் சார்ந்த
நம்பிக்கைக் குறித்து எந்த உறுதிமொழியும் தர
வேண்டியதில்லை என ஆந்திர உயர்
நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
· வேளாண் சட்டம் குறித்து
விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு நடத்திய
பேச்சு வார்த்தையில் மின் கட்டணம் குறித்து
மட்டுமே ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் சனவரி 4-ஆம் தேதி பேச்சு
வார்த்தை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
· டில்லி அருகே சிங்கு
பகுதியில் போராடும் விவசாயிகளின் உடைகளைத் தைத்துக் கொடுப்பதற்காக தையல்
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
· மேற்கு வங்க ஆளுநர்
ஜகதீப் தன்கார், பாஜக அரசுக்கு ஆதரவாக
செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரைத் திரும்பப்
பெற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ்,
குடியரசுத் தலைவருக்கு கடிதம்
அனுப்பியுள்ளது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· ஒரே நாடு, ஒரே
தேர்தல் என்ற மோடி அரசின்
முழக்கத்தை உள்ளாட்சி தேர்தல்வரை அமல்படுத்த வேண்டும் என பாஜகவினால் நாடு
தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
· லவ் ஜிகாத் என்ற
பெயரில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
வேறு மதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று கூறுபவர்கள், வேறு
மதத்தில் இருந்து ஹிந்து மதத்துக்கு வர
வேண்டும் என்றும் கூறுகிறார்கள் என எழுத்தாளர் சபா
நக்வி குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
· மூன்று புதிய வேளாண்
சட்டங்களை ரத்து செய்யுமாறு போராடும்
விவசாயிகளின் கோரிக்கையில் மத்திய அரசு எந்த
முடிவும் எடுக்கவில்லை. போராட்டம் தொடர்கிறது.
· போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நரேந்திர மோடியை கேள்வி எழுப்புகின்றனர்புதிய
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதன் தீமைகள் என்ன, அவை திரும்பப்
பெறப்பட்டால் யார் எதை இழக்க
நேரிடும்? அரசாங்கம் எதை இழக்கும்? அதானி-அம்பானி மற்றும், ஒருவேளை, லாலா ராம்தேவ் தவிர
யார் இழக்க நேரிடும்? இந்த
சட்டங்களை திரும்ப பெறுவதன் மூலம் இந்தியாவின் நலன்கள்
எவ்வாறு பாதிக்கப்படும்? என்பது குறித்து பிரதமர்
விவாதம் செய்ய வேண்டாம். நேர்மையாக
பதிலளிக்கட்டும் என டில்லி-காசியாபாத்
எல்லையில் உள்ள விவசாயிகளில் ஒருவரான
ஹர்ஜித் சிங் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
· புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை விஞ்ஞான ரீதியில் அணுக வேண்டும் என
இந்திய நாகரிகத்தில் பொதிந்துள்ள ஒத்திசைவு மற்றும் உள்ளடக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற
கருத்தரங்கில் வரலாற்றாசிரியர்கள் பேசினர். ஆர்.எஸ்.எஸ்.
- பாஜக கூறும் ஒற்றைக் கலாச்சாரம்
தவறான நிலைப்பாடு; இந்தியா பன்முகத் தன்மைக் கொண்டது என்றும் கூறினர்.
· ஒடிசா மாநிலத்தில் அரசுப்
பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத
இட ஒதுக்கீட்டை அரசுக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்திட
நவீன் பட் நாயக் எடுத்த
முடிவிற்கு காங்கிரஸ், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
· தகவல் அறியும் ஆணையத்தின்
தலைமை அதிகாரி மற்றும் உறுப்பினர்களின் தேர்வில் விண்ணப்பிக்காதவர்களையும் உறுப்பினராக மோடி அரசு தேர்வு
செய்துள்ளதில் முறைகேடு நடந்துள்ளது என சாதர்க் நாக்ரிக்
சங்காதன் என்ற தொண்டு நிறுவனம்
மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளது.
- குடந்தை
கருணா
31.12.2020
No comments:
Post a Comment