விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் தமிழகம்- புதுச்சேரியில் பெரும் ஆதரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 8, 2020

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் தமிழகம்- புதுச்சேரியில் பெரும் ஆதரவு!

ஏராளமான கழகத் தோழர்கள் சாலை மறியல் - கைது!

வட மாநிலங்களில் இளைஞர்கள் இரயில் மறியல்

சென்னை, டிச.8 இன்று (8.12.2020) மத்திய அரசின் விவசாய சட்டங் களுக்கு

எதிரான முழு அடைப்புக்கு ஆதரவாக தமிழகத்தில் பெரும்பாலான

இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏராளமான திராவிடர்

கழகத் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, மதுராந்தகம், கும்ப

கோணம், சீர்காழி, புதுக்கோட்டையில் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கோவை, மன்னார்குடி, மதுரை, கோபிச்செட்டிபாளையம், மரக்காணம்,

காஞ்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், நீலகிரி,

ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. சத்தியமங்கலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களிலும் முழு அடைப்புக்கு ஆதரவாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

சிவகங்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாக சிறுவர்,

சிறுமிகள் உள்பட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

கழகத்தினர் மறியல் - கைது!




தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு, சடையார்கோவில், பாப்பா நாடு பகுதிகளில் ஏராளமான கழகத் தோழர்கள் சாலை மறியலில்
ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
கோவையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சந்தைகள் மூடப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 10,000 கடைகள் மூடப்பட்டது. அரசு
பேருந்துகள் இயக்கப்படாததால் தமிழக-கருநாடக எல்லையில் பண்ணாரி
சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் சென்னையில்
பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்துகளும் குறைவாகவே
இயக்கப்படுகிறது.
புதுவையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ
இயங்கவில்லை. மேலும் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி
காணப்படுகிறது. இந்நிலையில் புதுவையில் வர்த்தக நிறுவனங்கள், பெரிய
மார்க்கெட், குபேர் அங்காடி உள்பட அனைத்து கடைகளும் மூடப்
பட்டுள்ளன.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு
மாநிலங்களில் தற்போது முதலே எதிர்க்கட்சிகளும், பல்வேறு தொழிற்
சங்கங்களும் தங்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளன.

வட மாநிலங்களில்...
மகாராட்டிரா மாநிலத்தில் முழு அடைப்பை ஆதரிக்கும் வகையில்
ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புல்டனா மாவட்டத்தில்
நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு
ஏற்பட்டது.
அதேபோல், ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள்,
விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் மறியலில்
ஈடுபட்டனர். இதனால், அந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்
ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்
நடைபெற்று வருகிறது. விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில்
போராட்டம் நடைபெற்றுவருகிறது.
நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் நாட்டின் பல்வேறு
பகுதிகளில் ரயில், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயி
களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்
டுள்ளன. 




No comments:

Post a Comment