திராவிடர் இயக்கத்திற்கு இருக்கும் எத்தனையோ சிறப்புகளில் ஒன்று - தலைவர் களுக்கும் தொண்டர்களுக்கும் இருக்கும் உறவு. அதனால் தான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என்று உறவைச் சொல்லி தொண்டர்களாலும், மக்களாலும் அழைக்கப்படுகின்றனர் - கலைஞர் அவர் களும் தொண்டர்களை 'அன்பு உடன் பிறப்புகளே' என்றே அழைத்தார்.
அந்த வரிசையில் இன்றைக்கு திரா விடர் இயக்கத்தின் வழிக்காட்டியாக விளங் கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள் 88 வயதைக் கடந்தவர். தமிழர்களின் உரிமைக் குரலாக, சமூக நீதி யின் காவலராக விளங்கிக் கொண்டிருக்கக் கூடியவர்.
ஒவ்வொரு முறையும் பெரியார் திடலில் சந்திக்கும்போது, அந்த அன்பான சிரிப் போடு "என்னம்மா, எப்படி இருக்கிறம்மா?" என்று கேட்கும் பொழுது எத்தனையோ கவலைகள் இருந்தாலும், அதை மறந்து "நல்லா இருக்கிறேன் அய்யா" என்ற போது, உள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சி!
ஒருமுறை அரியலூரில் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற மாநாட்டுக்கு இந்து முன்னணியினர் சவால் விடுத்திருந்தனர். கூட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று. எவர் மிரட்டலுக்கும் அஞ்சுமா கழகம்? அரியலூர் மட்டுமல்லாது பல ஊர்களிலிருந் தும் தோழர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். சென்னையிலிருந்து கிளம்பி நானும் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைப் பார்த்து "சென்னையிலிருந்து எப்படி வந்தாய்?, உன்னுடைய அடுத்த 'Program' என்ன?" என்று கேட்டார். "அய்யா, அடுத்து திருச்சி யில் நடைபெற உள்ள தாத்தாச்சாரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்ற இருக்கின்றீர்களே அந்த நிகழ்வு" என்றேன்.
"அப்படியே நீ என்னோடு வேனில் வந்துவிடு" என்றார். உடன் அம்மா மோகனா இருந்தார். அந்த இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மறக்கவே முடியாது.
தலைவர் - தொண்டர் என்பதைத் தாண்டி எத்தனையோ வரலாற்று நிகழ்வு களை அய்யா ஆசிரியர் என்னிடம் சொன் னார். "அம்மா மணியம்மை, இந்த இடத்தில் தான் நான் உரையாற்றினேன். சிறுவயதில், வைதீகம் நிறைந்த ஊர், என் மீது சாம்பலை அள்ளி வீசி சாபம் கொடுத்தனர்" என்று பழைய நிகழ்வு ஒன்றினை அவருக்கே உரிய அந்தக் குழந்தைச் சிரிப்போடு சொன்னார்.
- செல்வி பா.மணியம்மை, வழக்கறிஞர்
மாநில செயலாளர்,
திராவிட மகளிர் பாசறை
No comments:
Post a Comment