ஒற்றைப் பத்தி : திராவிட மானிடவியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 11, 2020

ஒற்றைப் பத்தி : திராவிட மானிடவியல்

ஆரியராவது- திராவிட ராவது என்பவர்களுக்கும், திராவிடர் என்று சொல்லக் கூடாது - தமிழர் என்று மட்டுமே சொல்லவேண்டும் என்பவர்களுக்கும், பிராம ணர்களுக்குப் பெயர்தான் திராவிடர்கள் என்று கூறும் பேர்வழிகளுக்கும் ‘‘திராவிட மானிடவியல்'' எனும் (நூல் ஆசிரியர் பக்தவத்சல பாரதி) நூல் ஆய்வுப் பூர்வமாக பதிலடி கொடுக்கிறது.

அதில் இதோ ஒரு பக்கம்....

‘‘உண்மையில் திராவிடக் குடிகள் இந்தியத்துணைக் கண் டத்தில் மிக நீண்ட வரலாற்று அசைவியக்கம் கொண்டவர் கள். இத்துணைக் கண்டத்தின் அனைத்து நிலப்பரப்போடும் தொடர்புடையவர்கள்; வாழ்ந்த வர்கள்; இன்றும் வாழ்ந்து வருபவர்கள்.

இன்று இந்தியாவில் உள்ள 461 பழங்குடிகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பழங்குடி கோண்டுகள் ஆவர். இவர்கள் திராவிடப் பழங் குடியினர். நடு இந்தியப் பகுதி களில் வாழ்கிறார்கள். அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பழங்குடி பீல்கள். ராஜஸ்தான் தொடங்கி வட இந்தியாவில் 7 மாநிலங்களில் பரவி வாழ்கின்றனர். இவர் களும் திராவிடப் பழங்குடி களே. நான்காவது பெரிய பழங்குடியான ஒராவன் திரா விடப் பழங்குடியே. இந்தியா வின் ஏழாவது பெரிய பழங் குடியான கோந்த் பழங்குடியும் திராவிடப் பழங்குடியே. ஒரிசா விலும் அதனை ஒட்டிய மாநி லங்களிலும் இவர்கள் வாழ் கிறார்கள்.

இந்நிலையில் திராவிடப் பழங்குடிகள் என்ற சொல் லாட்சியை எங்ஙனம் கையாள வேண்டும் என்பது இப்போது நமக்குத் தெளிவாகிறது. பண் டைய தமிழ்ச் சமூகத்தின் தொல் கூறுகளை அறிவதற்கு இந்த வடஇந்தியத் திராவிடப் பழங்குடிகளை ஆராய வேண் டியது அவசியமாகிறது.

அடுத்ததாகப் பண்டைய திராவிடப் பழங்குடிகளுக்கான உறவினை ஆராய இன்றைய தென்னிந்தியாவை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. பண்டைய திராவிடப் பகுதி விரிந்த பரப்புடைய ஒரு அகண்ட பிரதேசமாக இருந் ததை நாம் அறிவோம். இந் நிலையில் பழந்தமிழர் மரபின் பல கூறுகளை இன்றும் எச் சங்களாக இந்த அகண்ட தமி ழகத்தில் தான் காணமுடிகிறது. இன்றைய தமிழகத்தில் பல கூறுகளை இனங்காண முடிய வில்லை.

பிராமணர்கள் வீட்டிற்கு வந்து சென்றவுடன் தீட்டுப் பட்டுவிட்டதாக எண்ணி வீட்டைச் சுத்தம் செய்யும் பழங்குடியை அறிந்திருக்கி றோமா? குறிச்சன் பழங்குடி யினர், பிராமணர்களிடம் மிகுந்த வெறுப்புடையவர்கள். பிராமணன் ஒருவன் குறிச்சன் இல்லத்திற்கு வந்து சென்றதும் அவன் உட்கார்ந்திருந்த இடத் தினைச் சாணியால் மெழுகித் தீட்டு நீக்குவர் (தர்ஸ்டன் 1909, 4:157) என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளோமா? பிரா மணர்களின் பிற்கால ஜாதி உயர்வினைப் பண்பாட்டு ரீதி யில் விளக்குவதற்குப் பழங் குடியியல் ஆய்வு உதவ முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா?''

சிந்திப்பீர்!

 - மயிலாடன்

No comments:

Post a Comment