கழகக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் (எம்.பி.பி.எஸ்.) மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர் - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

கழகக் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் (எம்.பி.பி.எஸ்.) மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர் - பாராட்டு

ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவுத் தொழிலாளர் திருவாளர்கள் செந்தில்குமார் - கண்ணம்மாள் ஆகியோரது மகள் சுபசிறீநி சிவகிரி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் +2 படித்துக் கொண்டே வீட்டிலிருந்து நீட்" தேர்வுக்கும் தயாராகி எழுதி அரசு அறிவித்துள்ள 7.5 இடஒதுக்கீட்டின்படி அவருக்கு கோவை  PSG மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதனைப் பாராட்டி கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் தந்தை பெரியார் படம் பொறித்த ஒரு பேனா, பார்க்கர் பேனா ஆகியவற்றைப் பரிசளித்தார். உடன் மாவட்டக் கழகத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட அமைப்பாளர் சிவகிரி சண்முகம், சுபசிறீநியின் தந்தை செந்தில்குமார்: 'தந்தை பெரியார் பாடுபட்டதால் தான் சமூகநீதி இடஒதுக்கீட்டின்படி எனது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது' என்று அதன் மகிழ்வாக ஒரு விடுதலை சந்தா வழங்கினார்.

 பெரியார் திடலில் பணியாற்றிய நெல்லுப்பட்டு .இராமலிங்கம்- அமுதா (செவிலியர்) ஆகியோரின் மகன் .இரா.அறிவாளன்  'நீட்' தேர்வில் வெற்றிபெற்று மருத்துவக் கல்லூரியில் (MBBS) இடம் பெற்றமைக்காக கழகப்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், நெடுவை குழந்தை.கவுதமன் ஆகியோர் அறிவாளனுக்கும் அவரை இந்த அளவிற்கு உருவாக்கிய பெற்றோர்களுக்கும் பயனாடை அணிவித்து புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். அதன் மகிழ்வாகவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88-ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாகவும் 2 விடுதலை சந்தாவை குடும்பத்தின் சார்பில் வழங்கினர். 

No comments:

Post a Comment