மதவெறி ஜாதி வெறிக்கு எதிராக உறுதிமொழி முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 7, 2020

மதவெறி ஜாதி வெறிக்கு எதிராக உறுதிமொழி முழக்கம்


சென்னை, டிச. 7- தமிழ்நாடு ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் சார்பில் அண்ணல் அம்பேத் கர் நினைவு நாளில் தமிழகம் தழுவிய அளவில் மதவெறி ஜாதி வெறிக்கு எதிராக மக்கள் ஒற்றுமை உறுதி மொழி ஏற்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.


சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச் சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு தலைமை வகித்தார்.


அமைப்பின் பொதுச் செயலா ளர் மு.வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தோழர் திருமலை (AIYF), வழக்குரைஞர் கயல்விழி, குடந்தை அரசன் (விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), நெல்லை முபாரக் (மாநில தலைவர் SDPI), தோழர் மஞ்சுளா (NFIW), பெருமாள் ஆண்டியப்பன் (மே 17), பி.சுந்தரம் (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி), தோழர் கீதா, செல்வப் பெருந்தகை (தலைவர், காங்கிரஸ் தாழ்த்தப்பட் டோர் பிரிவு), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் முதலி யோர் கருத்துரையாற்றினர்.


தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் மு.வீரபாண் டியன் உறுதி மொழி முழக்கங்களை எடுத்துச் சொல்ல அனைவரும் அதனை தொடுத்து முழக்கமிட்ட னர்.


முழக்கங்கள்  உறுதிமொழி ஏற்பு


* இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்!


* இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் காப்போம்!


* ஜாதிய வன்கொடுமைகளை எதிர்ப்போம்!


* மதவெறியை எதிர்ப்போம்!


* சமூக நல்லிணக்கம் காப்போம்!


* நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பன்முகத் தன்மைகளையும் பேணிக் காப் போம்!


* அம்பேத்கரின் சம தர்ம லட்சியங்களை முன்னெடுப்போம்!


மேற்கண்ட முழக்கங்களை முழங்கினர்.


No comments:

Post a Comment