அடிப்படை சரியில்லை
அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டபோது 25 அடி ஆழத்தில் இலகுவான மணற்பரப்பு இருந்ததால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்.
பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமன் கோவில் கட்டுவது என்ற அடிப்படையே சரியில்லைதானே.
மயிரிழையில் வேறுபாடு கிடையாது!
கேள்வி: நீங்கள் திரு.சோ அவர்களிடம் வேறுபட்டு நிற்கும் இடம் எது?
பதில்: அவர் தலைக்குள் இருந்த அளவுக்கு அறிவாற்றல் எனக்கு இல்லை. என் தலையில் இருக்கும் சிறிதளவு முடிகூட அவருக்கு இல்லை.
- துக்ளக், 16.12.2020
ஆனால், பூணூல் பாசத்தில் மட்டும் அபார ஒற்றுமை - பெண்களை இழிவுபடுத்தி எழுதுவதில் மட்டும் ஏகப்பட்ட ஒற்றுமை! இதில் எல்லாம் ‘மயிரிழை' வித்தியாசம்கூட கிடையவே கிடையாது.
ஆட்சி நடத்துவது யார்?
கிறிஸ்துமஸ் விழாவில் ஹிந்துக்கள் பங்கேற்கக் கூடாது: - அஸ்ஸாம் இந்துத்துவா அமைப்பு.
இந்த அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? நடப்பது சங் பரிவார் ஆட்சி என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
கார்ப்பரேட்டின் கைங்கர்யம்!
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மின்சார இரயில் தொடக்கம்.
130 ரூபாயாக இருந்த கட்டணம் இப்பொழுது கார்ப்பரேட்டுகளின் கைக்குச் சென்ற நிலையில், ரூ.மூவாயிரமாம்!
கார்ப்பரேட்டுகள் என்றால் கொள்ளையோ கொள்ளை என்பது புரிகிறதா?
ஆட்டுக்குத் தாடி எதற்கு?
தமிழ்வழி படித்தவர்களுக்கு அரசுப்பணிகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொணரப்பட்டது. அதில் திருத்தங்கள் இவ்வாண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
ஆளுநர் என்றாலே முட்டுக்கட்டை போடுபவர் என்ற பொதுக் கருத்து உருவாகி வருகிறது. ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு? என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுண்டு.
சவாலுக்கு என்ன பதில்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்நாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்மீது அவதூறு பரப்பியதாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா மீது காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) அ.தி.மு.க. வழக்குரைஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிப்பு.
ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டுகளையும், தம்மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்தும், நேரடியாக விவாதிக்கத் தயாரா என்ற சவாலையும் விடுத்திருந்தார். அவற்றைச் சந்திக்க முடியாத நிலையில், டிஜிபியிடம் சரண் அடைந்துள்ளது அ.தி.மு.க.
அப்படி வாங்க...
மத்திய அரசு செய்த நன்மைகளை விவசாயிகளிடம் விளக்குவோம்: எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.
அப்படி வாங்க - அப்பொழுதுதான் மக்கள் எந்த அளவுக்கு வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்பதை நேரில் அறியலாம் அல்லவா!
‘பராக்', ‘பராக்' என்னாச்சு?
வேல் யாத்திரை - திருச்செந்தூரில் நிறைவு யாத்திரை - விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 பேர்மீது வழக்கு.
மத்திய பிரதேச முதலமைச்சர் சவுகான் ‘பராக், பராக்' என்று விளம்பரம் செய்தது எல்லாம் மக்களை ஏமாற்றத்தானா?
No comments:
Post a Comment