புதுடில்லி, டிச. 16 குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்ற வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகை 130 கோடியை தாண்டியுள்ள நிலையில், நாடு முழுவதும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல் படுத்த உத்தரவிடக் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அஸ்வினிகுமார் உபாத்யாயா என்ற வழக்குரைஞர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், இந்தியாவில் அதி கரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு குடும்பம் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வகையில் நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையில் தான் சட்டம் இயற்றப்பட வேண் டும். நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக் கல் செய்யப்பட்டது. அதில் கூறப் பட்டுள்ளதாவது:
மக்கள் தொகையை கட்டுப் படுத்துவதற்காகவே, ‘தேசிய மக்கள் தொகை கொள்கை- 2000’ அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், 2025-ஆம் ஆண்டுக்குள் தேசிய கருத்தரிப்பு விகிதத்தை 2.1 சதவீதமாக குறைப்பதற்கான திட்டம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இந்த சீர்திருத்தங்களை மாநிலங்கள் வெற்றிகரமாக நடை முறைப்படுத்துவதற்கான உதவிகள் மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற பணிகளை மட்டுமே மத்திய சுகாதார அமைச்சகம் மேற்கொள்ளும். மாறாக, மத்திய அரசுக்கு இதில் நேரடி பங்கு எதுவும் கிடையாது
தம்பதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை என்னவாக இருக்க வேண்டும் என்று அவர்களே தீர்மானித்து, அதற்கு ஏற்ப குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை அவர்களே தேர்வு செய்துகொள்ளும் வகையில்தான், குடும்பநலத் திட்ட நடைமுறைகள் நாட்டில் அமைந்திருக்கின்றன.
மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத் துவதற்காக, குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி மக் களை கட்டாயப்படுத் தவோ, திணிக்கவோ முடி யாது. இத்தனை குழந் தைகளைத்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்த முடியாது.
குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயப்படுத்துவது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதோடு, மக்கள் தொகை பரவலின் சிதைவுக்கும் வழிவகுத்துவிடும் என்பதை பன்னாட்டு அனுபவங்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றன. அதனால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவது இயலா ததாகும். மேம்பாட்டுக்கான 1994-ஆம் ஆண்டு பன்னாட்டு மாநாட்டின் செயல் திட்டத்தில் இந்தியா கையொப்ப மிட்டுள்ளது. அதன்படி, மக்கள் மீது குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாகத் திணிப்பதற்கு இந்தியா எதிராக உள்ளது. இதில் எவ்வித அய்யத்துக்கும் இடமின்றி அரசு தெளிவாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment